உள்பக்கம் செங்கல் வெளிப்பக்கம் கருங்கல்

Agriwiki.in- Learn Share Collaborate

composite_wall
சுவரின்_உள்பக்கம்_செங்கல்
வெளிப்பக்கம்_கருங்கல்

லாரிபேக்கரின் கட்டிட முறைகளையும் அவருடைய சிந்தனையையும் சொல்லி கொண்டே இருந்தாலும் அது நிச்சயம் முடியாத,தீராத ஒன்று…

அவருடைய சுவர் கட்டுமான அமைப்பில் முக்கிய பங்கு இந்த காம்போசிட் சுவருக்கு உண்டு.பல கட்டிட சுவர்களை பேக்கர் இம்முறையில் கட்டி உள்ளார்.

இம்முறையில்,

நீங்கள் படத்தில் பார்த்து கொண்டிருப்பது போல சுவரின் வெளிபுரமனது கருங்கல்ழலும் உள் பக்கமனது செங்கல்லாலும் கட்டபடுகிறது.
கருங்கல்லானது செங்கல்லைவிட விலை குறைவுதான்.மற்றும் இதற்கு பூச்சு மற்றும் Pointing-கூட செய்ய வேண்டிய தேவை இல்லை.உள் பக்கம் மட்டும் Pointing செய்தால் போதுமானது.உள் பக்கம் செங்கல் வைக்க வேண்டிய காரணம் என்னவெனில் Wiring மற்றும் Plumbing செய்ய ஏதுவாக இருக்கும்.மற்றும் கருங்களுக்கு வெப்பத்தை கடத்தும் தன்மை இருப்பதால் செங்கல் வைப்பதால் அது தடுக்கப்படுகிறது.மற்றும் இந்த Composite wall ஆனது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.மேலும் கடற்கரை ஓரங்களில் கட்டப்படும் விடுகள் உப்பினால் அரிக்கபடுவதிளிருந்து பாதுகாக்க இந்த வகையான சுவர்கள் பயன்படுதபடுகின்றது.
சுவரின் அகலம் 1.5 அடி.
சாதாரண ரப்பு கல்லால் சுவர் கட்டப்படுவதால் சிமெண்ட் கரைத்து விடப்படுவது இல்லை.முழுக்க சிறு கற்களை கொண்டே பேக்கிங் செய்யப்படுகிறது.

நன்றி…
உங்கள் ஹரி…