மற்றுமொரு அற்புத பாரம்பரிய படைப்பு

Agriwiki.in- Learn Share Collaborate

மற்றுமொரு_அற்புத_பாரம்பரிய_படைப்பு

என்னுடைய தேடுதலுக்கும்,அதற்கான முன்னெடுப்புகளுக்கும் நண்பர்களின் ஆதரவும்,துணையும் அபரிவிதமானது.தினம் தினம் உங்களுடைய ஆதரவு என்னை வியக்க வைக்கிறது.அழைப்புகள்,சந்திப்புகள் அதிகமாகி இருக்கிறது.
மிக்க நன்றிகள்🙏🙏🙏

நாம் வீடு கட்டும்போது முதலில் அந்த இடத்தின் லண்ட்ஸ்கேப் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நில அமைப்பையும் ,இயற்க்கை அமைப்பையும் சிதைத்து அதாவது மரங்களை வெட்டி ,பாறைகளை உடைத்து,நிலத்தை சமப்படுத்தி பின்னரே வீடு கட்ட முனைகிறோம்.இது முற்றிலும் தவறு.

(((அந்த அமைப்பு இயற்கையால் ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கே அமைக்கப்பட்டு இருக்கிறது.மற்றும் இது கூடுதல் செலவு)))

இயற்க்கை நமக்கு அளித்த அந்த நிலஅமைப்பை சிதைக்காமல் வீடு காட்டுவதே அல்லது அதற்கான கட்டிட வடிவமைப்பை செய்வதே மரபு அல்லது பாரம்பரிய வீடுகளுக்கான முதல் படி.

இதன் தொடக்கம் வடிவமைப்பில் இருந்தே தொடங்குகிறது.

படத்தில் காட்டியுள்ள வீடு Desh Swarna அவர்கள் தான் பார்வையிட்ட வீட்டை என்னிடம் பகிந்து இதனை என் பக்கத்தில் பதிவிடும்படி கேட்டு கொண்டார்.மிக்க நன்றிகள் அவருக்கு.

இந்த வீட்டின் சிறப்பு அம்சங்களை பாருங்கள் வீட்டின் நடு பகுதியில் உள்ள மரத்தை அப்படியே விட்டு கட்டிடம் வடிவமைத்து உள்ளனர்.மனிதனையே நாம் வீட்டுக்குள் விடுவதில்லை.இங்கே மரங்கள்🙏🙏

பூசாத கருங்கல் சுவர்கள்,

பூசாத செங்கல் சுவர்கள்,

உடலை கெடுக்கும் டைல்ஸ் இல்லை ,விஷ பெயிண்ட் இல்லை.


படிக்கட்டுகளில் கைப்பிடிகள் இரும்புக்கு பதிலாக மூங்கில்கள்.

கான்கிரீட் கூரைக்கு பதிலாக ((mangalore tiles))மண் ஓடு கூரைகள்

வீட்டை சுற்றி பசுமை,மற்றும் சிறிய குளம்,

அதிகம் மெனக்கக்கெடாத எளிமையான ஆனால் பெரிய பெரிய கதவு ஜன்னல்கள்….

என்று இதன் இயற்க்கை அழகை வர்ணிக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை…

கடைசியாக ஆனால் உண்மையாக இந்த வீட்டை கட்டிய பொறியாளரின் உழைப்பு,ரசனைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

பாருங்கள்,பகிருங்கள்….😊😊😊

நன்றி
என்றும் உங்கள் ஹரி👍👍