வடகிழக்கு பருவமழை

Agriwiki.in- Learn Share Collaborate

*வடகிழக்கு பருவமழை* தமிழகத்தில் முறையான அளவு,தேவையான அளவு எந்த பகுதியிலும் பெய்யாத நிலை உள்ளது.
எந்த ஒரு மாவட்டத்திலும் முழுமையான பரப்பளவிற்கு பொதுவான மழை கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் பொதுவான அல்லது அதிகமான ஆழத்தைப் பொறுத்த வரையில் 8 உழவு மழை எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தூரல், சாரல் மற்றும் அவ்வப்போது பெய்த மழை என அனைத்தையும் கூட்டினால் கூட 2 – 2.5 உழவு மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் குளங்கள், கண்மாய்கள்,ஏரிகள் முழுக் கொள்ளளவுக்கு நிறையாமலும் அடுத்த கோடைக்குத் தேவையான நிலத்தடிநீர் மட்டத்தை செறிவூட்டும் வகையிலும் இல்லை.
பொலபொல என நீண்டு பெய்த சாரல் அதிகமழை உணர்வைக் கொடுத்தாலும் தமிழகத்தின் நிலத் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை.

எனவே மழை முடிந்த இந்த சூழலில் விவசாயிகள் புதிய போர் போட்டு பணத்தை விரயமாக்காமல் *நீர் சிக்கனத்தைத்* தாரக மந்திரமாகக் கொண்டு கீழ்கண்ட ஆலோசனைகளைக் கடைபிடிக்கலாம்.

1. நெல், கரும்பு, வாழை, மஞ்சள் பயிரிடுவதைத் தவிர்க்கலாம். அல்லது சாகுபடி பரப்பைக் 4கில் 1 அளவாகக் குறைக்கலாம்.
2 .அனைத்து பயிர்களுக்கும் அரசின் மானியத்துடன் கூடிய *சொட்டுவான்களுடன்* கூடிய சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கலாம்.
3. *மூடாக்கு அமைப்பது* அனைத்து வகைப் பயிறுகளிலும் வயல்களிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
4. வயல்வரை வாய்க்கால்வழி பாய்ச்சுவதைத் தவிர்த்து *பைப்களின் வழி* கொண்டு செல்லும் வகையில் உடன் அமைக்க வேண்டும்.
5. *தொட்டிகள் கட்டி அல்லது சின்டெக்ஸ் போன்ற PVC தொட்டிகளில்* கிணறு,போரிலிருந்து கிடைக்கும் சிறிதளவு நீரைக் கூட சேகரித்து பாசனதத்தை அளவாக முறையாகத் தேவையான அளவில் செய்ய வேண்டும்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்.