அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்

அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்
Agriwiki.in- Learn Share Collaborate
அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்:

கலை நயம் மிகுந்த சைஸ் கல்லை டிரெஸ்ஸிங் செய்து கலவை தெரியாமல் சந்துகள் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வருகிறது.

 

இன்று ஒரு முன்னாள் அமைச்சருடைய பண்ணை வீட்டை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததது.விட்டின் அளவு ஏறக்குறைய 1௦௦௦௦ சதுர அடி இருக்கும். அமைச்சர் பெயர் வேண்டாம்.
இந்த வீடு கடந்த 5 வருடங்களாக கட்டப்பட்டு வருகிறது. சரி வீட்ட விடுங்க…

இதனுடைய சுற்று சுவர் பற்றிதான் நாம் இப்போ பேச போகிறோம். அருமையான சுற்று சுவர். வீட்டை விட எனக்கு சுற்றுசுவர் மிக அழகாக தெரிந்தது. கலை நயம் மிகுந்ததாக இருந்தது.

நல்லதை வீட்டுக்கு வெளியவும் கெட்டதை வீட்டுக்கு உள்ளேயும் வைப்பது நமக்கு ஒன்னும் புதிது இல்லையே..அதுல மினிஸ்டர் என்ன சாதாரண மக்கள் எல்லாமே இந்த விசயத்துல ஒண்ணுதான்.

சைஸ் கல்லை டிரெஸ்ஸிங் செய்து கலவை தெரியாமல் சந்துகள் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வருகிறது.ஏறக்குறைய 3௦௦ M சுற்றளவு வரும்.
கடந்த ஒரு வருடமாக கட்டட்டு வருகிதாம்.


பார்ப்பதற்கு க்ரானைட் ஒட்டப்பட்டது போலவே அழகாக தெரிகிறது. நாமும் இதை மண்ணை கொண்டே கட்டி எங்காவது பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. கல் வேலை செய்து கொண்டிருத்த மேஸ்திரியை பாராட்டி தொலைபேசி எண்ணை வாங்கி வந்தேன். இது போல கல் வேலை செய்பவர்கள் அழிந்து விட கூடாது. இவர்களை போன்றோருக்காகவாவது வீடு கட்டுபவர்கள் கருங்கல்லை பயன்படுத்த வேண்டும் என்பது என் ஆசை…

இந்த வீட்டை முழுவதும் கட்டி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து கொண்டே வீடு திரும்பினேன்…

நான் ரசித்ததை என்னுடைய சோனி புகைப்பட கருவி வழியாக உங்களுக்கும்…

நன்றி…..ஹரி