ஆடுகளை வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

ஆடுகளை வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
Agriwiki.in- Learn Share Collaborate
ஆடுகளை வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :

 

# ஆடுகளை சந்தையில் வாங்காமல், பண்ணைகளில் வாங்குவது மிகச்சிறந்ததது. ஏனெனில் ஆடுகளுக்கு பண்ணைகளில் முழுக்க நோய் தடுப்புமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும், இவ்வாறு வளர்க்கப்படும் ஆடுகளை தேர்வு செய்யும்போது அவை நம் சூழ்நிலையை சீக்கிரமே ஏற்றுக்கொள்ளும்.

இதனால் ஆடுகள் சோர்ந்து போதல், தீவனம் எடுக்காத மந்தநிலை, நோய் பாதிப்புக்கு உள்ளாகுதல், தெள்ளுபூச்சி, பேன், ஒட்டுண்ணி, குடற்புழுக்கள் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் மிக ஆரோக்கியமாக நம் இடத்தில் இருக்கும் .

#ஆடுகளின் தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கவேண்டும். கண்கள் சுறுசுறுப்புடன் அகன்ற ஒளியுடன் இருக்கவேண்டும். இவ்விரண்டு காரணிகளும் ஆட்டின் சிறந்த உடல்நலத்தை காட்டும் .

# பெட்டை ஆடுகளுக்கு முதுகுபுறமும், இடுப்பெலும்பு பகுதியும் அகன்று விரிந்து இருக்கவேண்டும்.

அகன்ற முதுகுபுறமும், விலா எலும்புகளும் அதிக தீவனம் உட்கொள்ளும் திறனை காட்டும்.
அகன்ற பின்புறம் சிறந்த இனப்பெருக்க பண்புகளுக்கு அறிகுறி.

# கிடாக்களை தேர்வு செய்யும்போது,
நிமிர்ந்த அகன்ற மார்புபகுதியும், உறுதியான கால்களை கொண்டவைகளாக இருத்தல் மிகவும் நன்று.