இயற்கை களைக்கொல்லி

Agriwiki.in- Learn Share Collaborate
இயற்கை களைக்கொல்லி

இயற்கை களைக்கொல்லி மாட்டுகோமியம் கல்உப்பு -..ஒரு குடத்துக்கு (பத்து லிட்டருக்கு) 3 கிலோ கல் உப்பை கலந்து தெளிக்க எல்லா களையும் கருகிவிடும்

ஒரு கட்டத்துக்கு மேல வாழை காட்டுக்குள் சின்ன வண்டியைவிட்டு களைகளை ஓட்ட முடியாது..

காரணம் வாழையின் சல்லி வேர் அறுந்து போகும்..

வெயில்காலம் என்பதால் வேர் அறுந்து மறுடியும் அந்த வாழை பழைய நிலைக்கு வர ஒரு மாசத்துக்கு மேல ஆகிடும்..

உள்ளே தென்னை நட்டு இருக்கோம்..
அடுத்த வாரம் முள்சீத்தா நடனும்..

சரி என்ன செய்யலாம்னு யோசிச்ச போது மாட்டு கோமியம் இருநூறு லிட்டர் இருப்பு இருந்தது..

ஒரு குடத்துக்கு (பத்து லிட்டருக்கு) 3 கிலோ கல் உப்பை கலந்து தெளிச்சேன்..

மூன்றே நாளில் பார்த்தீனியா உட்பட எல்லா களையும் கருகி போச்சு..

நேற்று தோட்டத்துக்கு வந்தவர்
“என்னங்க ரௌண்டப்பா தெளிச்சு இருக்கீங்க”னு கேட்க,

இல்லங்க மாட்டு கோமியம்
கல் உப்புனு கலந்து அஞ்சு வருடத்துக்கு முன்பே சோதிச்சு பார்த்து நல்ல பலன்னு விரிவா சொன்னதுக்கு

அவருக்கு
நம்பிக்கையே வரல..!

யாருங்க கோமியத்தை பிடிச்சு
அதை கல் உப்போடு கலந்து
தெளிக்கிறது..
முன்னூத்து அம்பது ரூபாய் கொடுத்தா ஒரு லிட்டர் கிடைக்குது.
நூறு மில்லி ஊற்றி தெளிச்சா காய போகுதுனு
“அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்னு” வடிவேல் நகைச்சுவை கணக்கா ஒத்த வார்த்தையில் சொல்லீட்டு போயிட்டார்..!!

சரி அவர்களுக்கு வகுப்பு எடுப்பது
நம்ம வேலையும் இல்ல,
முறையும் இல்ல..

இயற்கை களைக்கொல்லி மாட்டுகோமியம் கல்உப்பு

ஒருமாதம் ஆன கோமியத்துடன்
மூன்று கிலோ கல் உப்பு கலந்து
களைமீது தெளிச்சு பாருங்க
நா சொன்னது உண்மையா
இல்லையானு உங்களுக்கே தெரியும்..

வாழை,கரும்பு,தென்னை,பழ மர தோட்டங்களுக்கு நல்லா பலன் தருது இந்த இயற்கை களைக்கொள்ளி..

மற்ற பயிருக்கும் தெளிக்கலாம்
ஆனால் பயிரில் பட்டால் பயிர் கருக வாய்ப்பு இருக்கு அதனால தவிர்த்திடுங்க..

கல் உப்பு மண்ணை மலடாக்காதா என்ற சந்தேகம் வரும்..

கட்டாயம் பாதிப்பு வரும்.
ஒரே இடத்தில் உப்பை கொட்டும் போது..

ஆனா நம்ம இதை களைச்செடி மீது
தெளிக்கிறோம்..

அதனால பாதிப்பு எல்லாம் ஒன்னுமே இல்லைங்க..
இதை என் ஆறு வருட அனுபவத்தில் சொல்கிறேன்..

இயற்கை களைக்கொல்லி பயன்கள் 

தென்னந்தோப்பா இருந்தா
குரும்பை உதிர்வதில்லை,
காய் எண்ணிக்கையும் கூடுதுங்க..

சரி இந்த விசயத்தை பகிர்ந்தா எனக்கு என்ன கிடைக்க போகுதுனு நினைக்குறீங்களா ..

கொங்கு மண்டல விவசாயிக மட்டும்தான்யா புதுசை எதையாவதை தேடி ஓடிக்கிட்டே இருப்பான்..
அப்படி ஏதாவது கண்டுபிடிச்சுச்டானா
உடனே அடுத்தவனுக்கும் கடத்திடுவான்
இதுதான் இவர்களோட சிறப்பே”னு
ஒரு பேட்டியில் சொன்னது வேறு
யாரும் இல்லைங்க
நம்மாழ்வார் ஐயாதான்..

நம்ம வேலையும்
“கைமாற்றி” விடுவது மட்டுமே..