இயற்கை ஷாம்பு குமுளம் பழம்

இயற்கை ஷாம்பு குமுளம் பழம்
Agriwiki.in- Learn Share Collaborate

இயற்கை ஷாம்பு….
……. ……. ……. ……. …..
சுமார் கால் நூற்றண்டுக்குமுன்
இப்போதுபோல் ஷாம்புகள் கண்டிராத எங்கள் கிராமம்.

வீட்டில், எண்ணெய் குளியலுக்கு இலுப்பை புண்ணாக்கை(அரப்பு) நீரில் ஊறவைத்து, அரைத்து, சிறு உருண்டையாக கொட்டங்கச்சியில் வைத்து, தலைக்கு தேய்க்க தருவார்கள்.

அரப்பு,
சரியான கசப்பும் கண்ணில் பட்டால் பயங்கர எரிச்சலையும் தரக்கூடியது.

அதற்கு பயந்து தலைகுளிக்க நாங்கள் தேர்ந்தெடுப்பது
“குமுளம் பழம்” . மஞ்சள் நிறத்தில்
நாவல்பழம் அளவில் காட்டில் கிடைக்கக்கூடியது.

சிலபழங்களை எடுத்து, நன்றாக கசக்கி, சாறை தலைக்கு தேய்த்தால் கறுமை நிறத்தில் அழுக்கு வெளியேறி தலை பஞ்சு பஞ்சாகிவிடும்.

இன்று பேராசிரியர் ஒருவரின் விவசாய ஆலோசனைக்காக வண்டலூர் அருகே உள்ள ‘ரத்தினமங்களம்’ கிராமத்துக்கு சென்றபோது அங்கு இச்செடிகளை பார்க்க முடிந்தது. பழங்களும் கிடைத்தது.

பழங்களை சேகரித்தபோது, “இப்பழம் தலையில் உள்ள பொடுகை போக்கக்கூடியது”. என கூடுதல் தகவல் தந்தார், உடன் வந்த அந்திமழை மாதஇதழின் ஆசிரியர் அசோகன். கைவசம் விதைகள் கிடைத்துவிட்டது. இனி இயற்கை ஷாம்பு செடிகளை உற்பத்தி செய்யவேண்டியதுதான்.

இயற்கை இனிது….
வானவன்.