இரண்டரை கோடி ஆண்டுகளாக எறும்புகள் விவசாயம் செய்கின்றன

இரண்டரை கோடி ஆண்டுகளாக எறும்புகள் விவசாயம் செய்கின்றன
Agriwiki.in- Learn Share Collaborate

இரண்டரை கோடி ஆண்டுகளாக எறும்புகள் விவசாயம் செய்கின்றன என்றால் நம்ப முடிகிறதா..

எறும்புகள் இலைதழைகளை தங்கள் காலனிக்குள் எடுத்து செல்வதை கண்டிருப்போம். அந்த இலைதழைகளை உள்ளே கொண்டு சென்று அங்கே அவர்கள் வளர்க்கும் பூஞ்சான்களுக்கு உணவளிக்கும். பூஞ்சான்கள் அவற்றை மட்கவைத்து உண்டபின் ஒருவிதமான இனிப்பை சுரக்கும். எறும்புகள் அவற்றை உணவாக கொள்ளும். திட உணவுகளை எறும்புகள் உண்ணாது என்பது கூடுதல் தகவல். இந்த பூஞ்சான்கள் தான் இந்த எறும்புகளின் உணவிற்கான வித்துக்கள்..இந்த வித்துகளை பாதுகாப்பது மிக முக்கிய வேலைகளுள் ஒன்று. இரண்டரை கோடி ஆண்டுகளாக இந்த வித்துக்களை பாதுகாத்து வருகின்றனவாம். ஒரு காலனி இடம்பெயரும்போது இந்த வித்துகளை பாதுகாப்பாக இடம் மாற்றம் செய்திடுமாம்.. இயற்கையுடன் இயைந்து வாழும் இவ்வுயிர்கள் நமக்கு எவ்வளவு பெரிய பாடம் கற்றுக்கொடுக்கின்றன பாருங்கள்… நாம் உண்ணும் உணவிற்கான வித்துகளை நாம் பாதுகிக்கின்றோமா என யோசியுங்கள்.. ஆதாரத்தை பாதுகாக்காவிட்டால் அனைத்தையும் இழப்போம் விரைவில்..

Aadhiyagai Paramez