கால்காணி சாத்தியமே-உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம்

கால்காணி சாத்தியமே-உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம் plenty-for-all
Agriwiki.in- Learn Share Collaborate
ஒரு குடும்பத்தின் உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம் என ஜே.சி.குமரப்பா கூறியுள்ளார். சாத்தியமா?

 

என நண்பர்களிடம் பல குழுக்கள் மற்றும் முகநூல் வாயிலாக கேட்டேன் அதன் மூலமாக பல தகவல்கள் கிடைத்தன… சில தகவல்களை பகிர்கிறேன்…

1) சாத்தியம். 1 சென்ட் 436 அடி 33 சென்ட் x 436 அடி = 14,388.00 அடி. 1/3rd of an acre.

5 அடுக்கு முறையில் 36 x 36 அடி = 1296.00 அடி.

இதில் 81 மரம் நடலாம். ஊடு பயிராக காய், பருப்பு, சிறுதானியம் பயிர் செய்யலாம்.

இது போல் 11 அடுக்கு வரும்.
இதில் நடை பாதை கழித்து 8 அல்லது 9 அடுக்கு செய்யலாம்.

8 என்று கணக்கு எடுத்தாலும் 8 x 81 = 648 மரம் நடலாம்.

மரம் வளரும் வரை ஊடு பயிர்கள் பலன் கிடைக்கும்.
மரம் வளர வளர கொடி வகை பயிர்கள் பலன் கிடைக்கும்- நன்றி சுதாகர்.

2) கால்காணி சாத்தியமே… சிரிபாத தபோல்கர் அவர்களின் “Plenty for All” புத்தகம் இணையத்தில் PDF ஆக கிடைக்கிறது..படிக்கவும்.. பின்னர் நெல்லை மாவட்டத்தில் (ஊர் கடையமா கடையநல்லூரா என்று நினைவில்லை) திரு. Felix 33 செண்ட் நிலத்தில் வீட்டிற்கு தேவையான பொருள்களை உற்பத்தி செய்கிறார் பழங்கள், கீரைகள், காய்கறிகள், மூலிகை, மாடு, ஆடு, கோழி, மீன், சாண எரிவாயுக் கலன் எல்லாமே… – நன்றி விக்னேஷ்.

3) குமரப்பா இப்படி சொன்னாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஸ்ரீபாத தபோல்கர் அவர்கள் உறுதிபட கூறுகிறார், சோதனைகளுக்குப் பிறகு, பத்து குன்தா நிலத்தில் 4-5 பேர் உள்ள குடும்பத்தினரின் உணவு, எரிபொருள், உடைக்கான பருத்தி, கால்நடைகளுக்கான தீவனம், இல்லம் உருவாக்கலாம் எனவும், வண்டிச் சாலை உள்ளிட்டவைகளையும் அமைத்துத் கொள்ளலாம் என்கிறார்.

பத்து குன்தா என்றால் ஏறத்தாழ 22 செண்ட். இதை முதலில் கால் ஏக்கர் (Quarter acre farming) பண்ணையம் என்றோம். சொல்லுவதற்கு எளிதாக இல்லை, புரிதலுக்கும் எளிதாக இல்லை என்பதால் இதைக் கால் காணி என்றோம், பாரதியின் காணி நிலத்தை மனதில் கொண்டு)
ஆக கால் காணியில் (ஏறத்தாழ 33 செண்ட்) ஒன்னரை குடும்பத்திற்கானதை உருவாக்கலாம்.
தபோல்கரின் 22 சென்ட் ல் தேவையானதை உருவாக்க சுமார் 500-700 லிட்டர் தண்ணீர்/தினசரி போதும் என்றார்.

இதை எவரும் முழு முயற்சியில் இறங்கவில்லை என்பது சோகமே.

இப்போதும் மோசமொன்றும் இல்லை முழுயற்சியாக சிலரேனும் முயற்சிக்கலாம் – நன்றி இராமசாமி செல்வம்.

காணொலி:

1) https://youtu.beNCmTJkZy0rM

4000 சதுர அடியில் ஒரு குடும்பத்திற்கு தேவையான உணவு முறை விவசாயம்

2) https://youtu.be/3gYZLQl-ggI

3) https://youtu.be/f2FxJimob84