குதிரைவாலி பயிர்

குதிரைவாலி பயிர்
Agriwiki.in- Learn Share Collaborate

குதிரைவாலி பயிர் :
கடும் வறட்சியிலும், தொடர் மழையிலும் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் குதிரைவாலி பயிர்: விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி

தொடர் வறட்சியால் பாதிக்கப் பட்ட விருதுநகர் மாவட்ட விவ சாயிகளுக்குக் கனமழையிலும் உதவி வருகிறது குதிரைவாலி பயிர் சாகுபடி.

இப்பயிர் வறட்சி மற்றும் மண் உவர்ப்பு தன்மைகளைத் தாங்கி வளரக்கூடியது. மிகக் குறைந்த நீரே சாகுபடிக்கு போது மானது.

இறவையாக சித்திரை, ஆடி, மார்கழி பட்டங்களிலும் மானாவாரியாக ஆடி, புரட்டாசிப் பட்டங்களிலும் குதிரைவாலி பயிரிடப்படுகிறது.

அனைத்து வகையான நிலங்களிலும் இதைப் பயிரிடலாம் என்றாலும் செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தவை.

கோடை உழவினால் மண் அரி மானம் தடுக்கப்படுவதுடன் மழை நீரும் சேகரிக்கப்படுகிறது. இதனால் களை மற்றும் பூச்சி தாக்குதலும் குறைகிறது.

இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது, சுவை யானது. இதன் அரிசியைச் சமைத்து உணவாகவும் உண்ணலாம் அல் லது அரைத்து மாவாக்கி ரொட்டியும் தயாரிக்கலாம்.

குதிரைவாலியில் மற்ற குறுதானியங்களில் உள்ள தைப் போன்றே அதிக உணவுச் சத்துக்கள் உள்ளன. 100 கிராம் குதிரைவாலி தானியத்தில் 6.2 கிராம் புரதம், 65.5 கிராம் மாவுச்சத்து, 2.2 கிராம் கொழுப்புச்சத்து, 9.8 கிராம் நார்ச்சத்து, 4.4 கிராம் தாதுக்கள், 11 மி.கிராம் சுண்ணாம்புச் சத்து, 280 மி.கிராம் பாஸ்பரஸ் மற்றும் 15 கிராம் இரும்புச்சத்துகளும் உள்ளன.

குதிரைவாலி தானியத்தில் இருந்து சாதம், இட்லி, தோசை, உப்புமா, கூழ், பக்கோடா, முறுக்கு மற்றும் சீடை போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

கால்நடைகள் மற்றும் பறவைகளுக் கும் இந்த தானியம் சிறந்த தீவன மாகவும் பயன்படுத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குதிரைவாலி பயிரிடப்பட்டுள்ளது. கடும் வெயி லைத் தொடர்ந்து, தொடர்மழையை யும் தாங்கி அறுவடைக்கு தயாராக வளர்ந்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வேளாண் உதவி இயக்குர் முருகவேல், வேளாண் அலுவலர் முத்தையா ஆகியோர் கூறியதாவது:
குதிரை வாலி மற்றும் பிற குறுதானியங் களில் உள்ள உணவு சத்துக்கள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி மக்களுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளதால் எதிர் காலத்தில் இவற்றின் தேவை அதிகரிக்கும். விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் செலவு செய்தால் நிகர லாபமாக ரூ.11 ஆயிரம் கிடைக்கும்.

விருதுநகர் மாவட்டத்தில் 2014-15ம் ஆண்டுக்கு நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்துடன் குதிரை வாலி விதைகள் கோவையிலுள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்டு, வத்திராயிருப்பு வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 30 ஏக்கர் அளவில் விதைப் பண்ணை அமைக்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 2 ஆயிரம் ஏக்கராக குதிரைவாலி சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.

வறட்சியைத் தொடர்ந்து, தொடர் மழையையும் தாக்குப்பிடித்து குதிரைவாலி நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. குதிரைவாலி சாகுபடியில் விவசாயிகளும் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். அடுத்த ஆண்டில் சாகுபடி பரப்பளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் கூறினர்.