செம்மரம் சந்தன மரம் அகர் மரம் வளர்ப்பு

Agriwiki.in- Learn Share Collaborate

செம்மரம் சந்தன மரம் அகர் மரம் வளர்ப்பு

சந்தன மரம் , அகர் மரம் வளர்ப்பு.( மலை காட்டு வளர்ப்பு ), ஈட்டி மரம் , செம்மரம் வளர்ப்பு

விலை உயர்ந்த மரங்கள் வளர்க்க விழிப்புணர்வு விளம்பரங்கள் தர அரசுக்கு பரிசீலிப்பது யார் ??

என்னை கேட்டால் நாட்டு மக்களுக்கும் நல்ல வருமானம் , இயற்க்கை காற்று அதிகரிக்க , மண் வளம் காக்க, தொடர் மழை பொழிய தொலைநோக்கு பார்வையில் வெப்பம் குறைய விலை உயர்ந்த மரங்கள் வளர்ப்பே சிறந்தது – சந்தன மரம் , செம்மரம், அகர் மரம் வளர்ப்பு.( மலை காட்டு வளர்ப்பு ), ஈட்டி மரம் , …

புஞ்சை நிலங்களில் இவ்வகை மரம் வளர்க்க வழிகாட்டுதல் , சந்தை படுத்துதல் ,சட்ட வழிமுறைகள் , பாதுகாப்புகளை தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க செய்தால் என்றும் சிறப்புதான்

செம்மரம் வளர்ப்பு;

செம்மரம் வளர்ப்பு; ( வேளாண் காடு வளர்ப்பு….);

சந்தன மரத்திற்கு அடுத்த படியாக விலைபோகக் கூடிய மரமாகும்,

1. செம்மண், செம்மண்ணில் கல் கலந்த காடு (GRAVE SOIL)… போன்ற இடங்களில் சிறப்பாக வளரும்.
2. மேட்டுப்பாங்கான நிலங்களில் சிறப்பாக வளரும், உதாரணமாக: வறண்ட வனப் பகுதிகளைக் கூறலாம்.
3. மேட்டுப்பாங்கான இடங்களில் மழைநீர் சிறப்பான முறையில் அறுவடை செய்தல் அவசியம். உதாரணமாக: உயரமான வரப்புகள் அமைத்துக் கொள்ளுதல், குறிப்பாக ஒவ்வொரு மரத்திற்கும் இவை செயல் முறைபடுத்திட வேண்டும். மழை நீரை முழுமையாக அறுவடை செய்திட வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

நடவு செய்தல் மற்றும் பாதுகாப்பு
1. பருவ மாதத்தில் முதல் மழைக்கு முன்பாக சுமார் 3 அடி குழி எடுத்துக் கொண்டு, இரண்டாவது மழைக்கு முன்பாக நடவு செய்திட வேண்டும். இதற்கு உயிர் நீர் அவசியம் (மழை கிடைக்காத போது), இரண்டு மாதம் வரை பராமரிப்பு செய்தல் வேண்டும் (மண்ணில் ஈரப்பதம் இருக்கும் அளவு பார்த்துக் கொண்டால் போதுமானதாகும்).
2. 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் ஒரு நாற்று நடவு செய்யலாம். சுமார் 400 நாற்றுகள் 1 ஏக்கருக்கு தேவைப்படும்.
3. வேளாண் காடு வளர்ப்புச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
4. இடைவெளியில் வளரும் புற்களில் வெள்ளாடு, மாடு போன்றவைகளை மேய்க்க விடக்கூடாது. செம்மறி ஆடுகளை மேய்க்க விடலாம்.

பலன்கள்;
1. 20 – 25 வருடம் வரை வளர்க்க வேண்டும். சுமார் 20 வருட மரத்திற்கே மருத்துவ குணம் உருவாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2. 25வது வருடத்தில் – மரம் ஒன்று 100 கிலோ எடையில் இருக்கும். 1 கிலோ ரூ.1,000/- என்று கணக்கிட்டால் மரத்திற்கு ரூ.1,00,000/- பெறலாம்.
3. ஏக்கருக்கு 300 மரங்கள் அறுவடை என்று வைத்தால் கூட, 300X1,00,000 = 3,00,00,000/- . இதில் செலவுக் கணக்கு சேர்க்கப்பட வில்லை.

வறண்ட பகுதிகளில், தண்ணீர்ப் பராமரிப்பு, மின் இணைப்பு… போன்ற வசதிகள் ஏதுமின்றி இவ்வளவு வருமானம் வேறு எந்தப் பயிரிலும் நாம் பார்க்க இயலாது என்பது நிதர்சனம்.

பயன்கள்
செம்மரம் மருத்துவ குணம் வாய்ந்தவை. புற்றுநோய், நீரழிவு நோய், ஆயுர்வேதம்,மற்றும் உணவுப் பொருட்களில் நிறமியாக சேர்க்கப்படுகிறது (இயற்கை நிறமி).

மேலும், ஐரோப்பா போன்ற மேல்நாடுகளின் மதுபானத்தில் (WINE) இந்நிறமிகளைச் சேர்க்ககின்றனர், சீன நாட்டில் மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ATOMIC POWER PLANT COOLENT ஆக பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு செய்தி (அணு சக்தி மையம்), இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் பயன்படுத்தப்படுவதில்லை. இன்றளவும் உலகச் சந்தையில் அதிக விலை போவதால் தான் செம்மரக் கடத்தல் நடக்கிறது. தரிசு நிலங்களில் செம்மரங்களை வளர்த்தால் தங்கத்திற்கு இணையான வருமானம் பெறலாம்.

காப்புரிமை தொடர்பாகக் கூறிய போது, அமெரிக்க நாடு 47 காப்புரிமை பெற்றுள்ளதாகவும் மேலும், கொரியா, ஜப்பான், சீனா… போன்ற நாடுகளும் சில காப்புரிமை பெற்றுள்ளனர் என்றும் இந்திய நாடு 1 காப்புரிமையும் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மரமே இல்லாத நாடுகள் பல காப்புரிமை வாங்கியதும், சமீபத்தில் இந்திய நாடு 1 காப்புரிமை வாங்கியதும் நாம் அறிய வேண்டிய செய்தி.

ஏற்றுமதி செய்யக்கூடாது என்று இந்தியா தடைவிதித்துள்ளது. இயற்கை வளம், இது போன்றதொரு வாய்ப்பு மற்ற நாடுகளுக்குக் கிடைத்தால் ஏற்றுமதியை நன்கு பயன்படுத்திக் கொண்டு தனி மனிதனுக்கும், கிராமத்திற்கும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்றி விடுவார்கள் என்பது சமூக ஆர்வலரின் ஆதங்கமாக இருந்தது.

25வது வருடம், செம்மரத்தை வெட்டினால் மீண்டும் 20 வருடத்தில் அது வளர்ந்து பலன் தருவது இதன் கூடுதல் சிறப்பம்சம்.

இந்திய அரசு, சட்டங்களைத் தளர்த்தி, வனச் சட்டங்களை விவசாய நிலத்தில் திணிக்காமல் இதனை விவசாயிகள் வளர்க்க ஊக்கு விக்க வேண்டும். வன அலுவலர்கள் வனத்தைப் பாதுகாக்கட்டும், விவசாய நிலங்களில் வளரும் மரங்களை வேளாண்மைத் துறை கட்டுப்படுத்திட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன் வைத்தார்.

இதுவரை, செம்மரத்தின் சிறப்பு, பயன்… போன்றவைகளை அறிந்து கொண்டோம். ஆனால், செம்மரத்தை விடச் சிறப்பானதொரு மரம் உண்டு… ஆம், நமது வீட்டருகில் இருக்கும் வேப்பமரமே அத்தகைய சிறப்புடைய மரமாகும்.

, குமிழ் மரம், பீநாறி எனப்படும் பெருமரம் முக்கியமானது. அடுத்து மலைவேம்பு மரம்.

புளியன், புங்கன், வேம்பு, நாவல், வாகை, நிலவாகை, இயல்வாகை முதலியன மானாவாரியில் வளரக்கூடியவை. இந்த மரங்களை நட்டுக் கொஞ்சம் நாட்கள் காப்பாற்றி விட்டால் தண்ணீர் ஊற்றவே வேண்டியதில்லை. தானே வளர்ந்து கொள்ளும்.

கேள்வி : சந்தனம், செஞ்சந்தனம் முதலியன கொள்ளையர்களால் கடத்தப்படுபவை. இவற்றை அவர்களிடமிருந்து காப்பாற்ற என்ன வழி?

பதில் : மிகப்பெரிய பிரச்சனையே சந்தனமரங்களைக் காப்பாற்றுவதுதான். அது மிகவும் கடினம். இப்போது சந்தன மரம் வெட்டப்பட்டால், அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்றுதான் அரசும் கூறுகிறது. பாதுகாப்பில்லாத காரணத்தால்தான் சந்தன மரங்கள் அதிகமாகப் பயிரிடப்படுவதில்லை.

இப்போது சந்தன மரம் வளர்ப்போர் இரண்டடுக்குக் கம்பி வேலி அமைத்துத்தான் வளர்க்கிறார்கள். இரண்டு கம்பி வேலிகளுக்கிடையே 6 அடி இடைவெளி இருக்கும். இந்த இடைவெளியில் யாரும் நுழைய முடியாத மெல்சிபெரா என்னும் ஒருவகை முள்வேலி அமைக்கிறார்கள். இது வளர்ந்து விட்டால், யாரும் உள்ளே நுழைய முடியாது. அதற்குமேல் அவரவர் வசதிக்கேற்பச் சொந்தப் பொறுப்பில் பாதுகாப்புச் செய்துகொள்ள வேண்டியதுதான். அரசிடம் உரிமம் பெற்றுத் துப்பாக்கி வாங்கிக் கொள்ளலாம். அரசாங்கம் பாதுகாப்பளிக்காது.
( http://thamil.co.uk/?p=7227)

( மகத்தான லாபம் தரும் மரம் வளர்ப்பு
பேட்டி. இரா. வேணுகோபாலகிருஷ்ணன். https://www.facebook.com/1389927271220622/photos/pcb.1517378288475519/1517378251808856 )

மரங்கள் விலை – 1 டன்னுக்கு :

மலைவேம்பு : ரூ. 6500
குமிழ் : ரூ. 8500
பதிமுகம் : ரூ. 6000
பெருமரம் : ரூ. 6000
வெள்ளைக் கடம்பு : ரூ. 7000
மகோகனி : ரூ. 15 ஆயிரம்
வேங்கை : ரூ. 50 ஆயிரம்
செஞ்சந்தனம் : ரூ. 3 லட்சம்
சந்தனம் : ரூ. 60 லட்சம்
வெட்டுவதற்கு அரசு அனுமதி தேவையில்லாத மரங்கள்
வெள்ளைவேல், பெருமரம், வாகை, முந்திரி, வெள்ளைக்கடம்பு, பலா, வேம்பு, மூங்கில், இலவு, பனை, சபங்கு, கொன்றை, சவுக்கு, சிசு, கல்யாண முருங்கை, தைலமரம், குமிழ், ரப்பர், நீர்ப்பருத்தி, இலவம்பஞ்சு, சூபாபுல், இலுப்பை, மாமரம், மலைவேம்பு, மசவேம்பு, சந்தனவேம்பு, மஞ்சனத்தி, கொடுக்காப்புளி, புங்கன், மகோகனி, மகோகனி சிற்றினம், தூங்குமூஞ்சி, நாவல், புளி, சுவர்ணப்பட்டி, பூவரசு,

 

விலை உயர்ந்த இந்திய மரங்கள் , மர வகைகள் வளர்க்க மக்களுக்கு வழிகாட்டுவேன் :

சந்தன மரம் வளர்ப்பதற்கு வழங்குவது போலவே, அகர் மர வளர்ப்பிற்கும் மத்திய அரசு 75 சதவிகிதம் மானியத்தை ஆயுஷ் துறையின் மூலம் வழங்குகிறது. மேலும் மானியம் வழங்கும் வழிமுறைகள் பற்றி மற்ற துறைகளிலும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் வனதுர்கி அமைப்பு மலைவாழ் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் மருத்துவச் செலவு மற்றும் படிப்புச் செலவுகளைப் பார்த்து வருகிறது. இவர்களுக்கு மேலும் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.