தீடீர் தீடீரென செத்து விழும் நாட்டு கோழிகள் மருத்துவம் என்ன

குடற்புழு நீக்கத்தில் தவிர்க வேண்டியவை
Agriwiki.in- Learn Share Collaborate
தீடீர் தீடீரென செத்து விழும் நாட்டு கோழிகள் மருத்துவம் என்ன…?

அதிகாலை எழுந்தவுடன் கோழியை திறந்து விட்டால் கூட்டுக்குள்ளே இரண்டு கோழி செத்து கிடக்கும். பிள்ளையை போல ஆசை ஆசையாய் வளர்த்த கோழி சுருண்டு அட்டை காகிதம் போல் கிடக்கும் போது ஏற்படும் மன வலி எப்படி இருக்கும்ன்னு கோழி வளர்ப்பவர்களுக்கே தெரியும்.!

மழை ஆரம்பித்தால் போதும் அழையா விருந்தாளியாக வந்து விடுகிறது இந்த தொற்று நோய்…!

நாட்டுக்கோழியை தாக்கும் காரணம் என்ன…? கோழியை அக்கரையோடு கவனிக்காமல் கவனிக்காமல் போனதே காரணம்.

குறைந்தபட்சம் கோழி கூடுகளை 10 நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்யுங்கள்.

நாய். பூனை காகம் என விலங்குகள் செத்து கிடந்தால் அதன் கழிவு மாமிசத்தை தின்னாமல் பார்த்து கொண்டாலே போதும் பெரும்பாலான நோயில் இருந்து தவிர்க்கலாம். எந்த இல்லாமல் திறந்த வெளியில் வளர்க்க படும் கோழி மூலம் முதலில் நோய் பரவி காற்றின் மூலம் மற்ற கோழிகளுக்கு பரவுகிறது.

தற்போதைய உள்ள கோழி நோய் என்ன.?

1.இரை திண்னாது. இரை சேமிப்பு பகுதியில் காற்று போன்று நிறைந்திருக்கும்.

2 . தொடர்ந்து விகாரமான சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும்

3.வாயில் எச்சில் வடியும். வாயை திறந்து பார்த்தால் கோழையாக நிறைந்திருக்கும்.

4.தண்ணிர் மட்டுமே குடிக்கும் உணவை தொடாது.

5.சோர்வாக காணப்படும். தலையை முதுகுள் மடித்து வைத்து தூங்கும்.

தீர்வு என்ன…?

நோய் உண்டான கோழியை தனிமை படுத்துங்கள் இதனால் மற்ற கோழிகளை நோய் தாக்காது கொஞ்சம் கூட மற்ற கோழிக்கு தொடர்பில்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

மஞ்சள் .வெங்காயம். குப்பை மேனி துளசி எது அரைத்து கொடுத்து பார்த்தாலும் கேட்கவே கேட்காது. ஆக இந்த நோய் நாட்டு மருந்துக்கு கட்டுப்படாது.!

தடுப்பூசி போட்ட கோழிகளையும் சேர்த்து தாக்கும். மிக வீரியமான நோய்க்கு YouTube ல சொல்லப்பட்ட மருந்துகள் முன்னேற்பாடான மருந்துகளே.!

இந்த கோழை நோய்க்கு தீர்வான மருந்து இல்லை.

கோழிகளை காக்க 4 வகையான ஆங்கில மருந்து. 6 வகையான நாட்டு மருந்து கொடுத்து கடைசில எதுவும் கேட்கல.! (விஷ்கி .ரம்.எதுக்கும் கேட்காது)

கடைசில set ஆனது MOX -BD or cavmox (Amaxycllin and potassium clavulanate oral suspension IP228.5 mg ) இது பவுடர் வடிவில் கிடைக்கிறது.

நல்ல வெந்நீர் போட்டு ஆற வைத்து பாட்டில் மேல் பகுதியில் காணப்படும் Ring அளவு ஆற வைத்த தண்ணீரை விட்டு நல்ல குலுக்கினால் ஒரு கலவை (Liquid) உண்டாகும் .

அதை ஊசி போடு குழாயில் வைத்து 3 அல்லது நான்கு சொட்டுகள் வாயில் தினமும் காலை கோழியை திறக்கும் போது (ஒரு முறை மட்டும்) புகட்டுங்கள்.

முதல் நாளிலேயே தெளிவடைந்து விடும். தொடர்ந்து கொடுத்தால் ஒரு ஐந்து நாட்களில் பழைய நிலைக்கு திரும்பி விடும்.

தமிழ்நாடு முழுவதும் பரவிவரும் இந்த கொடிய நோயை தடுக்க முனைப்புடன் செயல் படுவோம். இந்த தகவலை கோழி வைத்திருக்கும் அருகில் இருக்கும் நண்பர்களுக்கு சொன்னால் பல்லாயிரக்கணக்கான கோழிகளின் உயிர்களை காக்கலாம்.! கோழியை காப்பாற்றா கடும் முயற்சிக்கு பிறகு வெற்றி பெற்ற நல்ல மருத்துவம்…

நன்றி : முகநூல் பதிவு