பனை மரங்களைப் பாதுகாப்போம்

Agriwiki.in- Learn Share Collaborate

*தென்ன மரத்த வச்சவன் தின்னுட்டு சாவான்… பன மரத்த வச்சவன் பாத்துட்டுதான் சாவான்… இது பழமொழி!*

ஒரு பனங்கொட்டை செடியாகி வளர்ந்து மரமாக 20வருடங்களுக்கு மேல் ஆகும். இன்று நாம் பார்க்கின்ற உயரமான மரங்களோட வயசு எழுபது எம்பது இருக்கும்.

இந்த மரம்தான் நமக்கு சுவடி எழுதவும் ,குடிசை போடவும், பதனி, நொங்கு, கிழங்குனு அடிமுதல் நுனிவரை நமக்கு பயன்பட்டுச்சு… இன்னிக்கு?

நமக்கு இதெல்லாம் தேவயில்லனு நினச்சு விட்டுட்டோம். அதனாலதான் *நூறு வயசு பனை மரத்த நூறு ரூபாய்க்கு* கேரளாவுக்கு வெட்டி ஏத்துறோம்.

நம்ம பாமர மக்ககிட்ட…. கண்மாய்லயும் கிணத்துலயும் நீர வத்தாம சேமிச்சு வைக்க இந்த பனை மரங்களோட வேர்தான் உறுதுணையா இருக்குதுனு படிச்சவனும் சொல்லல… அரசும் சொல்லல!

இதுல பனை மரம்தான் தமிழ்நாட்டோட தேசிய மரமாம்! *தமிழ்நாட்டோட தேசிய மலர் என்ன தெரியுமா… கூகிள்ல தேடிப் பாருஙக. அந்த பூ எதுனு நம்ம யாருக்கும் தெரியாது. ஏன் அந்த பூவ தேர்ந்தெடுத்தாங்க… தெரியாது. அந்த பூவோட நன்மை என்னனும் நமக்கு தெரியாது. ஏன்னா அத நாம பாதுகாக்கல.* இப்போ அந்த வரிசைல பனை மரமும் வரபோகுது.

பனங்கொட்டை விழுந்து சொந்தமா முளச்சு மரமாகும்னு இருந்தோம். ஆனா இப்போ *பனங்கொட்டயவும் பணக்கார முதலாளிமாருங்க, எரிச்சு கரண்டு தயாரிக்க, ஒரு டன் 2500 ரூபாய்னு வாங்குறான்.*

இலவசத்துல இடுப்பெழும்ப தொலச்ச நம்ம மக்க, இப்போ கைச்செலவுக்கு புளியம்பழம் விக்குற கதையா பனங்கொட்டய சேமிச்சு விக்குறாங்க!

இதெல்லாம் நமக்கு தெரிந்தும் நாம கண்டுக்க மாட்டோம். *இத படிச்சு முடிச்சுட்டு கட்டவிரல வச்சு மேல தள்ளிட்டு, அடுத்த செய்திக்கு போயிடுவோம்.*

ஆனா இத அப்படிலாம் விட்டுட முடியாது. நாம ஏதாவது செய்தாகனும்.

*தமிழக அரசே… அரசு அனுமதியின்றி பனை மரங்களை வெட்ட தடை விதினு ஒட்டுமொத்த தமிழனும் குரல் கொடுக்கனும்.*

இந்தியால இருக்குற 10கோடி பன மரத்துல, தமிழ்நாட்டுலதான் 5கோடி மரம் இருக்கு. கம்போடியால வியட்நாம்னு உலகத்துல எங்கேயெல்லாம் போய் நம்மாளு ஆட்சியாண்டானோ, அங்கேயெல்லாம் பன மரத்தயும் கொண்டு போயிருக்கான்.

இதோ பனம்பழம் விழும் காலமிது… இந்த நேரத்துல நம்மால முடிந்த அளவு சாலையோரங்களில் பனை விதைகள நடுவோம்.
*பனை மரங்களைப் பாதுகாப்போம்! *பகிர்வோம்!*