பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம்
Agriwiki.in- Learn Share Collaborate

பருவநிலை மாற்றம்

ஏந்தம்பி தீர்வுக்கு விதை, தற்சார்புனு சொல்றிங்களே இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? உலகமே பணத்த பாத்து ஓடிகிட்டு இருக்குது, நீங்க நுகர்வை குறைனு சொல்லிகிட்டு திரியறிங்க…மாற்று சக்தி, அறிவியல் கண்டுபுடிப்பு எல்லாரும் நம்மள காப்பாத்தும்…

மாற்று சக்தி ஒரு ஏமாத்து வேலைங் மாமா, அத இன்னொரு நாள் சொல்றேன். தீர்வு எல்லாம் மேற்கத்திய வணிக சிந்நனை வழியா தான் வருது, இது பணம் எப்படி பாப்பதுனே இருக்குது, மண்ணுக்கேத்த தீர்வுனு எதுவும் நம்ம அரசு கிட்ட பெருசா இல்ல

அதென்ன மண்ணுக்கேத்த தீர்வு?

மாம்ஸ் காவிரி கழிமுகம் கடல் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கும், கொங்கு பெரும்பாலும் பஞ்சத்தில் காயும். இதுக்கு மொத்தமா மரபணு மாற்றிய நெல்ல போடுங்கனு சொல்லுது அரசு நிறுவனங்கள். இது வேலைக்கு ஆகுமா? இரண்டு நிலத்துக்கும் ஒரே பயிர விளைவிக்க முடியாது தான?

ஆமா…

இந்த மண்ணுக்கேத்த அறிவு கோயமுத்தூர் விவசாய கல்லூரில இருக்கும் மாச சம்பளகாரன் கிட்ட இருக்குமா இல்ல இந்த மண்ணுல விளைவிக்கறவன் கிட்ட இருக்குமா?

விஞ்ஞானிகள் தான் பயிர் பரிந்துரை எல்லலாம் பண்றாங்க, மகசூல் பத்தி எல்லாம் சொல்றாங்களே?

அது பருவநிலை சீரா இருக்கும் போது. அப்பவே மழை கொஞ்சம் பத்தலனா பெரும் நட்டம். இப்ப பருவநிலை மொத்தமா சிதைஞ்சு போச்சு. அப்புறம் எப்படி அவங்க சொல்றத நம்பறது? கம்பு வெளையற காட்டுல கரும்பு, திராட்சைய போட சொல்றவங்க எப்படி இடர் காலத்தில் எப்படி பரிந்துரைப்பாங்க…

இதுக்கு தீர்வு ?

தீர்வு நம்ம கிட்ட தான் இருக்குது. இன்னிக்கு பெப்சி விதை சட்டத்த காட்டி விவசாயிகளக அடிமைபடுத்த பாக்குது, பைப் தண்ணி தரோம்னு தண்ணிக்கு விலை வெச்சாச்சு. நாம தண்ணிய பத்தியும் கவலைபடல, விதைய பத்தியும் கவலைபடல, எவனாச்சும் வந்து காப்பாத்துவான்னு அவென்ஜர்ஸ் படத்த வாய் பொழந்நு பாத்துகிட்டு இருக்கோம்

தம்பி தீர்வு இன்னும் வரல….

நம்ம பாதி வாழ்நாள் ஏதோ இயல்பா போயிடுச்சு, நம்ம பிள்ளைங்க வாழ்நாள் எப்படி இயல்பு மாறி இருக்குதுனு கொஞ்சம் யோசிச்சா தீர்வு தானா வரும்ங்க தாமஸ்

அதான் பெரிய பள்ளிகோடத்துல படிக்க வெக்கறோமே? அங்க இத பத்தி சொல்லி தர போறாங்க…

எந்த பள்ளி வேளாண்மைய, உடல் உழைப்ப முன்னிலை படுத்துது? மாற்று கல்வி பள்ளிங்க கூட இத பத்தி பெருசா பேசறதில்லயே? நாம தான் நம்ம புள்ளைங்களுக்கு சொல்லி தரோனும்

எனக்கே ஒன்னும் தெரியாது, இதுல நான் எங்க போய் சொல்லி குடுக்க? நேரமும் இல்ல…

நேரம் நம்ம புள்ளைங்களுக்கு தான் இல்ல. உங்களுக்கு நீச்சல் தெரியுமே? அத சொல்லி குடுங்க, உங்க நண்பர் வட்டத்துல யாராச்சும் வெள்ளாம வெச்சா கூட்டிகிட்டு போய் காட்டுங்க, மீதி இருக்கற காடுகளுக்கு தொந்தரவு குடுக்காம போய்ட்டு வாங்க, உணவு பழக்கத்த மாத்துங்க, சேமிப்பு பத்தி சொல்லி குடுங்க. முக்கியமா தற்காப்பு கலைய கத்துக்க ஏற்பாடு பண்ணுங்க, இடம். இருந்தா மரம் நடுங்க, இப்படி நிறைய இருக்குதுங் மாமா…

இந்த தற்சார்பு எல்லாம்…..

இத பண்ணிணாலே பாதி கிணறு தாண்டியது போல தான், மீதிய புள்ளைங்க பாத்துக்குவாங்க. அவங்களுக்கு தேவை அனுபவ அறிவு தான், அதை போன தலைமுறைல இருந்து வருங்கால தலைமுறைக்கு முடிஞ்ச வரைக்கும் கடத்துவோம்…மீதிய இயற்கை பாத்துக்கும்னு நம்புவோம்

Prakash thangavel