பல தானிய விதைப்பு

Agriwiki.in- Learn Share Collaborate

பல தானிய விதைப்பு
பல விதமான பயிர்களை விதைத்து 60-70 நாட்கள் வளர்ந்து பூ பூத்த பிறகு மடக்கி உழுது மண்ணை வளமாக்கலாம். இவற்றின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள நுண்ணூட்டங்கள் மண்ணில் சேர்ந்து மண்ணை வளமாக்குகிறது. மேலும் மக்கியபின் எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. பல விதமான செடிகளின் வேர்களில் உருவாகும் நுண்ணுயிர்களும் நாம் பயிரிடப்போகும் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து கொடுப்பதற்கு உதவி செய்கிறது. கீழ்க்காணும் விதைகளை எல்லாம் கலந்து ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வரை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பல தானிய விதைப்பு இரண்டு முறைகளில் செய்யலாம்.

பல தானிய விதைப்பு 1
ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வரை எடுத்துக்கொள்ளலாம்.
தானியங்கள்
∙ மக்கா சோளம் 4 கிலோ ∙ கேழ்வரகு 200 கிராம்
∙ கம்பு 500 கிராம் ∙ சோளம் 1 கிலோ
பயறு வகைகள்
∙ பச்சை பயறு 1 கிலோ ∙ தட்டை பயிறு 2 கிலோ
∙ கொள்ளு 500 கிராம் ∙ துவரை 3 கிலோ
∙ உளுந்து 500 கிராம்
எண்ணெய் வித்துக்கள்
∙ நிலக்கடலை 3 கிலோ ∙ ஆமணக்கு 2 கிலோ
∙ எள்ளு 100 கிராம் ∙ சூரியகாந்தி 1.5 கிலோ
உரச்செடிகள்
∙ சணப்பு 1 கிலோ ∙ தக்கபூண்டு 1.5 கிலோ
∙ அகத்தி 1 கிலோ ∙ நரிப் பயறு 500 கிராம்
வாசனை பொருட்கள்
∙ கடுகு 500 கிராம் ∙ வெந்தயம் 500 கிராம்
∙ மல்லி 500 கிராம் ∙ சீரகம் 300 கிராம்
மேலே குறிப்பிட்ட பல விதைகளில் ஒரு சில விதைகள் கிடைக்காத போது பின் வரும் விதைகளையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வருமாறு விதைக்கவும்.
தானியங்கள்
∙ கோதுமை 2 கிலோ ∙ நெல் 2 கிலோ
∙ சாமை 200 கிராம் ∙ தினை 200 கிராம்
∙ குதிரை வாலி 200 கிராம் ∙ பனி வரகு 200 கிராம்
பயறு வகைகள்
∙ காராமணி 200 கிராம்
வாசனை பொருட்கள்
∙ சோம்பு 100 கிராம் ∙ மிளகாய் 50 கிராம்
உரச் செடிகள்
∙ அவுரி 1 கிலோ ∙ செம்பை 1 கிலோ
இதரவை
∙ புளிச்ச கீரை 100 கிராம் ∙ தண்டு கீரை 50 கிராம்
∙ அரகீரை 50 கிராம்
கவனிக்க வேண்டியவை
∙ பெரிய விதைகளை சிறிது சிறிதாக கலந்து கலக்கி பின்பு மொத்தமாக ஒரு முறை கலக்க வேண்டும்
∙ விதைக்கும் போது பெரிய விதைகளை ஒன்றாக விதைத்து பின்பு சிறிய விதைகளை மணல் அல்லது சாம்பல் கலந்து விதைக்க வேண்டும்
∙ ஏக்கருக்கு 25 கிலோ பலதானியமும் அதற்கு மேல் தங்களிடம் உள்ள பழைய விதைகளையும் சேர்த்து விதைக்கலாம்.
∙ மண் வளம் குறைந்து காணப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 கிலோ வரையிலும் விதைக்கலாம்

பல தானிய விதைப்பு 2
ஆரம்பத்தில் ரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறுவோர் கட்டாயம் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். பல வருடங்கள் ரசாயன விவசாயம் செய்ததால் மண்ணில் நுண்ணுயிர்கள் மடிந்து நுண்ணூட்ட சத்து குறைந்து இருக்கும். நுண்ணுயிர்களையும், நுண்ணூட்டங்களையும் மீட்டெடுக்க இந்த பல தானிய விதைப்பு பயன்படும். ஏனென்றால் பலதானியங்களின் வேர்களில் பலவகையான நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. மேலும் அதை மடக்கி உழும் போது அதன் வேர், தண்டு, இலைகளில் உள்ள நுண்ணுட்டச் சத்துக்கள் நிலத்திற்கு கிடைக்கின்றன. பலதானியங்களை மூன்று முறை வெவ்வேறு காலங்களில் விதைத்து மடக்கி உழவு செய்ய வேண்டும். முதல் முறை விதைத்து 21வது நாளிலும், இரண்டாம் முறை விதைத்து 42வது நாளிலும், மூன்றாவது முறை விதைத்து 63வது நாளிலும் மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு 21, 42, 63 ஆகிய காலங்களில் மடக்கி உழவு செய்யும் போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான நுண்ணூட்டங்கள் மண்ணுக்கு கிடைக்கின்றன.
முதல் விதைப்பு
∙ ஏற்கனவே குறிப்பிட்ட அளவுகளில் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ வரை பலதானியம் விதைக்க வேண்டும்.
∙ 21ம் நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும்
இரண்டாவது விதைப்பு
∙ முதல் விதைப்பு மடக்கி உழவு செய்யும் அன்றே இரண்டாவது விதைப்பு விதைக்க வேண்டும்
∙ விதைத்த 42 வது நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும்
மூன்றாவது விதைப்பு
∙ இரண்டாவது விதைப்பு மடக்கி உழவு செய்யும் அன்றே மூன்றாவது விதைப்பு விதைக்க வேண்டும்
∙ விதைத்த 63 வது நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும