பினைப்பூட்டப்பட்ட செங்கற்கள் – Interlocking Bricks

பினைப்பூட்டப்பட்ட செங்கற்கள் - Interlocking Bricks
Agriwiki.in- Learn Share Collaborate

வீடு கட்டும் போது நாம் செலவு குறைவாக சுவரின் அமைப்பை கட்டுமானம் செய்ய மிக சிறந்த மற்றும் அனைவாலும் சுலபமாக செய்யக்கூடிய தொழில் நுட்பம் தான் இந்த INTERLOCKING BRICKS என அழைக்கப்படும் பிணைப்பூட்டப்பட்ட செங்கற்கள் ஆகும்.

((((நிறைய நண்பகள் இந்த இண்டர்லாக்கிங் பிரிக்ஸ் பற்றி எழுத கேட்டிருந்ததால் இந்த முழு தகவல் அடங்கிய பதிவு)))))))

அதாவது இநேர்லோக்கிங் பிரிக்ஸ் பற்றி நாம் பார்ப்பதற்கு முன்பு இந்த INTERLOCKING என்றால் என்ன என்பதை முதலில் அறிவது அவசியம்.

அதாவது இந்த LOCKING சிஸ்டம் கட்டுமான துறையிலேயே பல இடங்களில் பயன்படுகிறது.அதாவது நாம் வீடு கட்ட ஜன்னல்கள் கதவுகள் செய்யும் போது ஆசாரி இந்த locking system கொண்டு தான் மர சட்டங்களை பிணைக்கிறார்.

அதே போல இந்த locking systems பயன்படுத்தி தான் தற்போது மேம்பாலங்களில் தடுப்பு சுவர்கள் மற்றும் retaining walls போன்றவை அமைக்கப்படுகிறது.
மேம்பாலங்களின் அடி பகுதியில் தேன் கூடு போல hectogon அமைப்பில் இருப்பதை பார்க்கலாம்.

இந்த இண்டர்லோக்கிங் ப்ரிக்சுக்கு தொழிற்சாலைகளில் செய்யும் போதே அதன் அமைப்பில் இந்த பிணைப்பை ஏற்படுத்த locking அமைப்பு கொடுக்கப்படுகிறது.இதன் மூலம் செங்கற்க்கள் ஒன்றுடன் ஒன்று அதில் உள்ள locking அமைப்பு மூலமே பிணைந்து கொள்கிறது.இதற்கு சிமெண்ட் மணல் தேவை இல்லை.

மற்றும் பல துறைகளில் இந்த INTERLOCKING system பயன்படுகிறது.

சரி இப்போது செங்கல்லுக்கு வருவோம் ….

நாம் சாதாரன முறையில் வீடு கட்டும் போது செங்கலுக்கும் செங்கல்லுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த சிமெண்ட்டும் மணலும் பயன்படுகிறது.

இந்த இண்டர்லோக்கிங் ப்ரிக்சுக்கு தொழிற்சாலைகளில் செய்யும் போதே அதன் அமைப்பில் இந்த பிணைப்பை ஏற்படுத்த locking அமைப்பு கொடுக்கப்படுகிறது.இதன் மூலம் செங்கற்க்கள் ஒன்றுடன் ஒன்று அதில் உள்ள locking அமைப்பு மூலமே பிணைந்து கொள்கிறது.இதற்கு சிமெண்ட் மணல் தேவை இல்லை.

((((படத்தில் பார்க்கவும் செங்கல்லில் சில பகுதிகள் உயரமாகவும் பள்ளமாகவும் இருப்பதை காணலாம் அவைதான் ஒன்றுடன் ஒன்று இணைந்து பிணைப்பிற்கு உதவும் locking system.))))

இந்த இண்டர்லோக்கிங் bricks hydraulic compression முறையில் மண்ணை,சிமெண்ட்ஐ கொண்டும் ,
மற்றும் சிமெண்ட் மணலை கொண்டும் இரண்டு முறையில் தயாரிக்கப்படுகிறது. ((படத்தில் பார்க்கவும் ஒன்று சிவப்பாகவும் ஒன்று சிமெண்ட் நிறத்திலும் காணலாம்…)))


compressed செய்து செய்யப்படுவதால் செங்கல் நல்ல surface finishing உடன் இருப்பதால் பூச்சு வேலை தேவை இல்லை.பூசாமலே பார்ப்பதற்கு அழகாகவே இருக்கும்.மற்றும் மண்ணால் செய்யப்பட்ட கற்களை கொண்டு கட்டி பூசாமல் விடுவதால் வெயில் காலங்களில் கொஞ்சம் குளுமையாக இருக்கும்.

மற்றும் இந்த கற்கள் இரண்டு விதமான அளவுகளில் கிடைக்கிறது. 9 inch soil bricks costs Rs.29 and 6 inch costs Rs.22

அதாவது இந்த கற்கள் அதிக எடை தாங்கும் சக்தி கொண்டுள்ளதால் இதனை load bearing structure முறையில் கட்டிடம் அமைக்க முடியும் .
column structure தேவை இல்லை.

இந்த கற்களை கொண்டு சுவரை கட்டும் போது வெளிப்புறத்தில் sunshade அமைப்பு மிக முக்கியம்.கல்லுக்கு இடையில் கலவை இல்லாததால் சுவரின் மீது மழை நீர் படும் போது உள் பக்கம் கசிய வைப்பு உள்ளது.இதனை sunshade அமைப்பு மூலம் தடுக்கலாம்.

மற்றும் இது laying பண்ணும்போது முதல் வரிசை சரியாக நேராகவும் ,தூக்குக்காகவும் அமைக்க வேண்டும்.இது மிக வேகமாக சுவரை கட்டக்கூடிய முறை என்பதால் கட்டிடம் கட்ட தேவைப்படும் காலம் மிகவும் குறைவு …செலவும் குறைவு.

ஈரோடு நசியனூரில் இயங்கி வரும் Green Grandiose Eco Bricks Doing.  Call for details on 9486392544லி

மற்றும் இது கட்டப்படும் முறையையும், கட்டப்பட்ட வீட்டின் அமைப்பையும் காணொளியில் இணைத்துள்ளேன்.

Bricks laying and fixing

இந்த முறையில் சுவரின் அமைப்பு கட்டப்பட்ட வீடு

மறக்காம ஷேர் பண்ணிருங்க ….
((எலோருக்கும் தெரியட்டும் புரிஞ்சவங்க பயன் அடையட்டும்)).. ….

தொடரும்….
உங்களுடன் நான் ஹரி..