புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற

நெற்பயிரை புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற
Agriwiki.in- Learn Share Collaborate

நெற்பயிரை புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற

நெற்பயிரை புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற முட்டைக்கரைசல் அல்லது மீனமிலம் அல்லது இ.எம் கரைசலை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தரைவழியும் தெளித்தும் விடவும்.

அன்புள்ள விவசாய சொந்தங்களே

டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நெற்பயிர்க்கு அவசியம் முட்டைக்கரைசல் அல்லது மீனமிலம் அல்லது இ.எம் கரைசலை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தரைவழியும் தெளித்தும் விடவும். இது புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும்.

வேப்பங்கொட்டை கரைசலை 15 நாட்களுக்கொருமுறை தெளிப்பாக அளிக்கவும். புகையான் மற்றும் பல்வேறு தாக்குதலில் இருந்து பயிரைக் காப்பாற்ற உதவும்.

தேமோர் கரைசலை பூக்கும் 7 நாட்களுக்கு முன் தயாரித்து உரிய நாளில் தெளிக்கவும். 6 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் முறை கொடுப்பது சிறப்பு.

பூத்து பால்பிடிக்கத் துவங்கும் நாளில் தண்ணீர் பற்றாக்குறை இன்றி தெளிப்பிலாவது தண்ணீர் கொடுப்பது வேண்டும்.நீர் இருப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு இஞ்ச் உயரத் தண்ணீராவது க்கி வைப்பது சிறப்பு.

பூக்கும் போது தேமோர் கரைசல் இல்லை எனில் பஞ்சகாவியா அல்லது இ.எம் இரு முறை தெளிக்கலாம்.

அளவுக்கதிகமான அடர் பச்சை நெல் தாளில் இருந்தால் தழைச்சத்து தருவதைக் குறைக்கவும்.இது நோய் மற்றும் பூச்சிகளிடமிருந்து காக்கும். விளக்குப் பொறி ஏக்கருக்கு 4 வைக்கலாம்.

சரியாக விளைச்சலைத் தராத நிலத்தில் வாரம் ஒரு முறை பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், இ.எம்,மீனமிலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தரைவழி தரலாம். 15 நாட்களுக்கொருமுறை மட்டும் தெளிக்கலாம்

மாதமொருமுறை சூடோமோனாஸை ஏக்கருக்கு 1 லிட் வீதத்தில் தரைவழியும் 10 லிட்க்கு 50 மி.லிட் எனத் தெளித்தும் அவசியம் விடவேண்டும்.

பிரிட்டோராஜ்