புவிதம் பள்ளி

புவிதம் பள்ளி
Agriwiki.in- Learn Share Collaborate

புவிதம் பள்ளி

நேற்று என்னுடைய முகநூல் நண்பர் Adha Van அவர்களுடன் தர்மபுரியில் உள்ள புவிதம் பள்ளியை பார்வையிடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.மிக்க நன்றிங்க சகோ…👍👍…நீங்க ஒரு விஷயம் செய்தால் அது பூமேரேங் மாதிரி திரும்பி வரும் அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.எனக்கு வந்த நல்லதுல ஒண்ணு இது போல நட்புகள்….வேற லெவல்…😘😘😘

சரி விஷயத்துக்கு வருவோம்…நாங்க அங்க போன நேரம் லட்சுமி அம்மா இருந்தாங்க அவரிடம் பெரிதாக எதுவும் பேச முடியவில்லை (மிகுந்த பயணக்களைப்பில் இருந்தார்) என்றாலும் மிக எளிமையாக அன்பாக எங்களை உபசரித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தன்னுடைய மாணவன் ஒருவனை அழைத்து எங்களை பள்ளியைச் சுற்றிக் காட்டி வருமாறு அனுப்பினார்.

ஏறக்குறைய நான்கு மணி நேரம் அந்த கட்டிடத்தை சுற்றி சுற்றி வந்த எங்களால் அங்கிருந்து வெளியே வர மனம் வரவில்லை கட்டிட வடிவமைப்பு முதல் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் வரை அனைத்திலும் அவர்களுடைய உழைப்பும் இயற்கையை சிதைக்கக் கூடாது என்ற எண்ணமும் எங்களால் உணரமுடிந்தது.

நிச்சயம் மரபு முறையில் வீடு கட்ட நினைக்கும் அத்தனை பேரும் இந்த கட்டிடங்களை நிச்சயம் பார்வையிடவேண்டும் உங்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் உங்கள் கண் முன்னே காணலாம்.

நான் கூட சில நேரங்களில் கோபப்பட்டு விடுவேன்,கொஞ்சம் தலைக்கனமும் உண்டு….லட்சுமி அம்மாவிடம் பேசிய பிறகு அதை மாற்ற முயற்சிக்கிறேன் இதுவே நான் அங்கு கற்றுக்கொண்ட முதல் பாடம்.

செங்கல்களுக்கு இடையே உள்ள கலவை பகுதியை எவ்வாறு அழகாக பினிஷிங் செய்யலாம் என்று ஒரு நல்ல தகவல் கிடைத்தது.

லாரி பேக்கர் முறையில் நான் இதுவரை குறைந்த செலவில் கதவு ஜன்னல்களை அமைத்ததில்லை. அதை இங்கு தான் பார்த்தேன் நிச்சயம் முயற்சி செய்ய வேண்டிய தொழில்நுட்பம் அது.

இதுபோல நான் பேசிய எண்ணிலடங்கா தொழில்நுட்பங்கள் இங்கு செயல் வடிவில் ஒரே இடத்தில் காணக் கிடைக்கிறது… அற்புதம்…அதிசயம்😍😍😍

சில புகைப்படங்கள் இணைத்துள்ளேன்.ஆனால் உணர வேண்டுமெனில் நிச்சயம் நேரில் சென்று பாருங்கள் … முக்கியமாக குடும்பத்துடன் செல்லுங்கள்.. என்னைப்போன்ற பொறியாளன் தப்பிப்பான்😂😂

நன்றி
ஹரி…🙏🙏