பூச்சு வேலை வீட்டுக்கு தேவையான ஒன்றா???

பூச்சு வேலை வீட்டுக்கு தேவையான ஒன்றா???
Agriwiki.in- Learn Share Collaborate
பூச்சு வேலை வீட்டுக்கு தேவையான ஒன்றா???

 

உங்க வீட்டுக்கு அருகிலேயோ,அல்லது போகும் வழிகளிலோ பார்த்து கொண்டே செல்லுங்கள். முதல் படத்தில் உள்ளது போல ((ஏதாவது ஒரு காரணத்திற்காக அடுத்து பூச்சு வேலை செய்ய பணம் இல்லாமல் போவது அல்லது அருகில் ஒட்டி கட்டிடம் வருவது போன்ற காரணங்களால் சில வீடுகள் முழுக்க அல்லது சில பகுதிகள்)) பூசாமல் இருக்கும். அவைகளின் வயதை விசாரியுங்கள் .எத்தனை வருடங்களாக இப்படி இருக்கிறது என கேளுங்கள்.இந்த பதில்கள் உங்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும் என்பது உறுதி.

செங்கல் என்பது தண்ணீர் பட்டால் கரைய கூடாது என்பதற்காக தான் சுடப்படுகிறது. அப்படி மழையில் கரையும் கல் தரமான செங்கல் அல்ல. பூச்சு வேலை கட்டிடத்திற்கு எந்த உறுதி தன்மையையும் கொடுப்பது இல்லை. அழகும் கூட.

இரண்டாவது படத்தில் உள்ள வீடு பூச்சு வேலை செய்யாமல் செங்கல் மீது முழுக்க நேரடியாக வண்ணம் அடிக்கப்பட்டு உள்ளது.அதன் அழகை பாருங்கள்.(முகநூல் நண்பர் பகிர்ந்துகொண்டார்)

இதனால் எவ்வளவு செலவு மிச்சம் என்று யோசியுங்கள்.

மற்றும் பூச்சு வேலை செய்தால் கட்டிடத்தின் இயற்க்கையாக சுவாசிக்கும் தன்மை கெடுவதால் சூடு மற்றும் குளிர் உள்ளே கடத்தப்படும். வீட்டினுள் தட்ப வெப்ப நிலை சீர்கேடும்.

நன்றி
உங்களுடன் நான் ஹரி