போத்து முறை மரம் நடவு

போத்து முறை மரம் நடவு
Agriwiki.in- Learn Share Collaborate

போத்து முறை மரம் நடவு

 

போத்து’ என்றால் என்ன ?

‘போத்து’ என்றால் மரங்களின் கிளை என்று பொருள். மரத்தின் கிளைகளை வெட்டி நடவு செய்தல் முறைக்குப் ‘போத்து முறை மரம் நடவு’ என்று பெயர்.

போத்து முறை மரம் நடவு என்பது நீண்டநாள் யோசனை. போத்துமுறையில் மரங்கள் வளர்க்க ஆலம் இச்சி ஒதியன் உசிலை போன்றவை  தயார் செய்யப்பட்டது..

‘போத்து’ என்றால் மரங்களின் கிளை என்று பொருள்.

 

எந்த எந்த மரங்களை போத்து முறையில் நடலாம் ?


ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை ஆகிய 8 மரங்கள் போத்துமுறை நடவுக்கு ஏற்றது
. இதில் உதியன், வாதமடக்கி வேகமாக வளரும். தேர்வு செய்யும் மரங்கள் குறைந்தது 10 வருட முதிர்ச்சி அடைந்த மரமாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், மணிக்கட்டுக் கனத்தில் அதிக வளைவு இல்லாமல் நேராக இருக்க வேண்டும்.

கிளைகளில் உள்ள சிறிய கிளைகளையும், இலைகளையும் உதிர்த்துவிட வேண்டும். 8 முதல் 10 அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளை, கரும்பு வெட்டுவதுபோலச் சற்று சரிவாக வெட்ட வேண்டும்.

போத்து தயார் செய்வது எப்படி?

கிளைகளில் உள்ள சிறிய கிளைகளையும், இலைகளையும் உதிர்த்துவிட வேண்டும். 8 முதல் 10 அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளை, கரும்பு வெட்டுவதுபோலச் சற்று சரிவாக வெட்ட வேண்டும். சரிவாக வெட்டினால்தான் அதன் அடிப்பாகத்தில் திசுக்கள், ஈரமண்ணுடன் கலந்து புதிய வேர்கள் உருவாக ஏதுவாக இருக்கும்.

நடவிற்கு முந்தைய நாள் கிளைகளை வெட்டினால் போதும். நடவு தாமதமானால், கிளைகளின் அடிப்பகுதியில் ஈரத்துணிச் சுற்றி நிழலில் வைக்கலாம்…

போத்து வளர எத்தனை  நாட்கள் ஆகும்?

45 முதல் 50 நாள்களில் இலைகள் துளிர் விடுவதைப் பார்க்கலாம். இந்த முறையில் 10 முதல் 12 அடி இடைவெளியில் அடுத்த கிளை களை நடலாம்.

ஆடி மாதம் 18-ம் தேதி முதல் மார்கழி மாதம் வரை வெப்பம் குறைவாக இருப்பதாலும், இடையிடையே பருவமழை ஓரளவுப் பெய்வதாலும், பனிப்பொழிவு இருப்பதாலும் போத்து அல்லது மரக்கன்றுகள் நடவு செய்ய இதுவே ஏற்றக் காலமாகும்…

நடவு செய்ய ஏற்ற காலம் எது ?

ஆடி மாதம் 18-ம் தேதி முதல் மார்கழி மாதம் வரை வெப்பம் குறைவாக இருப்பதாலும், இடையிடையே பருவமழை ஓரளவுப் பெய்வதாலும், பனிப்பொழிவு இருப்பதாலும் போத்து அல்லது மரக்கன்றுகள் நடவு செய்ய இதுவே ஏற்றக் காலமாகும்…

Arun Sankar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.