மண்புழுவை நிறைய உற்பத்தி செய்வது எப்படி

மண்புழுவை நிறைய உற்பத்தி செய்வது எப்படி
Agriwiki.in- Learn Share Collaborate

மண்புழுவை நிறைய உற்பத்தி செய்வது எப்படி:
விவசாயிகளுக்கு பணிவான வேண்டுகோள்

நமது நிலங்கள் நிறைய மகசூல் பெற வேண்டுமென்றால் நிலத்து மண் சத்துள்ள மண்ணாக மாற்றப்பட வேண்டும்

அதற்கு மண்புழுவின் உதவி பெரிதும் உதவுகிறது

அந்த மண்புழுவை நமது நிலத்தில் நிறைய உற்பத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்

1) நிலத்தின் மத்திய பகுதியில் 3க்கு 3அடி ஆழம் குழி தோண்டி அதில் வைக்கோலைப் பரப்பி இரண்டு கிலோ நாட்டுசர்க்கரையை கரைத்து தெளித்துவிட வேண்டும்.

2) பின்பு அதன்மேல் மீண்டும் வைக்கோலை தூவி விட வேண்டும்

3) குழி மேல் மூங்கில் தட்டுக்களைக் கொண்டு மூடிவிடவும்
ஐந்து நாள் கழித்து நீங்கள் பார்க்கும் பொழுது ஏராளமான மண் புழுக்கள் உற்பத்தியாகிறுப்பதை இருப்பதை கண்கூடாக பார்க்கலாம்

பின்பு அந்த மண்புழுவை நிலத்தின் எல்லா பகுதியிலும் தூவி விட வேண்டும்

இந்த ரகசியத்தை நான் வெளிப்படையாக செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்

பழைய ஓலைச் சுவடியிலிருந்து எடுத்துப் பார்த்து படித்து பயன்பெற்று கூறுகிறேன்

தயவுடன் செய்யுங்கள், நிலத்தை பாதுகாத்திடுவர்

நன்றி வணக்கம், அருள் ஹெர்பல்ஸ்
அருள் நாகலிங்கம் ஈரோடு
9095905000

pagirvu (forwarding)