மரபுக்குத் திரும்புவோருக்கான வேண்டுகோள்

Agriwiki.in- Learn Share Collaborate

மரபுக்குத் திரும்புவோருக்கான வேண்டுகோள்
#ம.செந்தமிழன்

நண்பர்களே,
இயற்கை வாழ்வியல் எனும் கொள்கை அதிவேகமாகப் பரவும் காலம் இது. எங்கு பார்த்தாலும் இயற்கை எனும் சொல் புழங்கப்படுகிறது. ஆனால், மக்கள் இயற்கை வாழ்வியல் எனும் கொள்கையை உண்மையாகவே புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா எனக் கேட்டால், ‘அவ்வாறெல்லாம் இல்லை’ என்பதே உண்மை. பொத்தாம் பொதுவாக இயற்கையின் மேன்மையைப் புகழ்வதும், சுயநலமாக இயற்கையின் கொடைகளைச் சுரண்டத் துடிப்பதும்தான் இப்போதைய போக்காக உள்ளது.

இயற்கை வாழ்வியல் என்ற பேரில், மேட்டுக்குடிகளின் பொருளாதாரம் ஒன்று கட்டமைக்கப்படுகிறது. ‘இயற்கை’ என்ற சொல்லைப் பயன்படுத்தினால், அது விலை அதிகம் கொண்டது என்ற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இயற்கை வேளாண்மை விளைபொருட்கள் விலை கூடுதலாக இருக்கின்றன. இது தேவைதான். ஏனெனில், எந்த வகை வேளாண்மையில் விளைந்தாலும், அதற்குரிய விலை கிடைப்பதில்லை. எல்லா உழவர்களும் மிகக் குறைந்த விலைக்குத்தான் தம் விளைபொருட்களை விற்கிறார்கள். இயற்கை விளை பொருள் என்பதால், சற்று கூடுதலாக விலை கிடைப்பது பொருத்தமானதும் தேவையானதும்தான். ஆனால், அதற்கும் ஓர் எல்லை வேண்டும். அந்த எல்லையைப் பொருளாதாரக் கணக்குகள் வகுக்காது. அவரவர் மனச்சான்றுதான் வகுக்க வேண்டும்.

மூன்றாண்டுகளுக்கு முன், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் 600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. செம்மை ஊர் சந்தையில், ரூ.280 முதல் ரூ.320 வரை அதன் விலையை வைத்தோம். இயற்கை அரிசி என்றாலே ஒரு கிலோ, ரூ.90 அல்லது ரூ.80 என்ற நிலை இருந்தது. நாம், ரூ.58 எனும் விலையில் விற்பனை செய்யத் துவங்கினோம். பின்னர், இயற்கை விளைபொருட்களின் விலையில் நல்ல மாற்றம் உருவானது. இப்போது ஏராளமான நேரடி சந்தைகள் நடத்தப்படுகின்றன. உழவர்களுக்கும் விலை கிடைக்க வேண்டும். மக்களுக்கும் சுமையில்லாப் பொருளாதார வாய்ப்புகள் வேண்டும். இதுதான் இயற்கைச் சிந்தனை.

இயற்கை எல்லா உயிரினங்களையும் பாகுபாடின்றி நடத்துகிறது. இயற்கையின் பேரால் செயல்படுவோர் இவ்வாறுதான் இருக்க வேண்டும்.

இன்றைய கல்விமுறை வேண்டாம் எனப் பலர் முடிவெடுக்கின்றனர். ஆனால், எந்தக் கல்வியைக் குழந்தைகளுக்குக்கொடுப்பது என்று அவர்களில் பலருக்குத் தெரியவில்லை. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்துக்கொள்கின்றனர். வீட்டில் அவர்களுக்கு முறையான கல்வி கற்றுத்தந்தால், சிறப்பு. அதையும் செய்யாமல், பள்ளிக்கும் அனுப்பாமல் இருப்பது ஆபத்தானது. பலர் இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.

ஒரு கட்டமைப்பு தவறாக உள்ளது என்றால், அதை ஒரே நாளில் இடித்துத் தள்ளிவிட முடியாது. ஏனெனில், இந்தக் கட்டமைப்பிற்குள்தான் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் விருப்பம் என்னவோ அதற்கேற்ற கட்டமைப்பினைப் பொறுமையாகக் கட்டி எழுப்ப வேண்டும். அதுதான் தீர்வு. மாறாக, உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுத்து ‘இது வேண்டாம் அது வேண்டாம்’ என்று அலைபாய்தல் சீரழிவைத்தான் கொண்டு வரும்.

நல்ல கல்வி முறை வேண்டுமென்றால், முதலில் நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். மரபுக் கல்வி எனும் கொள்கையில் நாம் முன்வைக்கும் கல்விமுறை பெற்றோரை உள்ளடக்கியது. நீங்கள் கற்றுக்கொண்டு உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புங்கள். ஒருபுறம் மேல்தட்டு மக்களின் பள்ளிகளுக்கு அனுப்புவது, மறுபுறம் மரபுக் கல்வி வேண்டும் என ஆசைப்படுவது, ஒருகாலத்திலும் ஒவ்வாச் சிந்தனை. பிள்ளைகளுக்கு அடிப்படை மொழி, எண்ணியல் அறிவு தேவை. அதை அரசுப் பள்ளிகள் சிறப்பாகவே வழங்குகின்றன.

பள்ளியே வேண்டாம் என்று நீங்கள் முடிவெடுத்தாலும் தவறில்லை. ஆனால், பள்ளியை விடச் சிறப்பாக நீங்கள் செயல்பட வேண்டும். இல்லையென்றால், உங்கள் முடிவு வெறும் அகந்தை வழிப்பட்டதாகத்தான் இருக்கும்.

மருத்துவத்துறையிலும் இந்த நிலை உருவாக வேண்டும். பொருளாதாரப் புரிதல் மட்டுமல்ல, பொறுப்பும் பக்குவமும் தேவைப்படுகின்றன. இயற்கை மருத்துவம் என்ற பேரில், மூடத்தனமான கருத்துகளைச் சமூகவலைத் தளங்களில் பரப்பும் போக்கினைக் கண்டால் மிகுந்த வருத்தம் மேலிடுகிறது. நவீன மருத்துவத்தின் சீர்கேடுகளை அம்பலப்படுத்துவது மிக எளிது. அது தன்னைத்தானே அம்பலப்படுத்திக்கொண்டுள்ளது. அதற்குச் சான்றுகளைத் தனியாகத் தேட வேண்டியதில்லை. அம்மருத்துவ முறைக்குள் தன்னை நுழைத்துக்கொண்ட மனிதர்களே சான்றுகளாக மாறிப் புலம்புகிறார்கள்.

‘இயற்கை மருத்துவக் கொள்கை, மாற்று மருத்துவக் கொள்கை’ என்ற அடையாளங்களுடன், பரப்பப்படும் கருத்துகளோ நவீன மருத்துவ மூடத்தனங்களோடு போட்டி போடுகின்றன.

‘காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்’ என்ற வாசகம் இதற்கு நல்ல சான்று. முற்றிலும் பொருத்தமற்ற மருந்துப் பழக்கம் இது. இம்மூன்றையும் தொடர்ந்து உட்கொண்டால், உடல் நலிவடைந்து போகும். ஆனால், இதை ஒரு மந்திரம் போலப் பலர் நம்புகிறார்கள். இம்மூன்றையும் யார் உட்கொள்ளலாம், எவ்வளவு உட்கொள்ளலாம், எவ்வளவு நாட்களுக்கு மட்டும் உட்கொள்ளலாம் என்றெல்லாம் வரையறைகள் உண்டு.

மூங்கில் அரிசி, தேன் ஆகியவற்றை உணவாகக் கொள்வது மிகுந்த கேடு விளைவிப்பது. காட்டு உயிரினங்களுக்கான உணவுகள் இவை. சுயநலமாக இவ்வுணவுகளைக் காட்டிலிருந்து கடத்தி வந்து, தமக்கான உணவாக்குவோருக்கும் இயற்கைக்கும் என்ன தொடர்பு உள்ளது?

அன்றாடம் தேன் உண்பது உடலில் கபத்தை மிகச்செய்யும். தேன் அரிதாகத் தேவைப்படும் மருந்து. தேநீரில் கூட இஞ்சியைப் பயன்படுத்துவதும், சுக்கு சேர்ப்பதும் உடலைக் கெடுக்கும். இவையெல்லாம் மருந்துகள். இவற்றைக் காரணமில்லாமல் உட்கொள்ளக் கூடாது. மூலிகைத் தேநீர் என்ற பேரில் ஏராளமான மூலிகைகளைச் சேர்த்து விற்பனை செய்கிறார்கள். ஒவ்வொரு மூலிகைக்கும் பல்வேறு பண்புகளும் குணங்களும் உள்ளன. இவற்றைப் பற்றி ஏதும் அறியாமல்,அன்றாடம் இவ்வளவு மூலிகைகளைப் பருகினால், உடல் நலம் என்னவாகும் என்று எனக்குக் கவலையாக உள்ளது. தேநீர் வேண்டுமென்றால், தேநீர்தான் பருக வேண்டும்.

பிரசவம் என்றாலே அது இயற்கையானதுதான். ஆனால், இயற்கை வழியில் பிரசவம் நிகழ வேண்டுமென்றால், வாழ்க்கை முறையும் அதற்கேற்றவாறு இருக்க வேண்டும். உடல் உழைப்பு, பொருத்தமான உணவுப் பழக்கம், சீரான மனநிலை ஆகியன இல்லையெனில், பிரசவம் மட்டும் இயற்கையாக நிகழ்ந்துவிடாது. இயற்கை என்பது அவரவர் வசதிக்கேற்ப ஆடும் குரங்கல்ல. அது இறையின் கட்டமைப்பு. அதை நீங்கள் உணர்ந்தால் மட்டுமே அதைப் புரிந்துகொள்ள முடியும்.

சுயநலமாகவோ, ஆர்வக் கோளாறாகவோ இயற்கை எனும் கட்டமைப்பை அணுகும் அனைவருக்கும் இழப்புதான் நேரிடும்.

நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டுமானால், உங்கள் வாழ்க்கை முறையை மரபு வழிக்கு மாற்றுங்கள். பேராசைகளற்ற, இயற்கைக்கு நெருக்கமான, எளிமையான வாழ்வியல் அது. இந்த வழிக்கு வந்துவிட்டால் உங்களுக்கு எந்த மருத்துவமும் தேவைப்படாது.

சுகப் பிரசவம் வேண்டுமெனில், அதைப் பற்றிய முழுமையான உடன்பாடு குடும்பத்தினர் அனைவருக்கும் வேண்டும். பேறுகாலம், பிரசவ நேரம், பிரசவத்திற்குப் பிந்தைய ஓராண்டு – இம்மூன்றினைப் பற்றிய தெளிவான புரிதல் கணவனுக்கும் மனைவிக்கும் வேண்டும். நிச்சயமாக, பிரசவம் என்பது சாகசமும் அல்ல, மிக எளிதாக நிகழ்வதும் அல்ல. ‘எங்களுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்தது’ எனும் சமூகவலைத்தள அறிவிப்புகளைக் கண்டு, உணர்ச்சிவசப்படாதீர்கள். ‘எங்கள் வீட்டில் நிகழ்ந்த பிரசவத்தில் குழந்தை இறந்துபோனது, மனைவி இறந்து போனார்’ என்ற செய்திகளை எவரும் எழுதுவதில்லை.

இயற்கைப் பிரசவம் என்பது, ஒரு கல்வி. இதுதான் நம் விருப்பம். இக்கல்வியை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவத்தின் எல்லா தளங்களும் உணர்வுப்பூர்வமாகக் கற்க வேண்டியவை. ஒருசில மாதங்களில், ஆண்டுகளில் கற்றுக்கொண்டு சான்றிதழ் பெறலாம். அதுவே போதுமானதல்ல. இறுதி நொடி வரை கல்வி கற்க வேண்டிய துறை மருத்துவம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.

’பிள்ளைகளைஅரசுப் பள்ளிகளில் சேருங்கள். பிரசவ வலி வரும்போது, அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள்’ என்று நான் தொடர்ந்து கூறிக்கொண்டுள்ளேன். தனிப்பட்ட முறையில் பிரசவத்திற்காக என்னைச் சந்திப்போருக்கு இதைத் தெளிவாகவே கூறிவிடுவேன். அரசு மருத்துவமனைகளில் சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றைக் காட்டிலும் மோசமான சிக்கல்கள் புரிதலற்றவர்களால் உருவாக்கப்படுகின்றன.

‘எந்த மருந்தும் இல்லாமல், தடுப்பூசி இல்லாமல் குழந்தை பிறக்க வேண்டும்’ என்பது விருப்பம். இந்த விருப்பத்தில் நிலைத்திருக்க வேண்டும், மாறக் கூடாது. ஆனால், பொறுமையற்ற வகைகளில் நடந்துகொண்டால் எந்த விருப்பமும் நிறைவேற்றப்படாது.

ஏறத்தாழ 60 ஆண்டுகளாகச் சமூகம் ஒரு பொய்மையைக் கட்டி எழுப்பிவிட்டது. இதை மாற்ற வேண்டும் என்றால், மேலும் 20 ஆண்டுகள் கூட தேவைப்படலாம். அதற்காக உழைக்க வேண்டும், காத்திருக்க வேண்டும். இன்றே இப்போதே நான் நினைப்பது நடக்க வேண்டும் என்று நினைத்தால், அது விருப்பம் அல்ல, பேராசை.

’விருப்பத்தில் நிலைத்திருங்கள். உங்கள் விருப்பம் இறையால் நிறைவேற்றப்படும்’ என நான் முன்வைக்கும் கருத்து வேறு. இப்போதைய சூழலில் உள்ள பேராசை வேறு.
இயற்கை, மரபு ஆகிய சொற்களும் அவற்றின் பின்னால் உள்ள கருத்துகளும் உன்னதமானவை. உங்கள் ஆசைகளாலும், பொறுமையின்மையாலும், அச்சங்களாலும் இந்த உன்னதங்களையும் சீரழித்துவிடாதீர்கள்.மரபுக்குத் திரும்புவோருக்கான வேண்டுகோள்

இயற்கை, மரபு ஆகிய சொற்களும் அவற்றின் பின்னால் உள்ள கருத்துகளும் உன்னதமானவை. உங்கள் ஆசைகளாலும், பொறுமையின்மையாலும், அச்சங்களாலும் இந்த உன்னதங்களையும் சீரழித்துவிடாதீர்கள்.