வீடு கட்ட bearing structure சிறந்தது

building ecofriendly homes economically
Agriwiki.in- Learn Share Collaborate

வீடு கட்ட bearing structure சிறந்தது – Low cost buildings – building ecofriendly homes economically
Cement பயன்பாடு எங்கலாம் குறையுதோ அந்த building’லாம் mostly economical’ah வும் eco-friendly’ah வும் அமையும்…இதுதான் நிதர்சனம் அதுதான் நமது நோக்கமும்

“அந்த என்ஜினீயர் சதுர அடிக்கு 1700 ரூவா சொன்னாரு ஒருவழியா குறைச்சு பேசி 1550க்கு முடுச்சாச்சு, நாம economical ah தான் வீடு கட்டுறோம்” அப்படினு உங்கள நெனச்சு நீங்களே பெருமை பட்டுகிட்டா…, வாழ்த்துக்கள்(?!)… இந்த பதிவு உங்களுக்கே

வீட்டோட squarefeet ரேட் ah குறைக்குறதுல இல்ல low_cost_buildings concept…அது முற்றிலும் வேற…தேவையே இல்லாத செலவீங்களை குறைப்பதிலும் முடிந்த வரை நம்மை சுற்றியுள்ள நம் அருகிலுள்ள பொருட்களை பயன்படுத்தி அவற்றிலிருந்து பயன் பெறுவதே அதன் பொருள்.

 

எது தேவை? எது தேவையில்லை?

எல்லாம் சரி…எது தேவை? எது தேவையில்லை? எதுலாம் அனாவசிய செலவீனம்?…அவற்றை குறைப்பது எப்படி?…போன்ற இயல்பான கேள்விகள் எழும்…அவற்றை களைய அடிப்படை புரிதலும் மாற்றத்தை தேடி மாற விரும்பும் மனதுமே போதுமானது.. உதாரணமாக இன்று வீடு கட்ட பெரிதும் பயன்படும் முறையான framed structures (beam,column நிறுத்தி கட்டப்படும்) முறையானது appartments,highrise buildingsக்கு ஏற்றது ஆனால் வீட்டுக்கு (ஒருசில இடத்தை தவிர) அதன் தேவை கேள்விக்குறியே!! … இம்முறை இவ்வளவு பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் பெரிய இடவசதி இல்லாத இடங்களில் இது கச்சிதமாக பொருந்தும்.

மேலும் இது earthquake resistant structure (நிலநடுக்கத்தை பொறுத்த வரை நாம் அதிகம் நடுக்கம் வராத safe seismic zone…i.e, zone IIல தான் இருக்கோம்.. INDIAN STANDARDS CODE confirms this…so there is nothing much to worry about this as far as residential building is concerned…)

ஜப்பான்ல போன்ற இடங்கள்ல நாம இந்த முறையில தான் கட்டி ஆகணும் ஏன்னா அங்க earthquake அதிகமாவும் பெரிதாவும் வரும்..ஆனா நம்ம இடத்துல இதுக்கு இவ்ளோ அச்சப்பட தேவை இல்லை. நாம கடந்து வந்த வரலாற்ற பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

வீடு கட்டLoad bearing structure சிறந்தது

வீடு கட்டுமானத்தை பொறுத்தவரை இந்தமுறைக்கு load bearing structure சிறந்தது…இதன்மூலம் g+2 வரை தாராளமாக வீடு கட்டலாம் … ஒருசில இடங்களில் g+3 வரை கட்டி கண்டதும் உண்டு., இது நமது பாரம்பரிய முறையும் கூட…அதற்கு மேல் building rise ஆனால் framed structure முறையை பயன்படுத்தலாம்….

இடம்(plot area) அதிகமா இருந்து framed structure முறைக்கு செல்வது it’s not advisable…சரி அப்போ இடம் இல்லனா framed structure போறத தவிர வேற வழி இல்லையானு நெனைக்காதீங்க…வழிஇருக்கு semi-load bearing structure, (எங்கள் வீடு இம்முறைப்படி கட்டமைக்கப்பட்டதே) அதாவது ground level உடன் column cut செய்யப்பட்டு செங்கல் சுவர் எழுப்பப்படும் (combo of framed and load bearing structures)…இதிலும் மிக தாராளமாக g+2 வரை கட்டலாம்.

Framed structure முறைக்கு சென்றால் cement,concrete,steel என்று அடுக்கிக்கொண்டே செல்ல வேண்டும் செலவையும் சேர்த்து… தேவையுள்ள இடத்திற்கு பணத்தை செலவிடுங்க ஆனால் தேவையற்ற இடத்திற்கு செலவு செய்வதால் நம்முடைய தேவைக்கு செலவு செய்ய முடியாமல் போகிறதே..!!

…உங்க பணத்தை உங்களுக்கே தெரியாம அறியாமைல வீணாக்காதீங்க.

மேலும் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டதை போல “Smart bricks” கொண்டு கட்டும்போது செலவு இன்னும் மிச்சப்படும் ( around 1500 per sqft with zero compromise in strength and quality)…அந்த பணத்தை நீங்கள் interiors’யை அழகு படுத்த செலவு செய்யலாம், அகமும் புறமும் அழகு பெறும் மேலும் வீடும் “வாழ்வதற்கு” வசதியாக அமையும்.

எல்லாரும் ஒரு பாதைல போறப்போ நாம மட்டும் ஏன் தனிச்சு நிக்கணும்னு தோணும்… தப்போ சரியோ கூட்டத்துல ஒருத்தாரா அவங்க பண்றதையே நாமளும் செஞ்சுரலாம் எதுக்குங்க வீண் ரிஸ்குனு தோணும்…உங்களுக்கு நான் சொல்றது ஒண்ணே ஒன்னு தான் நீங்க இந்த முறைல வீடு கட்டபோற முதல் ஆளும் இல்ல கடைசி ஆளும் இல்ல…இது ஒரு பழம்பெரும் தொடர்ச்சி அது இனியும் தொடரும்.

சுருக்கமா சொல்லனும்னா cement பயன்பாடு எங்கலாம் குறையுதோ அந்த building’லாம் mostly economical’ah வும் eco-friendly’ah வும் அமையும்…இதுதான் நிதர்சனம் அதுதான் நமது நோக்கமும்😊
புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க☺️

நன்றி
Hariprasath

2 Responses to “வீடு கட்ட bearing structure சிறந்தது”

  1. நான் தமிழ் கட்டடத்துறை மாத இதழான பிலடர்ஸ்லைன் இதழின் ஆசிரியர் பா. சுப்ரமண்யம். உங்கள் பதிவுகள் அனைத்தும் ( கட்டுமானம் தொடர்பானவை) மிக அருமை. தாங்க்கள் விரும்பினால் பில்டர்ஸ் லைன் மாத இதழில் எழுதலாம்.
    எனது எண்ணை 882599 1977 அழையுங்கள். பேசலாம்.

  2. வணக்கம் தங்கள் வலை தளத்தில் கட்டுரைகள் பார்த்தேன் அருமை அதிலும் தஞ்சாவூர் வட்ட முற்றம் வீடு குறித்து படித்தேன் நன்றி மேலும் தங்கள் இதைப்போல மேலும் கட்டுரைகள் இருந்தால் பதிவிடவும்
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.