Month: September 2017

புழுக்களை கட்டுபடுத்தும் இயற்கை வழிமுறை

புழுக்களை கட்டுபடுத்தும் இயற்கை வழிமுறை* –

இயற்கை பூச்சி விரட்டி ( பூச்சி விரட்டி

– ஆடு திங்காத கசப்பு அதிகம் உள்ள 10 வகையான இலை, தழைகளை 3கிலோ எடுத்து பொடியாக நறுக்கி ஒரு டிரம்மில் போட்டு இலை முலுகும் அளவு கோமியம் ஊற்றி மூடி வைத்து விடவேண்டும்.

3 நாளில் தயாராகிவிடும், ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம் )

10 லிட்டர் தண்ணீருக்கு பூச்சிவிரட்டி – 100 மில்லி + சுத்தமான வேப்பெண்ணை – 20 மில்லி + மெட்டாரைசியம் – 100மில்லி + பெவேரியா பேசியானா – 100 மில்லி ( உயிரில் கிடைக்கும் ) இதனுடன் ஒட்டும் திரவம், அரிசி கஞ்சி 100 மில்லி ( 100 கிராம் அரிசி மாவு + 1லிட்டர் தண்ணீர் கலந்து காய்ச்சி தயாரித்து கொள்ளவும் ) சேர்த்து நன்றாக கலந்து *புழுக்களின் மீது நன்கு படும்படி* காலை 7 – 9 மணிக்குள் அல்லது மாலை 4 – 6 மணிக்கு தெளித்து விடவேண்டும்
( மழை பெய்யும் போல இருந்தால் காலையில் தெளிப்பது சரியாக இருக்கும். தெளித்த பிறகு 3 மணி நேரம் மழை பெய்யாமல் இருக்க வேண்டும் )

தெளித்த 7 வது நாளில் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.
10 நாட்களில் புழக்கள் இறந்துவிடும்.

*செயல்படும் முறை* –
இதிலுள்ள நன்மை செய்யும் பூஞ்சாணங்கள் புழுக்களுக்கு உள்ளே சென்று புழுவின் ரத்தத்தை உணவாக உண்டு புலுவை அழித்துவிடும். பூச்சிவிரட்டியும், வேப்பெண்ணையும் புழுக்களை இலை தழைகளை உண்ண விடாமல் செய்து பூஞ்சாணங்களின் வேலையை சுலபமாக்கிவிடும்.

வேப்பெண்ணைக்கு பதிலாக வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்துவது சிறந்தது.

சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்

சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்:

2005 ல் இரண்டு ஏக்கர் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் போது வழக்கம் போல் ஒருவித பயம்..
காரணம் ஊரில் யாருமே சொட்டுநீர் குழாய் அமைக்காத போது நாம் மட்டுமே அமைக்கிறோம் என்று..
சரி பூனைக்கு நாமே மணி கட்டிவிடலாம் என்று கட்டிவிட்டோம்..
ரசாயன விவசாயம் செய்யும் போது இந்த சொட்டுநீர் குழாய்களை வருடத்திற்க்கு ஒரு முறை ஆசிட் பாசன நீரில் கலந்துவிட்டு சுத்தம் செய்து விடுவோம்.(ஹைட்ரோ அல்லது சல்பூரிக்)
ஆனால் ரசாயனத்தை நிறுத்தியபின் நேரடியாக இது போல அமிலத்தை சொட்டுநீர் குழாயில் விட மனது வரவில்லை..
காரணம் இது போல அமிலம் கலந்துவிட்ட நீர் நிலத்தில் பாயும் போது மண்ணில் உள்ள உயிரினங்கள் அழியும் என்று..

2010 லிருந்து அமிலம் விட்டு சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்வதை நிறுத்தி
சுத்தமான நாட்டு கோமியம், EM திரமி என்று பாசன நீரில் கலந்து விட ஆரம்பித்தேன்..
ஏற்கனவே ரசாயன உரங்களை தண்ணீரில் விட்டதாலும் கிணற்று நீரின் உப்பு தன்மை அதிகமானதாலும் குழாய் ஓட்டைகள் அவ்வளவாக சுத்தமாவில்லை..

ஒரு கட்டத்தில் சொட்டுநீர் குழாய் கம்பெனிகாரர்களை அழைத்து பார்த்த போது “இதை நீங்க அமைத்து பணிரெண்டு வருஷம் ஆனதால் பெரும்பாலான தூவரங்களும் அடைச்சிடுசுங்க,
அதனால இதை கழட்டி வீசிவிட்டு புது டியூப் போடறதை தவிர வேறு வழி
இல்லை “என்றனர்..
“சரி எவ்வளவு ஆகும்ங்க?
கணக்கு போட்டார்கள்..
மீட்டருக்கு ஒரு டியூப் என்பதால் ஏக்கருக்கு முப்பதாயிரம் வரும் ங்க ..
அப்போ இரண்டு ஏக்கருக்கு அறுபதாயிரம்
சரி நான் யோசித்து சொல்கிறேன் என்று அனுப்பிவிட்டேன்..

உட்புறமும், வெளிபுறமும் சொட்டுநீர் குழாயில் உள்ள உப்பு படிவத்தை நீக்க வேண்டுமென்றால் ஆசிட் விடுவதை தவிர வேறு வழியில்லை ..
ஆசிட் விட்டால் நுண்ணுயிர்கள் அழிய வாய்ப்பு அதிகம் ..
இதை செய்யலாம்னா அறுபதாயிரம் ரூபாய் செலவு செய்து குழாயை மாற்ற வேண்டும்
என்று சிந்தித்து மண்டையை உடைத்துக்கொண்டிருந்தேன்..
சரி இன்னொரு முறை ஆசிட் வாங்கி வேறு வழியில் சுத்தம் செய்லாம் என்ற பல நண்பர்களின் ஆலோசனை கேட்டேன்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொன்னார்கள்..
சரி நாமே ஒரு புது முயற்சியில் இறங்கலாம் என்று சொட்டுநீர் குழாய்களை சுருட்டி ஓர் இடத்தில் அடுக்கினேன் வெள்ளாமை இல்லாத நிலத்தில்..
காடு ஏகமும் அமிலம் போனால்தானே மண்ணுக்கு கெடுதல் என்று..
2” (2 இஞ்ச்) PVC குழாய் இருபது அடி (ஒரு லென்த்)
PVC குழாய் முடியும் இடத்தில் இரண்டு பக்கமும் மூன்று அடி உயரம் கொண்ட
“V “வடிவ கால்களை நட்டி அதில் இரண்டு இஞ்ச் பைப்பை கயிற்றால் கட்டி அதில் முக்கால் பங்கு நிறையும் அளவுக்கு (ஹைட்ரோ) ஆசிட்டை ஊற்றினேன்..
ஐந்து ஐந்து சொட்டு நீர் குழாய்களை எடுத்து ஒரே நேரத்தில் PVC பைப்புக்குள் உள்ளே விட்டு மெதுவாக மறுபுறம் உறுவி அதை அப்படியே இரண்டு நாள் வெயிலில் உலர விட்டேன்..
இப்படி செய்யும் போது ஆசிட் சொட்டு நீர் குழாய் முழுவதும் நணைந்து வெளியே வந்தது..
இரண்டு முறை அதாவது பத்து குழாய்களை ஆசிடில் நணைத்து விட்டால் அடுத்த முறை குழாயை நணைக்கும் போது குறைந்துள்ள ஆசிட்டை கொஞ்சம் PVC ல் ஊற்றி விட்டேன்..
இப்படி செய்ததில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கேன் (சுமார் முப்பத்தி ஐந்து லிட்டர்) ஹைட்ரோ ஆசிட், பத்து ஆண் ஆட்கள் தேவைபட்டது..

எல்லா பணியும் முடித்து இரண்டு நாள் கழித்து சொட்டு நீர் குழாயை வெள்ளாமை காட்டில் பொருத்தி தண்ணீரை எடுத்து விட்டு ஒரு மணி நேரம் ஓடவிட்டு
(End cap) கழட்டிவிட்டு பார்த்த போது படிந்திருந்த உப்பு படிவங்கள் வெளியே வந்தது..

பிறகு End cap யை அடைத்து நீர் பாய்ச்சிய போது எல்லா தூவரங்களிலும் சீராக நீர் வடிந்தது..

ஆக ஒரு ஏக்கர் சொட்டு நீர் குழாய் உப்பு
நீக்க,
ஆட் கூலி 3,000
ஆசிட் 1,000
ஒரு லைன்த்
பிவிசி பைப் 300 என்று 4,300 ரூபாயில் சொட்டுநீர் குழாய்களை புதிப்பித்துக்கொண்டேன்..

இயற்கை வழி விவசாயத்தில் நன்கு சிந்தித்து பயிர் செய்து
இது போல செலவை குறைத்து
வரவை கூட்டினால் மட்டுமே தொடர்ந்து பயணிக்க முடியும் என்பது எனது கருத்து..

மேலும் இதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால்
89034 69996 என்ற எண்ணில் என்னை அழைக்கலாம்..

நன்றி ..
வாழ்த்துக்கள்..
திருமூர்த்தி

உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள்

மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள

#உயிர்உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், கேள்வி பதில்கள்
1.சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்றால் என்னவென்று பார்க்கலாமா?

சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்பது பயிர்களில் இலைக்கருகல் இலைப்புள்ளி , குலைநோய், துருநோய், வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சாணக் கொல்லியாகும்.

2. சூடோமோனஸ் புளோரோசன்ஸ் எப்படி நோய்களை கட்டுப்படுத்தும் என்று பார்ப்போமா?

சூடோமோனஸ் புளோரோசன்ஸ் பயிர்களில் நோயை உண்டுபடுத்தம் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கின்றது இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

2.சூடோமோனஸ் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாமா?

சூடோமோனஸை பயன்படுத்துவதால் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி யூக்கிகளை ( ஹார்மோன்கள்) உற்பத்தி செய்கிறது

பயிர்களின் வேர்களைத் தாக்கும் நூற்புழுக்களை ( நெமட்டோடு) கட்டுப்படுத்துகிறது

3.சூடோமோனஸை எதெதுக்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாமா? விதை, கிழங்கு? நாற்று நேர்த்தி செய்யலாம்?
அடியுரமாக போடலாம்

தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் ஊற்றலாம்.
4.சூபோமோனஸ்சை கொண்டு எப்படி விதை நேர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாமா?

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸைசிறிது நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்

5.சூபோமோனஸ்சை அடியுரமாக எப்படி பயன்படுத்தலாம்?

2 கிலோ சூபோமோனஸ்சை 200 கிலோ மக்கிய இயற்கை உரத்துடன் கலந்து 4 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் மூடி வைத்தபிறகு; நிலத்தில் ஈரம் இருக்கும் பொழுது இடவும்.

6.சூபோமோனஸ்சை தண்ணீருடன் எப்படி கலந்து தெளிப்பது என்று பார்க்கலாமா?

சூபோமோனஸ் ஒருகிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் பயிர் நனையுமாறு தெளிக்கலாம்.

7.வேம் என்றால் என்ன என்று பார்க்கலாமா?

வேம்( ஆர்பஸ்குளார் மைக்கோரைசா) என்பது பயிர்களுக்கு தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்தை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும் வேர் உட்பூசனமாகும்.

8.வேம் என்னால் என்ன, எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாமா?

வேம் என்பது ஒரு உயிர் உரமாகும். காய்கறி பயிர்கள், பழவகைகள், மரக்கன்றுகள்,தென்னை, மலைத்தோட்டப்பயிர்கள் மற்றும் எல்லா வகை நாற்றங்கால் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

9.வேம் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாமா?

வேர்உட்பூசனம் கறையாத நிலையில் உள்ள நுண்ணூட்ட சத்து மற்றும் மணிச்சத்தை பயிர்களின் வேர்களில் வளர்ந்து எடுத்துக் கொடுக்கும்

வேரைத் தாக்கும் பூஞ்சான நோய்களில் இருந்து பயிரை பாதுகாக்கிறது, வேர்களுக்கு மண்ணிலிருந்து நீரை எடுத்துக்கொடுக்கிறது மகசூல் 10 மதல் 15 சதம் அதிகரிக்கிறது

10.வேம்மை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?

ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிலேர் வேம் உயிர் உரத்தை விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் கிழே 2-3 செ.மீ ஆழத்தில் இடவும். வளர்ந்தபயிருக்கு 50 முதல் 200 கிராம் வேமை வேர்பாகத்தில் இட்டு மண் அணைக்கவும். பாலித்தீன் பையில் உள்ள நாற்றுக்களுக்கு ஒரு பைக்கு 10 கிராம் உட்பூசனம் போடவும், 1000 கிலோ மண்கலவையில் 10 கிலோ வேம் கலந்து பாக்கெட்டில் இடலாம்.

11.டிரைக்கோடெர்மா விரிடினா என்னானு தெரிந்து கொள்ளலாமா?
பயிர்களில் மண், நீர் விதையின் மூலம் பறவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சானக்கொல்லியாகும்.
12.டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்களைப் பற்றி பார்க்கலாமா?

டிரைக்கோடெர்மா விரிடி நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

13.டிரைக்கோடெர்மா விரிடியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலமா?

பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது

மண்ணி;ல் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.

14.டிரைக்கோடெர்மா விரிடியை எந்தெந்த வகைகளில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?

அடியுரமாக போடலாம், விதைநேர்த்தி செய்யலாம், தண்ணீரில் கலந்து ஊற்றலாம்
15.டிரைக்கோடெர்மா விரிடியை விதை நேர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பிறகு நடவு செய்யலாம்.

16.டிரைக்கோடெர்மா விரிடியை அடியுரமாக எவ்வாறு போடாலாம் என்று பார்க்கலாமா?

டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோவை மண்புழு உரம் அல்லது இயற்கை உரம் ( சாணம்; உரம்) 100 கிலோவுடன் கலந்து 10- 15 நாட்கள் நிழலில் வைத்துப் பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும் பொழுது அடியுரமாக போடலாம்.

டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு கிலோவை 100 லிட்டர் நீரில் கரைத்து வேர்பகுதியில் ஊற்றலாம்.

17.அசோஸ்பைரில்லம் என்றால் என்ன?

அசோஸ்பைரில்லம் என்பது ஒரு உயிர் உரம் இது காற்றிலுள்ள தழைச்சத்தை கிறகித்து பயிருக்கு 20 முதல் 40 கிலோ தழைச்சத்தை கிடைக்க செய்யும். பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது.

18.அசோஸ்பைரில்லத்தை எதுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?

அசோஸ்பைரில்லத்தை அனைத்துவகை பயிர்வகை பயிர்களை தவிர மற்ற பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் குறிப்பாக நெல், கம்பு, சோளம், பருத்தி மற்றும் காய்கறிவகை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்

19.அசோஸ்பைரில்லத்தை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்?

பயிர்களின் மகசூல் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கிறது
இரசாயண உரத்தின் அளவு 25 சதம் குறைக்கிறது.
மண்ணின் தன்மை பாதிக்கப்படாமல் பாதுகாத்து வளத்தை கூட்டுகிறது

விதை முளைப்புதறனை அதிகரிப்பதோடு பயிர்களுக்கு ஓரளவு வறட்சியைத்தாங்கும் தன்மையை அளிக்கிறது.

20.பாஸ்போ பாக்டீரியா என்றால் என்னனு பார்க்கலாமா?

பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் இது மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் கொடுக்கிறது இது பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது அனைத்துவகை பயிர்களுக்கும்; பயன்படுத்தலாம்

21.பாஸ்போபாக்டீரியாவை எந்நெந்த வகைகளில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?

விதை நேர்த்தி செய்யலாம், நாற்று மற்றும் கிழங்குகளை நனைத்து நடலாம், அடியுரமாக போடலாம்,

22.பாஸ்போபாக்டீரியாவை விதை நேர்த்தி செய்வது எப்படி என்று பார்கலாமா?

பாஸ்போபாக்டீரியா 20 கிராம் ஒரு கிலோ விதையுடன் நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யவும்.

23.பாஸ்போபாக்டீரியாவை அடியுரமாக எப்படி கொடுக்கலாம் என்று பார்க்கலாமா?

பாஸ்போபாக்டீரியாவை 2 கிலோவை 100 கிலோ மக்கிய உரத்துடன் கலந்து 5 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடிவைத்து பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும்பொழுது தூவிவிடலாம்.

24.பாஸ்போபாக்டீரியாவை நாற்றுக்களில் எவ்வாறு நனைத்து நடவு செய்யலாம் என்று பார்க்கலாமா?

பாஸ்போபாக்டீரியா அரைக் கிலோவை 15 முதல் 20 லிட்டர் நீரில் கரைத்து விடவும் பிறகு நாற்று, கிழங்கு வகைகளை நனைத்து நடவு செய்யலாம்.

25.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி என்றால் என்ன என்று பார்க்கலாமா?

காய்ப்புழுவிற்கு டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி என்பது இது ஒரு குளவி இனத்தை சேர்ந்தது தீமை செய்யும் பூச்சியின் முட்டைக் கருவை தின்று இறுதியில் கொன்று விடும். தீமை செய்யும் பூச்சிகளை முட்டை பருவத்திலே அழிப்பதால் பயிர்களில் சேதம் ஏற்படுவதில்லை

26.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?

டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை நெல், கரும்பு, பருத்தி, காய்கறி பயிர்கள் மற்றும் பயிர்வகைகள் மானாவாரி பயிர்களில் பயன்படுத்தலாம்

27.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி எந்தெந்த புழுக்களின் முட்டைகளை கட்டுப்படுத்துகிறது என்று தெரிந்து கொள்வோமோ?

டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி குருத்துப் புழு, இளங்குருத்துப்புழு, இடைக்கணுப்புழு, தண்டுபுழு மற்றும் காய்துளைப்பான் மற்றும் அமெரிக்கன் காய்ப்புழு போன்ற புழுக்களின் முட்டைபருவத்தை கட்டுப்படுத்துகிறது

28.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப்பற்றி பர்க்கலாமா?

டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பானது,எளியமுறைகளில் கையாளலாம், ரசாயணப்பூச்சி கொல்லிகளின் உபயோகம் 35 சதம்வரை குறையும்.

29.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?

டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி ஓரு ஏக்கருக்கு 5 மில்லி அட்டை பயன்படுத்தலாம். 1 மில்லி அட்டையிலிருந்து சுமார் 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் குளவிகள் வரை பொரித்து வெளிவரும்.அட்டை துண்டுகளை நூலினால் செடியின் இலையோடு கட்ட வேண்டும்
.
30.பெசிலியோமைசிஸ் என்பது என்னவென்று பார்க்கலாமா?

பெசிலியோமைசிஸ் என்பது பயிர்களில் வேரில் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சாணமாகும்.

31.பெசிலியோமைசிஸை எந்தெந்த பயிர்களில்
பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோமா?

பெசிலியோமைசிஸை அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்

32.பெசிலியோமைசிஸை பயன்படுத்தும் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

பெசிலியோமைசிஸை விதைநேர்த்தி செய்யலாம், அடியுரமாக போடலாம், நாற்று, கிழுங்கு நேர்த்தி செய்யலாம், வேரிமூலம் ஊற்றலாம்

33.பெசிலியோமைசிஸை எப்படி விதை நேர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாமா?

பெசிலியோமைசிஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பவுடரை ஆறிய அரிசி வடிகஞ்சி 100 மில்லி;யுடன் கலந்து விதைநேர்த்தி செய்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்.

34. பெசிலியோமைசிஸை அடியுரமாக எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?
பெசிலியோமைசிஸ் 2 முதல் 3 கிலோ பவுடரை 100 கிலோ இயற்கை உரத்துடன் ( சாண உரம்) கலந்து 10 முதல் 15 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடி வைத்து பிறகு அடியுரமாக இடலாம்.

உயிர்வேலி

*உயிர்வேலி *

இயற்கை நேசித்து இயற்கை விவாசாயத்தையும் மண்ணையும், கலாச்சாரத்தையும் காக்கும் விவசாயிகளே! வருமுன் காப்போம் என்கிற நம் முன்னோர்களுடைய ஞான கருத்தை ஏற்று வருகிற மழைக் காலத்தில் கிடைக்கும் உயிர் நீரான மழை நீரால் பலனடைய சில முன் நடவடிக்கைகளைப் மேற்கொள்வோம். அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

> உயிர்வேலி <வேலியே பயிரை மேயலாமா? என்பது முதுமொழி. ஆனால் வேலியே விவசாயினுடைய பொருளாதாரத்தை மேய்கிறது என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது. ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வழி விவசாயத்தின் பயன்களை உணர்ந்து ஆர்வமாய் இணைபவர்களுக்கு முதலில் கூறுவது செலவில்லாத வேளாண்முறை திட்டங்களை கையாள வேண்டும் என்பதுதான். இன்று இயற்கைவழி விவசாயம் செய்ய விரும்பும் பெரும்பாலோனோருக்கு பெரும் பொருளாதார விரையத்தைக் ஏற்படுத்துவதில் முதன்மையானது பாதுகாப்பு வேலி அமைக்கும் முறை. விவசாயத்தின் தொடக்கத்திலேயே பெரும் பொருளாதாரத்தை முடக்குவது செயற்கையானக்ஷக்ஷஹ முறையில் அமைக்கப்படும் கம்பிவேலிகள் தான். எனவே, விவசாயிகள் ஆரம்பத்திலேயே பொருளாதார முடக்கத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே வேலி அமைப்பதிலிருந்து விரையத்தை தவிர்த்தல் அவசியம். ஏக்கர் ஒன்றுக்கு செயற்கையான கம்பிவேலிகள் அமைப்பது ஒன்றரை இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை வகைக்கு ஏற்றாற் போல் அமைகிறது. இது சிறு குறு விவசாயியின் கனவிலும் சாத்தியமற்றது, இவ்வளவு ஏன் பெரு விவசாயிகளுக்கும் பெரிய பொருளாதார இழப்பாக அமைகிறது. அத்தோடு கம்பிவேலி முறையில் பராமரிப்புச் செலவுகள் உள்ளன, இவை நீடித்த பலனை தருவதுமில்லை. இவற்றிற்கெல்லாம் பெரும் தீர்வாக உயிர்வேலி அமைகிறது. இதையே தன்னைத் தேடி வரும் அனைத்து விவசாயிகளுக்கும் ஐயா நம்மாழ்வார் அவர்கள் அறிவுறுத்துவார். உயிர்வேலி என்பது ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் மாறுபடும் அந்தந்த மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்த உயிர்வேலி அமைப்பது அவசியமானது. உயிர்வேலி அமைப்பதின் முக்கிய நோக்கமாக விலங்குகளிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் மற்றும் இயற்கை சீற்றங்களிடமிருந்தும் விளைநிலங்களை காப்பதே ஆகும். உயிர்வேலியில் முள்வேலியே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் மரவேலி, புதர்வேலி என சூழலுக்கு ஏற்றாற் போல் அமைக்கப்படுகிறது. உயிர்வேலி அமைக்கும் முறையானது நிலத்தின் எல்லையிலிருந்து நிலத்தின் உட்பக்கமாக எட்டடி வரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லையிலிருந்து நான்கு அடி இடைவெளி விட்டு மூன்று அடி அகலத்திற்க்கு அகழி (வாய்க்கால்) அமைப்பது அவசியமாகும். அகழிக்காகத் தோண்டப்படும் மண் எல்லைப் பக்கமாக கொட்டப்பட்டு, அதில் உயிர்வேலி கன்றுகளை நடவுசெய்வதன் மூலம் கொட்டப்பட்ட மண்ணில் எளிதாக வேர்கள் ஓடி வளரச் செய்யும். இதில் அமைக்கப்பட்ட அகழியானது அருகில் இருக்கும் நிலத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன நஞ்சுகளை காற்றின் மூலமாகவோ மழைநீர் மூலமாகவோ நிலத்திற்குள் வருவதைத் தடுக்கிறது. அத்தோடு மழைநீரை அறுவடை செய்து நிலத்தடிநீரை உயர்த்தவும் பண்ணைக் குட்டை அமைக்கும் போது மழைநீரை கொண்டு செல்லும் வாய்க்காலாகவும் அமைத்துக் கொள்வது என பல்வேறு பயன்களைத் தரவல்லதாக அமைகிறது. பெரும்பாலும் உயிர்வேலியில் முள்மரங்களும் கால்நடைத் தீவன மரங்களுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றால் விவசாயிகள் தங்களுக்கான தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. வேலியில் பயன்படுத்தப்படும் முள்மரங்களாக முள்கிழுவை, பரம்பை மரம், இலந்தை மரம், யானைக்கற்றாழை, ஒத்தக்கள்ளி, காக்காமுள், காரை, சூரை, சங்கமுள், கொடுக்காப்புளி, வெள்வேல், குடைவேல், வாதமடக்கி, பனைமரம் போன்ற உயிர்வேலிகள் உழவர்களுக்கு மட்டுமன்றி பறவை மற்றும் பிற உயிரினங்கள் வாழ வழி செய்கிறது. இதனால் வேளாண் நிலத்தின் ஓர் பன்மயச் சூழலை உருவாக்க முடிகிறது. ஆகியவற்றுடன் சவுண்டல், மலைவேம்பு, சவுக்கு, பீநாறி, நுனா ஆகிய நீள்குடை மரங்கள் காற்றின் வேகத்தைத் தடுத்து நிலத்தின் ஈரப்பதத்தை அதிகரிப்பதுடன் சாகுபடி செய்த பயிர்களை காக்கவும் செய்கிறது. இத்துடன் உயிர்வேலிகளில் பிறண்டை, முசுமுசுக்கை, வேலிப்பருத்தி, கோவக்கொடி, குறிஞ்சா கொடி, முடக்கத்தான், நொச்சி, சீந்தில் கொடி போன்ற மூலிகைகள் இயற்கையாகவே வளர்ந்து பலன் தரும். அதோடு சுரை, பீர்க்கு, பாகற்காய் என விவசாயிகள் தம் தேவைகளுக்கும் பயிரிட்டு பயனடைய முடியும். மண் அரிப்பை தடுக்கும் பனைமரம், வெள்வேல், குடைவேல், கொடுக்காப்புளி, போன்ற மரவேலிகளால் உயிர்மண் என்றழைக்கப்படும் நிலத்தின் மேல்மண் பெரும் மழையால் காற்றால் அடித்துச் செல்லப்படுவது தடுக்கப்படுகிறது எனவே நிலம் தன் வளத்தை இழக்காது. சவுண்டல், அகத்தி, முள்முருங்கை, கிளாரிசெடியா (உரக்கொன்றை), மலைக்கிழுவை, ஆமணக்கு ஆடாதொடை, நெய்வேலி காட்டாமணக்கு போன்றவை வேலிகளில் அமைப்பதன் மூலம் கால்நடைத் தீவனமாகவும் நிலத்திற்கான உரச்செடிகளாகவும் எண்ணற்ற வகைகளில் பயனளிக்கிறது. சமீப காலங்களில் உழவர்கள் தமக்கான உயிர்வேலிகளைத் தவிர்த்து சீமைக்கருவேல் மரத்தை வேலியாக அமைத்தனர். அவை நிலத்தடி நீரை உறிஞ்சியும் காற்றின் ஈரப்பத்தை உறிஞ்சியும் மழை பெய்யா சூழலை உருவாக்கி பெரும் வறட்சியை உண்டாக்கிவிட்டது. எனவே நம் மண்ணுக்கேற்ற சூழலுக்கேற்ற உயிர்வேலிகள் அமைப்பது அவசியமாகிறது. சரியாக மழைக்காலங்களில் உயிர்வேலி அமைப்பதால் தொடக்கத்தில் மழை நீர் வழியாக உயிர் பிடித்துப் பின்னர் வறட்சி தாங்கி, நீண்ட பலன் தரும் அரணாக உயிர்வேலி அமையும். - “வானகம்” இரா.வெற்றிமாறன் - 9566667708 .

பூச்சிகளை வளர விடுங்க

இந்த பூச்சிகளை வளர விடுங்க…

👉 பொதுவாக பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் புழுக்கள் பற்றி விவசாயிகளுக்கு தெரிந்திருக்கும்.

👉 ஆனால் நன்மை செய்யும் பூச்சிகள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

👉 அப்படி நன்மை செய்யும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் காணப்படும்.

👉 எனவே அந்த பூச்சிகளை அடையாளம் கண்டு, அவற்றை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.

வயலுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் :

தட்டான் இனங்கள்:

🐞 தட்டான் மற்றும் ஊசி தட்டான் போன்ற பூச்சிகள் வயல்களிலும், வானிலும், நீர்நிலைகளின் மீதும் பறந்து கொண்டே இருக்கும்.

🐞 இந்த பூச்சிகள் வயல்களில் பறந்துச் செல்லும் கொசு மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன.

🐞 தட்டான்கள் தனக்கான இரையை சுற்றிவளைத்து தேடும் திறன் கொண்டதால், வயல்களில் உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இளம் புழுக்களை தேடிப்பிடித்து உண்ணும்.

பொறி வண்டு:

🐞 பொறி வண்டுகளில் தாய்ப் பூச்சிகள் பொதுவாக மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் உடலில் கரும்புள்ளிகளுடன் காணப்படும்.

🐞 இதன் வாழ்நாள் 42 முதல் 70 நாள்கள். இந்த வண்டுகள் காய்ப் புழுக்கள், அதன் முட்டைகள், அசுவினி தத்துப் பூச்சிகள், வெள்ளை
அசாசின் வண்டு:

🐞 இந்த வண்டுகள் பொதுவாக நன்செய், புன்செய் பயிர்களில் திடீரென அதிகமாக காணப்படும்.

🐞 அசாசின் வண்டு கழுத்தில் 3 முட்டைகள் இருக்கும். இது 35 நாள்கள் வரை உயிர் வாழக்கூடியது.

🐞 இவைகள் அந்துப் பூச்சிகளையும், புழுக்களையும் தேடி அழிக்கும்.

🐞 உருவத்தில் தன் அளவை விட பெரியதாக உள்ள பூச்சிகளையும் தாக்கும் தன்மை கொண்டது.

சிலந்திகள்:

🐞 சிலந்திகளில் பல வண்ணங்களில் உள்ள பல வகையான சிலந்திகள் அனைத்தும் நன்மை செய்யக்கூடியவை.

🐞 இதுவும் உருவத்தில் தன்னை விட பெரிய பூச்சிகளையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

நீள கொம்பு வெட்டுக்கிளி:

🐞 இந்த பூச்சிகள், தன் உடலைக் காட்டிலும் சுமார் 2-3 மடங்கு நீளமுடைய கொம்பு போன்ற உணர் உறுப்பினைக் கொண்டு இருக்கும். இவைகள் பச்சை நிறமுடையது.

🐞 வெட்டுக்கிளி பொதுவாக மற்ற பூச்சிகளை மென்று விழுங்கும் வாய் உறுப்பைக் கொண்டது.

🐞 இவை பூச்சிகளின் முட்டைகள் மற்றும் தத்துப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும்.

பெதிலிட்ஸ் குளவி:

🐞 பெதிலிட்ஸ் குளவிகள் கருப்புநிறம் உடையது. சிறு எறும்புபோல் இருக்கும்.

🐞 இந்த குளவிகள் காய்ப்புழுக்களை நினைவு இழக்கச் செய்து, அதன் மேல் தன் முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்து, காய்ப்புழுக்களை அழிக்கின்றன.

டாகினிட் ஈ:

🐞 டாகினிட் ஈக்கள் 7 நாட்கள் வரை வாழக்கூடியது.

🐞 இவைகள் கருப்பு அல்லது கருநீலத்தில் இருக்கும்.

🐞 இவைகள் காய்ப்புழுக்களின் மேல் 2 முதல் 4 முட்டைகள் இடும்.

🐞 இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் சிறிய புழுக்கள் காய்ப்புழுக்களஅழிக்கும்.

இந்த நன்மை தரும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதன் மூலம் வயல்களில் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் வளர்ச்சியை குறைக்க முடியும்.

மீன் வளர்ப்பு

fish-rearing

இன்று ஒரு தகவல் மீன் வளர்ப்பு🐬🐟🦈 பற்றிய கட்டுரை.:

 

 

மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள, நீர் வேளாண்மை எடுத்துரைக்கிறது. இதனால் அதிக இடர்பாடுகளின்றி, குறைந்த செலவில் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம்.

மீன் பண்ணைக்குரியக் காரணிகள்தொகு

குளம் அமைக்கத் தகுதியான இடம். பாறைகள் இல்லாமல், அதிக மேடு பள்ளங்கள், தாவரங்களின்றி, சமமான சிறிதளவு சாய்தளத்தோடு இருத்தல் நல்லது. மண்ணின் கார அமிலத்தன்மை (PH) 6.5 முதல் 9.00 வரை இருக்கும் நிலங்கள், கெண்டை மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை ஆகும்.குளம் அமைக்கத் தகுதியான இடம் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். களிமண், வண்டல்மண், மணல் ஆகியன கலந்த மண் வகை கொண்ட நிலம், மீன் பண்ணை அமைக்கச் சிறந்தது. களியின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலங்களில், நீர்க்கசிவு மூலம் நீர் இழப்பு அதிக அளவு ஏற்படும். எனவே சுமார் 30 முதல் 40 சதவீதம் களித்தன்மையுடைய நிலம், மீன் பண்ணைகள் அமைக்க ஏற்றது. எனவே தாழ்வான நிலப்பகுதியில் நீர் தேங்கும் நிலங்கள், களர் நிலம், களர் மற்றும் உவர் மண் தன்மை கொண்ட நிலங்களையும் கெண்டை மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் ஆதாரங்களான ஆறுகள், குளங்கள் மற்றும் நல்ல தரமான நிலத்தடி நீர்வளம் கொண்ட பகுதிகள் மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை. மீன் பண்ணைக்கான நீர் ஆதாரம் ஏரி, குளம், மற்றும் ஆறு போன்றவைகளாக இருப்பின் குறைந்த பட்சம் அவற்றிலிருந்து 6 மாத காலத்திற்கு நீர் கிடைக்குமாறு இருத்தல் நல்லது.நீரை வடிப்பிற்குத் தேவையான வடிகால் வசதிகளும், சாலை வசதிகள் தொடர்பு கொண்ட இடமாகவும் இருந்திடல் வேண்டும்.

குறிப்பிடப்பட்ட தகுதிகளில் ஏதேனும் குறைந்திருப்பின், சற்றுக்கூடுதல் செலவுகள் செய்து, அத்தகைய இடங்களிலும் மீன் பண்ணை அமைக்கலாம்.

மீன்குளங்களின் அமைப்பு

மீன்குள வடிவம்:ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச.மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம். குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது, அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு, செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

மீன்குள உருவாக்கம்:பெரும்பாலான மீன் வளர்ப்புக் குளங்கள், தோண்டி கரை அமைக்கப்பட்ட குளங்களாகவே உள்ளன. இத்தகைய குளங்கள் அமைத்திட குறைவான செலவே ஆகிறது. ஒரு இடத்தைக் குறியிட்டு அதில் ஓரளவிற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, பின்னர் தோண்டி எடுத்த மண்ணைக் கொண்டே குளங்களுக்குக் கரை அமைத்திடலாம். இம்முறையில் ஒரு ஏக்கர் குளம் அமைத்திட சுமார் ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை செலவாகிறது. இத்தகையக் குளங்களின் பயன் என்னவெனில், பிற்காலத்தில் மீன் வளர்ப்புத் தொழிலைத் தற்காலிகமாக மாற்ற நினைத்தால், கரை மண்ணை குளத்தினுள் நிரப்புவதன் மூலம், விவசாய நிலமாக மாற்றிவிடலாம்.

மீன்குள நீர்வரத்து:குளங்களின் கரைகளை அமைக்கும் போது, நீர் உள்(வரத்து) மடை மற்றும் நீர் (வெளியேற்ற) வடிமடை போன்ற அமைப்புக்களை அமைப்பது நல்லது. பெரும்பாலும், ஆழ்துளைக் கிணறு வகை கொண்ட பண்ணை களில் நிலத்தடி நீர், குழாய் மூலமே பாய்ச்சப்படுகிறது. அதனால் அத்தகைய சூழல்களில் உள்வரத்துக் குழாய்களுக்கு தடுப்பு வலைகள் தேவையில்லை. ஆயினும் குளம், ஆறுகள், கால்வாய், போன்ற வெளிநீர் நிலைகளிலிருந்து, நீர் எடுத்து மீன்வளர்ப்புக் குளங்களுக்குப் பாய்ச்சும் போது, உள்வரத்துக் குழாய்களிலும் கண்டிப்பாக தடுப்பு வலைகள் வைக்க வேண்டும்.

தடுப்பு வலை::இது தவிர அனைத்து குளங்களிலும், வடிமடை குழாய்களுக்கு, தடுப்பு வலைகள் அவசியமான ஒன்றாகும். குளம் அமைக்கும் போது, குளத்தின் அடித்தளத்தை, மேடு பள்ளமின்றி வடிமடைப்பகுதியை நோக்கி, சிறிதளவு சரிவுடன் (1:300 என்ற விகிதாச் சாரத்தில்) அமைத்தல் வேண்டும். இதனால் தேவையான போது, குளத்துநீரை வடிப்பது எளிதாகும். அதுமட்டுமின்றி குளங்களின் அடிமட்டத்தில் சேரும் கழிவுகளும், குளம் முழுவதும் பரவாமல் வடிமடை பகுதியிலேயே அதிகமாக சேரும்.

மீன்குளக் கரை:குளத்தின் கரை அமைக்கும் போது, கரையின் உயரத்தை, குளத்தில் தேக்க இருக்கும் அதிகபட்ச நீர் மட்டத்தை விட, குறைந்த பட்சம் 1½ அடி உயரம் அதிகமாக இருக்குமாறு அமைத்திட வேண்டும். குளம் வெட்டும் போது, கரையின் பக்கச்சரிவுகளை மண்ணின் தன்மைக்கேற்ப கரையின் உயரம் மற்றும் சாய்தளத்தின் அடிப்பகுதியின் அகலம் 1: 1½ அல்லது 1:2 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும்.

தேவையான அளவுக்குக் களித்தன்மை கொண்ட நிலங்களில் 1: 1½ என்ற விகிதம் போதுமானது. கரையின் வெளிப் பக்கச் சரிவினை, மண்ணின் தன்மைக்கேற்ப 1:1 அல்லது 1: 1½ என்ற விகிதத்தில் அமைத்துக் கொள்ளலாம். குளத்தின் ஆழம் 6 முதல் 8 அடி அளவிற்கு இருப்பது நல்லது.

கரையின் மேற்பகுதியின் அகலம் 4 முதல் 6 அடி என்ற அளவில் இருப்பது நல்லது. பண்ணையின் சுற்றுப்புறக் கரை, வண்டிகள் செல்வதற்கு வசதியாக, கூடுதல் அகலத்துடன் அமைக்கப்படுதல் வேண்டும். குளங்கள் அமைப்பதற்கு வேலையாட்களை பயன்படுத்துவதை விட, இயந்திரங்களை பயன்படுத்தும்போது செலவுகள் குறையும்.

பெரும்பண்ணை: சற்று அதிக பரப்பளவில் மீன் பண்ணைகளை அமைக்கும் போது, மீன் வளர்ப்புக்குளம்(இருப்புக்குளம்) மட்டுமின்றி, நுண்மீன்குஞ்சு வளர்ப்புக் குளமும்,இளம்மீன் குஞ்சுகள் வளர்ப்புக் குளமும் பண்ணைகளில் அமைத்துக் கொள்ளலாம். இத்தகைய குளங்களை 0.1 ஏக்கர் பரப்பளவு முதல் 0.25 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் 5 முதல் 6 அடி ஆழம் கொண்டவையாகவும் அமைத்துக் கொள்ளலாம். இத்தகைய குளங்கள், நமது பண்ணைக்குத் தேவையான மீன் குஞ்சுகளை, குறைந்த செலவில் தட்டுப்பாடின்றி நமது பண்ணையிலேயே வளர்க்கவும். இவை, விற்பனை எடையை அடையாத மீன்களைப் பராமரிக்கவும் உதவும்.

மீன்வளர்ப்புக் குளம்

மீன்களைக் குளங்களில் இருப்புச் செய்வதற்கு முன், குளங்களை முறைப்படித் தயாரிப்பது, மீன் வளர்ப்பில் இன்றியமையாத ஒரு அடிப்படைப் பணியாகும். மீன் வளர்ப்புக் குளங்களில் அதிக உற்பத்தியைப் பெறுவதற்குப் பண்ணை மேலாண்மை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவிற்குக் குளங்களை முறையாகத் தயார் செய்தலும் முக்கியமாகும்.

மீன் வளர்ப்புக் குளங்களைத் தயாரித்தல்

குளங்களைக் காயவிடுதல்வண்டல் பொறுக்குகளை அகற்றுதல்உழவு செய்தல்சுண்ணாம்பு இடுதல்உரமிடுதல் – அ.இயற்கை உரமிடல், ஆ.செயற்கை உரமிடல்மீன்குஞ்சுகளை இருப்புச் செய்தல்.

1.குளங்களைக் காயவிடுதல்

 

வெடிப்பு நிலம்

நீர்வடித்தலின் அவசியம்:குளங்களில் மீன்களை அறுவடை செய்த பின்பு நீரை முழுமையாக வடித்துவிட்டு, குளங்களின் அடிப்பகுதியில் வெடிப்புகள் உண்டாகும் அளவிற்கு, குளங்களை வெயிலில் நன்றாகக் காயவிட வேண்டும். இதனால், குளங்களின் அடிப்பகுதியிலுள்ள அங்ககக் கழிவுகளும், சேற்றிலுள்ள நச்சுயிரினங்களும் அழிக்கப்படுவதோடு, அடிப்பகுதியிலுள்ள நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. குளத்தை வடித்த நிலையில் கரிய நிறத்துடனும் துர் வாடையுடனும் காணப்படும் அடிப்பகுதி, காய்ந்த பிறகு அங்குள்ள நச்சுத்தன்மை குறைவதால், நிறம் மாறி துர்வாடையின்றி இருக்கும். குளங்களை வருடம் ஒருமுறை நன்கு காயவிடுவதால், குளங்களின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பராமரிக்கலாம்.

2.வண்டல் பொறுக்குகளை அகற்றுதல்

குளங்களின் அடிப்பகுதியில், அதிக அளவிற்கு உரச்சத்துக்கள் இருப்பது, குளங்களில் அதிக அளவில் பாசிபடர்வுகள் தோன்றி, நீர் மாசுபடுவதற்கும் அடிப்பகுதியில் நச்சுத்தன்மை ஏற்படுவதற்கும் காரணமாக அமையும். எனவே குளங்கள் நன்றாக காய்ந்த பிறகு, வண்டல் கலந்த மேல் மண்ணை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

3.உழவு செய்தல்

குளத்தயாரிப்பில் அடுத்த கட்டமாக, குளங்களை நன்றாக உழுதல் வேண்டும். சுமார் 10 முதல் 15 செ.மீ ஆழம் வரை, உழுவதால் அடிமட்ட மண் மேலே வருகிறது. இதனால் குளத்தரையின் கீழ் சேர்ந்துள்ள கழிவுகள், வெளிப்படுத்தப்பட்டு அவற்றிலுள்ள நச்சுயிரிகள் அழிக்கப்படுவதோடு, நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. எனவே, குளங்களை வருடம் ஒரு முறை நன்கு காயவிட்டு உழுவு செய்வதால், குளத்திலுள்ள மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டுத் தூய்மையடைகிறது.

4.சுண்ணாம்பு இடுதல்

நன்மைகள்: குளங்களுக்கு சுண்ணாம்பு இடுவது, பல்வேறு நல்விளைவுகளை ஏற்படுத்துகிறது.

நீருக்கு போதுமான கார, கடினத்தன்மைகளை அளித்தல்நச்சுயிரிகளை அழித்தல்குளத்தின் அடிப்பகுதியில் ஏற்படும் நச்சுத்தன்மைகளை குறைத்தல்நீருக்கு ஓரளவு நிலையான கார அமிலத்தன்மையை அளித்தல்நீரில் கலங்கல் தன்மையையும், பாசிப் படர்வுகளையும் குறைத்து நீரில் ஒளி ஊடுருவும் ஆழத்தை அதிகரித்து, அதிக அளவில் உயிர்வளி உற்பத்தி ஏற்படுதல்.

இடும் அளவு: மீன் வளர்ப்புக்குளங்களுக்கு இட வேண்டிய சுண்ணாம்பின் அளவு, மண்ணின் கார அமிலநிலை, குளங்களில் சேரும் கழிவுகளின் அளவு போன்றவற்றிற்கு ஏற்ப மாறுபடுகிறது. மிதமான கார, அமிலத்தன்மை கொண்ட மண்ணிற்கு, ஏக்கருக்கு 80 முதல் 120 கிலோகிராம் சுண்ணாம்பு பரிந்துரைக்கப்படுகிறது. உழவு செய்தபின் குளங்களில், பரவலாக சுண்ணாம்பை தூவி விட வேண்டும். குளத்தின் பள்ளமான பகுதிகளிலும், வண்டல் கழிவுகள் அதிகம் சேரும் இடங்களிலும் அதிக அளவில் சுண்ணாம்பு இட வேண்டும்.

5.உரமிடுதல்

அ)இயற்கை உரமிடல்,ஆ)செயற்கை உரமிடல்

அ)இயற்கை உரமிடல்

 

சாணம்

 

கோழிஎரு

குளங்களுக்குச் சுண்ணாம்பு இட்ட, ஒரு வாரத்திற்குப் பிறகு சுமார் 1 அடி வரை நீர் நிறைத்து, பின்னர் குளத்திற்கு அடியுரமாகச் சாணம் அல்லது கோழி எரு இடலாம். ஒரு எக்டர் பரப்பளவு கொண்ட குளத்திற்கு வருடத்திற்கு சுமார் 12 முதல் 15 டன்கள் வரை சாணமோ அல்லது 5 டன்கள் என்ற அளவில் கோழி எருவோ இட வேண்டும். சாணத்தைப் பொறுத்த மட்டில் உலர்ந்த சாணத்தைவிட மட்கிய அல்லது ஈரமான சாணம் மேலானது. கோழி எருவைப் பொறுத்த மட்டில் மக்கிய ஆழ்கூள எரு (Deep Litter) நல்லது. மொத்தப் பரிந்துரையில் 6ல் ஒரு பங்கை அடியுரமாக நீரில் நன்கு கரைக்க வேண்டும். மொத்த அளவில் ஆறில் ஒரு பங்கை அடியுரமாக இட்ட பின் மீதத்தை வளர்ப்புக் காலத்தில் குளங்களுக்கு பகிர்ந்து மேலுரமாக இடலாம்.

மீன் கொல்லி:இழுவலையால் அழிக்க இயலவில்லையெனில், மீன்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். இதற்கென இலுப்பைப் புண்ணாக்கு, பிளீச்சிங் பவுடர், குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. மீன் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது, அவற்றை குளங்களுக்கு சாணமிடுவதற்கு முன்னரே போட வேண்டும். பூச்சிக்கொல்லியின் விஷத்தன்மை சுமார் இரண்டு அல்லது மூன்று வார காலம் நீரில் இருக்கும். எனவே, குளத்தில் மீன்கொல்லிகளின் நச்சுத்தன்மை முழுமையாக நீங்கிய பின்னரே, மீன் குஞ்சுகளை இருப்புச் செய்தல் வேண்டும்.

ஆ)செயற்கை உரமிடல்

பரிந்துரை:இயற்கை உரமிட்ட பின்பு, சுமார் பத்து நாட்கள் சென்றதும் நீர் மட்டத்தை, சுமார் 1மீட்டர் அளவிற்கு உயர்த்த வேண்டும். பின்னர் அடியுரமாக, பரிந்துரை செய்யப்பட்ட இரசாயன உரங்களைக் கரைக்க வேண்டும். ஒரு எக்டர் குளத்திற்கு வருடத்திற்கு, 200 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட், 40 கிலோ பொட்டாஷ் என்ற அளவில் செயற்கை உரங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன.நிலம் களர் மண்ணாக இருப்பின், யூரியாவிற்கு பதிலாக அதே அளவு தழைச்சத்து அளிக்கக்கூடிய அளவிற்கு அமோனியம் சல்பேட் உரம் இடுவது நல்லது.

இருப்புக் குளம்:பரிந்துரை செய்யப்பட்ட உரத்தில், ஆறில் ஒரு பகுதியை நீரில் கரைத்து குளம் முழுவதும் பரவலாக நன்கு தெளிக்க வேண்டும். மீதத்தை மாதாமாதம் (அல்லது) 15 நாட்களுக்கு ஒரு முறை பிரித்துக் குளத்திற்கு இட வேண்டும். இவ்வாறு முறையாக நன்கு தயார் செய்யப்பட்ட குளத்தில், செயற்கை உரமிட்ட சுமார் 7 நாட்களில் தாவர நுண்ணுயிர் மிதவைகளும், விலங்கு நுண்ணுயிர் மிதவைகளும் தோன்றி நீரின் நிறம், பழுப்பு கலந்த பச்சை நிறமாகக் காட்சியளிக்கும். இந்நிலை மீன்குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு மிகவும் உகந்ததாகும்.

மீன்களை அழித்தல்:களை மீன்கள் ,பகை மீன்கள் இருக்கின்ற குளங்களில் வளர்ப்பு மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன்பு , பலமுறை இழுவலை கொண்டு இழுத்து இத்தகைய தேவையற்ற மீன்களை அழித்துவிட வேண்டும். இல்லையெனில், களை மீன்களால் வளர்ப்பு மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு பகை மீன்கள் ஏற்படுத்தும் இழப்பால் வளர்ப்பு மீன்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.

நன்னீர்மீன்களை இருப்புச் செய்தல்

 

நன்னீர்மீன்குஞ்சுகள்

வளர்ப்புக் காலம்:குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன்னர், நாம் திட்டமிட்டு இருக்கக்கூடிய வளர்ப்பு காலம், குளங்களுக்கு நீர் கிடைக்கும் காலத்தின் அளவு தீவனத்தின் தன்மை மற்றும் எதிர்பார்க்கும் அறுவடை எடை போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். வளர்ப்புக் காலம் சுமார் 10 மாதங்கள் என்று வைத்துக்கொண்டால், நாம் இடும் உரம் மேலுணவு இவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு எக்டர்க்கு 5,000 முதல் 10,000 வரை விரலளவு வளர்ந்த குஞ்சுகள் என்ற அளவில் இருப்புச் செய்யலாம்.

மீன்குஞ்சுகள்:மீன்குஞ்சுகளைப் பொறுத்தமட்டில், குறைந்தபட்சம் 3 – 4 அங்குல நீளம் வளர்ந்தவையாக இருத்தல் நல்லது. தவிர சுமார் 6 மாத காலம் முதல் ஓராண்டு வயதான வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்ட குஞ்சுகளை எக்டருக்கு 5000 – 6000 குஞ்சுகள் இருப்புச் செய்யலாம். வளர்ப்புக் குளத்தில் அதிக காலம் பராமரிக்கப்பட்ட மீன்கள், இருப்புக் குளங்களில் இருப்புச் செய்யப்படும்போதே, சுமார் 15 முதல் 20 செ.மீ நீளத்தையும் சுமார் 50 முதல் 100 கிராம் எடையையும் அடைந்துவிடும். இத்தகைய வளர்ந்த குஞ்சுகள், சுமார் 3 முதல் 5 மாதங்களில் சராசரியாக ½ கிலோ எடைக்கும் அதிகமாக வளரும்.

எண்ணிக்கையடர்த்தி:எனவே நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகளைக் குளங்களில் இருப்புச் செய்யும்போது அவற்றை சுமார் 6 மாதங்களிலேயே அறுவடை செய்துவிடலாம். எனவே, மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் கிடைக்கும் கால அளவு, விற்பனைக்கான வாய்ப்புகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, வளர்ப்புக் காலத்தை நிர்ணயிக்க் வேண்டும். மீன்களின் வளர்ப்புக்காலம், நாம் குளங்களுக்கு இடும் உரம், மேலுணவு இவற்றைக் கருத்தில் கொண்டு குஞ்சுகளின் இருப்படர்த்தியை நிர்ணயிக்க வேண்டும்.

மீன் இனங்களின் விகிதம்:குளங்களில் பல இன மீன்களை இருப்புச் செய்யும் போது, இன விகிதாச்சாரம் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக, முன்பு குறிப்பிடப்பட்டுள்ள பல இனக் கெண்டை மீன்களை இருப்புச் செய்யும்போது, தாவரக் கழிவுகளையும், மக்கிய கழிவுகளையும் உண்ணும் மீன் இனங்களான வெள்ளிக்கெண்டை, ரோகு, மிர்கால், சாதாக்கெண்டை போன்ற இனங்களை அதிக அளவில் இருப்புச் செய்தல் வேண்டும். புல், நீர்த் தாவரங்கள், காய்கறிக் கழிவு கிடைக்கும் இடங்களிலுள்ள குளங்களில் புற்கெண்டை இனங்களை, சுமார் 5 விழுக்காடு இருப்புச் செய்யலாம்.சில மாதிரி இருப்பு விகிதாச்சாரங்களின் அட்டவணை வருமாறு;-

வளர்ச்சிக் காரணிகள்:மேற்கண்ட அட்டவணை, அனைத்து நீர் நிலைகளுக்கும் ஏற்றவை எனக் கூற இயலாது. ஏனெனில் மீன்களின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில்,

குளத்தில் இயற்கையிலேயே உற்பத்தியாகும் பல்வேறு நுண்ணுயிர்த் தாவர இனங்களும்,பாசி இனங்களும்,விலங்கின நுண்ணுயிர் மிதவை இனங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன.இத்தகைய இயற்கை உயிரினங்களின் உற்பத்தி,மண்ணிலுள்ள உரச்சத்து,அதன் கார அமிலத்தன்மை,தண்ணீரின் தன்மைகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது.எனவே, நமது குளத்தில் நமது சொந்த அனுபவங்களை இணைத்து, கூட்டுமீன் வளர்ப்பில் அதிக உற்பத்தி பெற, வெள்ளிக்கெண்டை இனத்தை இருப்புச் செய்வது இன்றியமையாதது. ஆனால் நடைமுறையி்ல் வெள்ளிக்கெண்டை இனத்திற்கு குறைந்த விற்பனை விலையே கிடைப்பதால், அம்மீன் இனம் இருப்புச் செய்யப்படுவுதில்லை.

மீன்குஞ்சுகளின் நிலை:மீன் குஞ்சுகளை வாங்கும்போது, நல்ல தரமான குஞ்சுகளைப் பார்த்து வாங்குதல் வேண்டும். உடல் ஊனம்,வெளிப்புற காயங்கள், செதில்கள் இழந்து இருத்தல், சுறுசுறுப்பின்மை, மெலிந்த நிலை ஒட்டுண்ணிகள் இருத்தல் போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் மீன் குஞ்சுகளை தவிர்க்க வேண்டும்.மீன் குஞ்சுகளை, மிதமான வெப்பம் நிலவும் காலை, மாலை, முன் இரவு வேலைகளில் இருப்புச் செய்வது நல்லது.

வெளிப்பண்ணைகளிலிருந்து வாங்கும் குஞ்சுகளை, உடனே குளங்களில் விடாமல், அவற்றை நமது நீர்நிலையில் சுழலுக்கு இணங்கச் செய்தல் வேண்டும். பின்னர் குஞ்சுகளை 0.05 விழுக்காடு பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலிலோ, 2 முதல் 3 விழுக்காடு உப்புக்கரைசலிலோ, 2 முதல் 5 நிமிடக் குளியல் சிகிச்சை அளித்து, பின்னர் அவற்றைக் குளங்களில் இருப்புச் செய்தல் வேண்டும்.

தேன் தரும் இந்திய மரங்கள்

tree-root-irrigation

தேன் தரும் இந்திய மரங்கள்
1. மதுக்காரை– MADUKKARAI TREE,  RANDIA DUMTORUM – FAMILY: RUBIACEAE (மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிக தேன் உபயம் செய்பவை மதுக்காரை பூக்கள்)
2. நுணா  – TOGARY WOOD OF MADRAS: MORINDA COREIA – FAMILY: RUBIACEAE (தேனீக்களுக்கு தேவைப்படும் மகரந்தத் துகளை தாராளமாகத் தரும் நுணா பூக்கள்)
3. புளியன் மரம் – TAMARIND TREE, TAMARINDUS INDICA, FAMILY: CAESALPINIACEAE (புளியம் பூக்களின் தேன்குடம் எப்போதும் நிரம்பி இருக்கும்)
5. வில்வம் மரம் – BAEL TREE,  AEGLE MARMELOS,FAMILY: RUTACEAE (மகரந்தம் இரண்டையும் கொடையாகத் தரும்)
6. விளா மரம் – WOOD APPLE – FERONIA LIMONIA,FAMILY: RUTACEAE (இனிப்பானது, சுவை தரும் பானம் தயாரிக்கலாம்)
7. வேம்பு – NEEM – AZADIRACHTA INDICA – FAMILY: MELIACEAE ( லேசான  கசப்புள்ள தேனை ஏப்ரல் மே மாதங்களில் தரும்)
8. வாதநாராயணன் – WHITE GULMOHAR – DELONIX ELATA, FAMILY: CAESALPINACEAE (வண்டி வண்டியாய் மகரந்தத்தை வாரித் தரும் மரம்)
9. மாவிலங்கு – SACRED BARNA – CRATEVA MAGNA, FAMILY: CAPARITACEAE  (மார்ச் மாதத்தில் தேன் தரும்)
10. பூவரசு – PORTIA TREE,  THESPESIA POPULNEA, FAMILY: MALVACEAE (நிறைய மகரந்தம் தரும்)
11. புங்கம் – PUNGAN, DERRIS INDICA, FAMILY: FABACEAE (மார்ச் மாதத்தில் தேனீக்களுக்குக் கொண்டாட்டம் ! அது புங்கம் பூக்கும் காலம்)
12. புரசு – FLAME OF FOREST, BUTEA MONOSPERMA, FAMILY: FABACEAE,  (ஏப்ரல் மே மாதங்களில் தேனீக்கள் இந்த மரத்தை வட்டமிடும் காரணம் தேன்தான்)
13. மகிழம் – BULLET WOOD TREE – MIMUSOPS ELENGI, FAMILY: SAPOTACEAE  (ஏப்ரல் மே மாதங்களில் தனது தேன் குடங்களை நிரப்பி வைத்திருக்கும்)
14. குமிழ் மரம் –  KUMIZH TREE,  GMELINA ARBOREA, FAMILY: VERBANACEAE – (தேன் நிரம்ப உள்ள பூக்களைக் கொண்டது)
15. கடுக்காய் – YELLOW MYROBALAN, TERMINALIA CHEBULA, FAMILLY, COMBRETACEAE (தேன் உற்பத்திக்கு அனுசரணையானது)
16. கண்டல் – TRUE MANGROVE, RHIZOPHORA MUCRANATA, FAMILY: RHIZOPHORACEAE (இந்தத் தேன் நச்சுடையது என்கிறார்கள்; வங்க தேசத்தில் இதைத்தான் அதிகம் உற்பத்தி செய்கிறார்கள்)

உலக நாடுகளில் தேன் உற்பத்தியில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது; முதல் இடத்தில் இருப்பது சீனா.
இயற்கைத் தேன் ஏற்றுமதியில் நாம் 13 வது இடத்தில் உள்ளோம்;அதிலும் சீனா முதலிடத்தில் உள்ளது; ஏற்றுமதி, தரம், சுவை என்ற மூன்றிலும் முதலிடத்தில் உள்ளது சீனா.

பூமி ஞானசூரியன், செல்பேசி:+918526195370