Month: December 2017

கடைகளில் விற்கப்படும் மஞ்சள் தூள் பாக்கெட்டுகள் வேண்டாமே

curcumin

கடைகளில் விற்கப்படும் மஞ்சள் தூள் பாக்கெட்டுகள் வேண்டாமே…!!!

Curcumin…
தென்னிந்திய மக்கள் பயன்படுத்தும் அதிகபடியான மிளகாய் காரம் மற்றும் மசாலா பொருட்களால் வயிற்று புற்றுநோய் மிக அதிகமாக இருக்கவேண்டும் ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது ஏன் என்று ஆராய்ந்த டாக்டர்களுக்கு பிடிபட்டது மஞ்சளில் உள்ள curcumin எனப்படும் ஒரு வகையான வேதிபொருள் அப்புறம் என்ன….?
புற்றுநோய் மருந்தாக வெளிநாடுகளில் .

ஓசூர் மற்றும் பெங்களூருவில் உள்ள சில தனியார் பெருநிருவனங்கள் மஞ்சளில் உள்ள curcuminதனியாக பிரித்து டாலர்களாக பணம் சம்பாதிக்கின்றனர்

Curcumin ஐ பிரித்தெடுத்த பின்பு உள்ள மஞ்சளை தமிழகத்தில் உள்ள பிரபலமான மசாலா கம்பெனிகள் கீழ்கண்டவாறு மஞ்சள் தூளை தயாரிக்கின்றனர்
40% ரேசன் அரிசி ,
40%மக்காச்சோளம் ,
18% மஞ்சள்(சத்துபிரிக்கபட்ட)
02% chemical color agents இவைகளே மஞ்சள் தூளாக கலப்படம் செய்யப்பட்டு, வலம்வருகிறதுஅலங்காரமாக
அழகான பேக்குகளில் .

மஞ்சளை வாங்கி அரைக்கும் போது அவற்றின் நிரம் ஒருவித ஆரஞ்சு நிறமாக இருக்கும்
கடைகளில் வாங்கும் இவற்றை கவனியுங்கள் thick yellow நிறத்தில் இருக்கும் .

ஒரு குடும்பத்திற்கு 500 கிராம் மஞ்சள் அரைத்தால் போதுமானது ஒரு வருடத்திற்கு

இதற்காக நீங்கள் ஆர்கானிக் அங்காடிகளுக்கு ( ஸ்டோர்ஸ்களுக்கு) செல்ல தேவையில்லை மாறாக பணத்தை மிச்சம் செய்ய யோசியுங்கள் !!!

சரி எப்படி பட்ட மஞ்சளை தேர்ந்தெடுப்பது எப்படி ??? மஞ்சள் கிழக்கில் இரண்டு வகை உள்ளது ஒன்று விரலி மஞ்சள் மற்றொன்ரு கொட்டை மஞ்சள் ( கிழங்கு மஞ்சள் ) இதை நீங்கள் சரிசமமான இடையில் பலசரக்கு கடைகளில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளுங்கள்.

அதை வெயிலில் ஒரு நாள் காலை முதல் மாலை வரை முடிந்தால் வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்து அம்மிகல்லில் வைத்து சிறு சிறு துண்டுகளாக உடைத்து கொள்ளவும்.

அதற்கு பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக பொடியாக பொடித்து கொள்ளவும்.

இதற்கு நிகர் நீங்கள் எந்த ஆர்கானிக் கடைகளில் சென்றாலும் கிடைக்காது பணமும் மிச்சம் , உங்கள் ஆரோக்கியமும் பாதுகாக்கபடும் !!!

முருங்கை

முருங்கை

முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில் முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின்🍵 சாறு ரத்த அழுத்தத்தை💓 சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் 🥗உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.

அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

 

தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க விவசாயிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள்

தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை

தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க விவசாயிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள்.

தென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத்தரும் முக்கிய பிரச்சனைகளாகும்.
காய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வதை தடுக்க முடியாத பண்பாகும். எனினும் நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிர்கின்றன.

Continue reading

சூடோமோனாஸ் புளோரோசன்ஸ்

சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் pseudomonas flouresens

இது ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா ஆகும். இது தூள் மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இதன் மூலம் தீமை செய்யும் பல்வேறு பாக்டீரியாக்களும், தீமை செய்யும் பல்வேறு பூஞ்சாணங்களும் கட்டுப்படுத்தப்பட்டு நோய்களிலிருந்து பயிர்களை காக்கிறது.

சூடோமோனாஸ் நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், நிலக்கடலை, எள், காய்கறிகள், மஞ்சள், வாழை, தென்னை – உட்பட பல்வேறு பயிர்களில் ஏற்படும் இலைப்புள்ளி, இலைக்கருகல், குலைநோய், வாடல்நோய், நாற்றழுகல் மற்றும் கிழங்கு அழுகல் போன்ற பல்வேறு நோய்களை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது.

Continue reading

தென்னை- உங்கள் கேள்விகளும் பதில்களும்

தென்னை- உங்கள் கேள்விகளும் பதில்களும்
தென்னை- உங்கள் கேள்விகளும் பதில்களும்.

பூச்சி மற்றும் நோய் தாக்கம்

1. எலிகள் தென்னை மரத்தில் ஏறுவதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?

பெரிய தென்னைமட்டையை நடுவாக்காக கிழித்து ஒரு பகுதியை உச்சித்தண்டின் கீழ் சுற்றியும் மறுபகுதியை எதிர்திசையில் சுற்றவும்.
நடுத்தண்டில் 2-3 அடிக்கு, சீமைக் கருவேல் அல்லது முற்கம்பிகள் சுற்றி விடவும். இவ்வாறு அணில் மற்றும் எலிகளை கட்டுப்படுத்தலாம்.

2. பூக்கள் மற்றும் குரும்பை உதிர்வதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?’

பூ உதிர்வைத் தடுக்க உப்பை (2 கிலோ/மரம்) பூ நுனியில் தடவவும். மேலும் வேர் பகுதிகளுக்கு உப்பு போட்டு நீர் பாய்ச்சவும்.
வேப்ப எண்ணெய் தெளித்து பூ உதிர்வை குறைக்கலாம்.
சாம்பல் இடவும்
பூப்பதற்கு முன் பாத்தியில் கொழிஞ்சி மற்றும் எருக்கு இடவும்.

3. தென்னையில் காண்டாமிருக வண்டு பெருக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

தோப்பில், மண் பானைகளில் தண்ணீரில் ஆமணக்கு புண்ணாக்கு போட்டு வைக்கவும். மூன்று நாட்களுக்கு பிறகு அதன் மணத்தால் வண்டு ஈர்க்கப்பட்டு சாகிறது.
வளரும் குருத்து மற்றும் பக்கத்துப் பகுதிகளில் வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளிக்கவும்.

4. தென்னையில் சிவப்பு கூண் வண்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

கூண் வண்டு துளைத்த ஒட்டையை சுத்தம் செய்து, உப்பு போட்டு பஞ்சு கொண்டு அடைத்து வைக்கவும்.

5. தென்னை மரத்தண்டை கரையான் தாக்கத்திலிருந்து எவ்வாறு கட்டுப்படுத்துவது?

தென்னை மரத் தண்டின் 2 அடி உயரத்திற்கு சுண்ணாம்பு அடிக்கவும்
500 கிராம் உப்பை 5 லிட்டர் தண்ணீரில் கலக்க தண்டின் மேல் ஊற்றவும்
பண்ணைப் பறவைகள் வளர்த்து, கரையானை சாப்பிட விடவும்

6. தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

கொழிஞ்சி மற்றும் தக்கைப் பூண்டு வளர்த்து, உழுது விடவும்
வேப்பம் புண்ணாக்கு இட்டு தொழு உரம் இடவும்

7. தென்னையில் சாறு ஒழுகல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

ஒழுகும் இடத்தில் தண்டை சிறிதளவு வெட்டி விட்டு, சுத்தம் செய்து சுண்ணாம்பு தண்ணீர் ஊற்றவும்.

8. தேங்காய் எண்ணெயை தூசி இல்லாமல் சுத்தமாக, என்ன செய்ய வேண்டும்?

தேங்காய் எண்ணெயில் சிறிது சக்கரை இட்டு சுத்தப்படுத்தவும்.

9. தென்னையை தாக்கக் கூடிய பூச்சிகள் யாவை?

காண்டாமிருக வண்டு – ஒரிக்டெஸ் ரைனோசெரஸ்
சிலந்திப் பூச்சி – ஏசிரியா குயுரெரோனிஸ் (ஈரியோபைடு மைட்)
சிவப்பு கூண் வண்டு – ரின்கோபோரஸ் பெருஜினியஸ்
கருந்தலைப் புழு – ஒபிசினியா அரினோசெல்லா

10. தென்னை இலைகளில் எதனால் முக்கோண வெட்டு ஏற்படுகிறது?

காண்டாமிருக வண்டு முக்கோண வெட்டுகளை உண்டாக்கிறது. அவை இலைக் குருத்துகள் மற்றும் தென்னம்பாளைகளை சேதப்படுத்துகின்றன. மத்திய தென்னங் குருத்து வெட்டுப்பட்டு, ஒட்டைகளுடன், மென்ற நார் குருத்தின் அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

11. தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டு தாக்கத்தை எவ்வாறு கண்டறிவது ?

வண்டு, விரியாத குருத்து மற்றும் பாளைகளை சேதப்படுத்துவதால், 10-15% மகசூல் குறையும்.
சேதப்பட்ட குருத்து விரியும் போது, முக்கோண வெட்டு தெரியும்.
மத்திய குருத்து வெட்டப்பட்டு/சுருண்டு இருக்கும்
நன்றாக விரிந்த இலைகளில் சாய் சதுர வெட்டுகள் தென்படும்
மத்திய குருத்தின் அடிப்பகுதியில், வண்டு, மென்று தின்ற நார் ஒட்டியிருக்கும்.

12. காண்டாமிருக வண்டின் வாழ்க்கை சுழற்சி எத்தனை நாள்? எவ்வாறு காண்டாமிருக வண்டினை அறியலாம்?

முட்டை : குப்பை குழி அல்லது இலைகள் மக்கும் இடங்களில் 5-15 செ.மீ ஆழத்தில், நீள் வட்ட அழுக்கு வெள்ளை நிற முட்டைகள் காணப்படும். 8-18 வரை முட்டை பருவம், ஒரு பெண் வண்டு 140-150 முட்டைகள் இடும்.
கூண் வண்டு புழு பருவம் : புழுக்கள் குண்டாக, மந்தமாக வெள்ளை நிறத்தில் ‘சி’ வடிவத்திலும், காப்பி நிற தலையுடன் 5-30 செ.மீ ஆழத்தில் இருக்கும்.
கூட்டுப்புழுக்கள்: 0.3-1 மீ ஆழத்தில் மண் கூடுகளில் கூட்டுப்புழுக்கள் இருக்கும்
முதிர் வண்டு: காப்பிக் கருப்பு நிறம்/கருப்பு நிறத்தில் குண்டாக, தலையின் முன்னால் கொம்புடன் முதிர் வண்டு இருக்கும். ஆண் வண்டுகளுக்கு நீளமான, பெண் வண்டுக்கு குட்டையான கொம்பும் இருக்கும்.

13. தென்னையில் காண்டாமிருக வண்டு பிரச்சனைக்கு தீர்வு என்ன?

பழைய முறிந்த  தென்னை மரங்களை பிடுங்கி எரித்துவிட வேண்டும். வண்டு பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், குப்பைக் குழிகளில் உள்ள புழுக்களைப் கண்டு எடுத்து, அழிக்க வேண்டும். 0.01 % கார்பரில் மருந்தை வாரம் தோறும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தெளிக்கவும். 5 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு கரைத்து, மண் பாண்டங்களில் ஊற்றி வைக்கவும். முதிர் வண்டுகளைக் கவர்ந்து அழிக்க இது உதவும்.

14. காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த ஏதாவது உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகள் உள்ளதா? இருப்பின் அவை யாவை?

5 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு கலந்து, மண் பானைகளில் ஊற்றி, காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கவும்.
பேக்குளோவைரஸ் ஒரைசிடிஸ் ஏற்றப்பட்ட வண்டுகளை (15 எண்ணிக்கை/எக்டர்) தென்னந்தோப்பில் விடுவதன் மூலம், இலை மற்றும் உச்சி தண்டு சேதத்தை கட்டுப்படுத்தலாம்.
வேப்பங்கொட்டை பொடி + மணல் கலவையை (1 : 2) 150 கிராம்/மரம் தண்டு உச்சியின் மேற்பகுதியில், உட்பகுதியின் உள்ள மூன்று இலைகளின் அடிப்புறத்தில் இட வேண்டும்.

15. காண்டாமிருகவண்டு கட்டுப்பாடிற்கு என்ன பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தலாம்?

வேப்பம் புண்ணாக்கு பொடி+மணல் (1:2) @ 150 கிராம்/மரம் அல்லது வேப்பங்கொட்டை பொடி+மணல் (1:2) 150 கிராம்/மரம் கலவையின் உட்பகுதியின் மூன்று இலைகளின் அடிப்பகுதியில் இட வேண்டும்.
5 கிராம் 10 G போரேட் மருந்தை, துவாரங்கள் உடைய பாக்கெட்டுகளில் தண்டு உச்சியின் இலைகளில், உட்புறமாக உள்ள இரண்டு இலைகளில் அடித்தண்டில் படுமாறு போட்டு வைக்கவும். 6 மாத இடைவெளியில், வருடத்திற்கு 2 முறை மருந்து போட வேண்டும்
25 கிராம் செவிடால் + 200 கிராம் மணல் கலவையை ஏப்ரல்-மே, செப்டம்பர்- அக்டோபர் மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் ஒரு வருடத்திற்கு, 3 முறை இட வேண்டும். 10.5 கிராம் அந்து உருண்டகளை (3 உருண்டகள்) மணலால் மூடி 45 நாட்களுக்கு ஒரு முறை இட வேண்டும். – கேரளா வேளாண்மை பல்கலைக் கழகம்.

16. காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த பின்பற்றப்படும் கைவினை முறைகள் யாவை?

பிளவு பட்ட தென்னந் தண்டுகள் மற்றும் இலைகளை புதிய கள் பானம் செலுத்தியும், கள் பானைகளை தோப்பில் வைத்து வண்டுகளை ஈர்த்து அழிக்கலாம்.
ஒவ்வொரு அறுவடையின் போதும், உச்சித்தண்டை கண்காணித்து, முதிர் வண்டுகளை எடுத்து, அழித்து விட வேண்டும்.
கோடை காலத்தில் முதல் மழைக்கு பின்பும், பருவ மழைக்கு பின்பும், விளக்குப் பொறி வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
ரைனோ லூர் இனக் கவர்ச்சிப் பொறியை ஒரு எக்டருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் பொருத்தி வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

17. கொப்பரை மகசூல் அதிகமாக என்ன செய்ய வேண்டும்? கொப்பரை அளவு எதனால் குறைகிறது?

ஈரியோபைடு சிலந்தி பூச்சி தாக்கத்தினால், கொப்பரை அளவு குறைகிறது.
இதனைக் கட்டுப்படுத்த கொப்பரை மகசூலை அதிகரிக்கலாம்.

18. தென்னையில், 2-3 மாத குரும்பைகளில் எதனால் முக்கோண மஞ்சள் புள்ளிகளும், முதிர்ந்த குரும்பைகளில் கோந்து வெளியேற்றமும் காணப்படுகிறது?

ஈரியோபைடு சிலந்தி பூச்சி இந்த அறிகுறிகளை தோற்றுவிக்கிறது
முதல் பருவத்தில் அல்லி வட்ட இதழ்களுக்கு அருகில் முக்கோண மஞ்சள் புள்ளிகள்
காய்ந்த திசுக்கள்
காய்களில் காப்பி நிற சுவடுகள், குறுக்கு பிளவுகள் மற்றும் தென்னை மட்டையில் பிளவுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோந்து வடிதல்
பிளவுகளுடன், கூடிய கடினமான மட்டைகள் உடைய உருவமாற்றமடைந்த காய்கள்
2-3 மாத குரும்பைகளில், முக்கோண மஞ்சள் புள்ளிகள் தென்படும். பின்னர் காப்பி நிறத்தில் மாறும். தாக்கம் தீவிரமானால் குரும்பைகள் உதிரும்.

19. தேங்காய் மட்டையின் தரத்தை சிலந்தி பூச்சி தாக்கம் எவ்வாறு பாதிக்கிறது?

குரும்பைகளின் ஓடுகளில் காப்பி நிற சுவடுகளை ஏற்படுத்துகிறது. குரும்பைகள் வளர வளர, காப்பி நிற சுவடுகள், காய்ந்த கரும்புள்ளிகளாக மாறி குறுக்கு பிளவு உண்டாகிறது. சீரான வளர்ச்சி இல்லாததால் குன்றிய சிறிய காய்கள் கிடைக்கின்றன. கொப்பரை மகசூல் குறைகிறது. தீவிரமான தாக்கம் இருக்கும் போது, தேங்காய் தரம் குறைவதோடு, அவற்றை உறித்து எடுக்கும் செலவும் அதிகமாகிறது.

20. எவ்வாறு சிலந்தி பூச்சியை கண்டறியலாம்?

இளங்குஞ்சுகளும் முதிர் பூச்சிகளும், பழுப்பு நிறத்தில் நீண்ட உடலுடன் புழு போன்று காணப்படும்.

21. தென்னையில் நிரந்தரமாக சிலந்தி பூச்சியைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

2% வேப்பெண்ணெய் + பூண்டு கரைசல் அல்லது நீமசால் T/S 1% மருந்தை @ 4 மில்லி/லிட்டர் தண்ணீர் அல்லது 0.4% வெட்டபிள் சல்பர் பரிந்துரைக்கப்படுகிறது.
குறிப்பு – 10 லிட்டர் 2% வேப்பெண்ணெய் + பூண்டு கரைசல் (300 மில்லி தண்ணீரில் சார் எடுத்தது) தயாரிக்க, 50 கிராம் சோப்புக் கட்டியை (500 மில்லி தண்ணீர் கரைத்த) 200 மில்லி வேப்பெண்ணெய்யில் சேர்க்கவும்.
50 கிலோ தொழு உரம் மற்றும் 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு/மரம்/வருடம் இடவும்.
தென்னந்தோப்பில், பாத்திகளில், சணப்பை, காராமணி மற்றும் கலப்பகோனியம் போன்ற பசுந்தாள் உரங்களை விதைத்து மண்ணில் உழுதுவிடும் போது, கோடை காலத்தில் நிலப்போர்வையாக இருப்பதோடு, மெதுவாக மக்க மக்க, ஊட்டச்சத்துக்கள் வெளிவரும்.

22. சிலந்தி பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு, மருந்து தெளிக்கும்போது பின்பற்ற வேண்டிய முறைகள் யாவை?

ராக்கர் தெளிப்பான் பயன்படுத்தும்போது ஒரு மரத்திற்கு 1-1.5 லிட்டர் தெளிப்புக் கரைசல் தேவை. கைத்தெளிப்பான் பயன்படுத்தும்போது, 500-700 மில்லி தெளிப்புக் கரைசல் தேவை.
மகரந்த சேர்க்கை நடைபெறாத பாளைகளை விட்டுவிட்டு, 2-7 வது குலைகள் வரை தெளிக்கவும். 3, 4, 5, வது குலைகள் நிறைய தெளிக்கவும். ஏனெனில் அவற்றில் அதிகமான பூச்சித்தாக்கம் இருக்கும்.
வருடத்திற்கு மூன்று முறை தெளிக்கவும். டிசம்பர்-பிப்ரவரி, ஏப்ரல்-ஜுன், மற்றும் செப்டம்பர்-அக்டோபரில் தெளிக்கவும். மருந்து தெளிக்கும்போது அவை சரியாக குரும்பையின் அல்லி வட்டங்களில் நன்றாக படும்படி தெளிக்கவும். சராசரியாக ஒரு மரத்திற்கு 1-1.5 லிட்டர் தெளிப்பு கரைசல் தேவை. பூச்சிக்கொல்லி தெளிக்கும் முன் காய்களை பறித்து விடவும்.

23. சிலந்தி பூச்சி தாக்கத்தை மேலாண்மை செய்ய என்ன உர நிர்வாகம் பரிந்துரைக்கப்படுகிறது?

தமிழ்நாட்டில், சிலந்திப்பூச்சி கட்டுப்பாட்டு நிர்வாக முறைகள் பின்பற்றப்படுகிறது
தொழு உரம் மற்றும் உர நிர்வாகம் (மண்ணில் இடுதல்/மரம்/வருடம்)
யூரியா 1.3 கிலோ
சூப்பர் பாஸ்பேட் 2.0 கிலோ
பொட்டாஷ் 3.5 கிலோ
சிலந்திப் பூச்சிக்கான நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்க அதிகமான அளவு பரிந்துரைக்கப்படுகிறது.
வேப்பம் புண்ணாக்கு @ 5 கிலோ
தொழு உரம் (மக்கிய உரம்) @ 50 கிலோ
நுண்ணுாட்டங்கள் (மண்ணில் இடுதல்/மரம்/வருடம்)
போராக்ஸ் 50 கிராம்
ஜிப்சம் 1.0 கிலோ
மெக்னீசியம் சல்பேட் 500 கிராம்
சணப்பை பசுந்தாள் பயிரை வருடத்திற்கு இருமுறை ஊடுபயிர் செய்யவும். (விதையளவு 30 கிலோ/எக்டர்)

24. தென்னை மரத்தண்டில் துளைகளும், காப்பி நிற கோந்து வடிதலும் எதனால் ஏற்டுகிறது?

· சிவப்புக் கூண் வண்டு, தண்டில் துளைகள் மற்றும் காப்பி நிற கோந்து வடிதலை உண்டாக்குகிறது. இதனால் உள் இலைகள் மஞ்சள் அடைந்து, நாளடைவில், மத்திய குருத்து வாடல் ஏற்படுகிறது.
ஏனைய அறிகுறிகள்
மென்ற நார்பகுதிகள் வெளியே வருவதால்
இலை அடிப்பகுதி பிளவு ஏற்படுகிறது
மத்திய குருத்து வாடல்

25. எவ்வாறு சிவப்பு கூண் வண்டை தெரியலாம்?

இளமஞ்சள் நிறத்தில் கால்கள் இல்லாத பூச்சிகள், சிவப்பு, காப்பி நிற கூண் வண்டுகள் தெரியும். ஆண் வண்டுகள் நீளமான முகத்துடன் காணப்படும்.

26. சிவப்பு கூண் வண்டு தென்படும் போது, என்னென்ன உடனடி கட்டுபாடு முறைகள் மேற்கொள்ள வேண்டும்?

தண்டு காயம் ஏற்படுவதை தவிர்க்கவும். இலைகளை வெட்டும்போது, 120 செ.மீ உயரம் விட்டு வெட்டினால் புழுக்கள் வெட்டுப்பகுதிகளில் உட்புகுவதை தவிர்க்க முடியும்.
தண்டின் உச்சியில் உள்ள முதல் மூன்று இலைகளுக்கு அடியில் மணல்: வேப்பம்புண்ணாக்கு அல்லது வேப்பம் கொட்டை பொடி (2:1) கலவை போடவும். அல்லது லிண்டேன் 1.3 மருந்தை (1:1 கன அளவு) மூன்று மாதத்திறகு ஒருமுறை இட்டு காண்டாமிருக வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்தி, அவ்வண்டு பாதித்த பகுதிகளில் சிவப்பு கூண் வண்டு முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.
பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் பொறிகளை பயன்படுத்தவும்.

27. தென்னையில் எவ்வாறு சிவப்புக் கூண் வண்டுத் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்?

எல்லா ஓட்டைகளையும் அடைத்து, தாக்கம் அடைந்த நீளத்தைவிட துாரமாகத் துளைத்து, பைரோகோன் E அல்லது கார்பரில் 1% அல்லது 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் மருந்தை உட்செலுத்தவும். தண்டின் மேல் பகுதியில் மட்டும் ஒரு ஓட்டையை விட்டுவிட்டு பிற துளைகளை அடைத்து விடவும். 1% கார்பரில் (20 கிராம்/லிட்டர் அல்லது 0.2% டிரைகுளோர்போன் அல்லது 0.1% எண்டோசல்பான் கரைசல் @ 1 லிட்டர் உட்செலுத்தி மூடவும். தேவையெனில் ஒரு வாரம் கழித்து மறுபடியும் மருந்து செலுத்தவும்.
1% டி.டி.வி.பி அல்லது அலுமினியம் பாஸ்பைடு ஒன்று அல்லது இரண்டு உபயோகித்து கூண் வண்டைக் கட்டுப்படுத்தவும்.

28. சிவப்பு கூண் வண்டிற்கு என்னென்ன பொறிகள் உள்ளன?

தென்னை மரப் பொறிகள்
இனக்கவர்ச்சிப் பொறிகள் (2 எக்டருக்கு ஒன்று)

29. சிவப்பு கூண் வண்டு தாக்கத்தைக் கட்டுப்படுத்த தென்னை மரப்பொறிகள் மற்றும் இனக் கவாச்சி பொறிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

தென்னை மரப் பொறிகள்:

மண் பானைகளில் கரும்பு மொலாசஸ் 2.5 கிலோ அல்லது கள் 2.5 லிட்டர் (அன்னாசி (அ) கரும்பு மொலாசஸ் + ஈஸ்ட்) + அசிடிக் அமிலம் 5 மில்லி + 5 கிராம் ஈஸ்ட் வைக்கவும். 30 குறுக்காக வெட்டிய தென்னந்தண்டு அல்லது இலைக்காம்புகளை வைத்து அதிகமான சிவப்புக் கூண் வண்டிகளை பொறியில் சிக்க வைக்கலாம். பொறிகளில் கூண்டு வண்டை கொல்லுவதற்காக ஏதாவது ஒரு பூச்சிக் கொல்லியை உபயோகிக்கவும்.

இனக்கவர்ச்சி பொறி @ 1/2 எக்டர்
பெரிய வாலியில் பூச்சிகள் உள்ளே, செல்லும்படியாக 3-4 ஓட்டைகள் போடவும். உள்ளே இனக்கவர்ச்சி பொறியை தொங்கவிட்டு தண்ணீர் விடவும். பூச்சித்தாக்கம் அதிகமாக இருக்கும் இடங்களில் வாலிகளை வைக்கவும். ஒரு வாரம் கழித்து, வண்டுகளை நீக்கி, புதிய தண்ணீர் ஊற்றி கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

30. தென்னந்தண்டில் எதனால் காயங்கள் ஏற்படுகிறது? மட்டைக்காம்புகள் ஏன் சிவப்பாகிறது?

பட்டைக் கூண் வண்டு, இலைக்காம்புகளை சிவப்பாகிறது. தண்டில் காயங்கள் தென்படும், தண்டு ஒழுகல் நோய் வரும், முதிர்ந்த பூச்சிகள் கருப்பு நிறத்தில் சிறியதாக இருக்கும்.

31. தென்னையில் பட்டை கூண் வண்டை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

0.2% பென்தியான (அ) 0.2% டைகுளோர்வாஸ் மருந்தை ஸ்டவ் திரியில் நனைத்து மருந்தை தண்டில் உட்செலுத்தவும். பிறகு ஓட்டையை மூடிவிட்டு, தேவைப்பட்டால் ஒரு மாதம் கழித்து மறுபடியும் செய்யவும்.

32. தென்னம்பட்டையில் உள்ள சிறிய ஓட்டைகளை எவ்வாறு சரி செய்யலாம்?

மரப்பட்டை துளைப்பான் சிறிய ஓட்டைகளை ஏற்படுத்தி உள்ளே நார்க் குகைகளால் இணைக்கிறது. இதற்கு 0.2% பென்தியான் (அ) 0.2” டைகுளோரோவாஸ் மருந்தை ஸ்டவ் திரியில் நனைத்து உட்செலுத்தி கட்டுப்படுத்தலாம். தேவைப்பட்டாடல் ஒரு மாதம் கழித்து மறுபடியும் மருந்து செலுத்தலாம்.

33. எப்பொழுது கருந்தலை கம்பளிப்புழு தென்னையை தாக்குகிறது? அதன் அறிகுறிகள் என்ன?

மழைக்கு பிறகு, நவம்பர்-மே மற்றும் ஆகஸ்ட்-நவம்பரில் பூச்சித்தாக்கம் தென்படும். எல்லா வயது தென்னை மரங்களும் பாதிக்கப்படுகிறது.
அடி இலைகளின் சிற்றிலைகளில் காய்ந்த அறிகுறிகள் தெரியும். சிற்றிலைகளின் மேல்பகுதியில், பஞ்சுக்கூடுகள் இருக்கும்.
கேரளாவில் கோடை காலத்தில் ஜனவரி-மே மாதத்தில் பூச்சித்தாக்குதல் தீவிரமாக இருக்கும்.

34. கருந்தலைக் கம்பளி புழுக்களை எவ்வாறு கண்டறியலாம்?

புழுக்கள் காப்பிப் பச்சை நிறத்தில் இருக்கும்.
பஞ்சுக் கூடுகளில் கூட்டுப்புழு இருக்கும்.
முதிர் அந்துப்பூச்சி சாம்பல் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

35. எவ்வாறு கருந்தலைக் கம்பளி புழுவை கட்டுப்படுத்தலாம்?

பூச்சித்தாக்கம் தீவிரமாக இருக்கும்போதும், உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் பயனளிக்காத போதும் இலையின் அடிப்பாகத்தில் 0.2% டைகுளோர்வாஸ் (100 EC) 0.05% மாலத்தியான 1 மி.லி/லிட்டர், குயினல்பாஸ் 0.05% எண்டோசல்பான் 0.05% அல்லது பாசலோன் 0.05% மருந்தை தெளிக்கவும்.
குறிப்பு: பூச்சிக் கொல்லிகள் தெளித்த 21 ஆம் நாள் முதல் புழு மற்றும் கூட்டுப்புழு ஒட்டுண்ணிகளை வெளியிடவும்.
10 மில்லி 36 WSC மோனோகுரோட்டோபாஸ் மருந்து + 10 மில்லி தண்ணீர் கலந்து 7 x 10 செ.மீ பாலித்தீன் பைகளில் ஊற்றி வேர்மூலம் உட்செலுத்தவும்.

36. கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்த என்னென்ன உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன?

கோனியோசஸ் நெபண்டிடிஸ், பிரேகிமேரியா நோசடோய் போன்று புழு பருவ ஒட்டுண்ணிகளை (2 மற்றும் 3 ஆம் பருவ புழுக்கள்) @ 1:8 (சார் உயிரினம்) @ 3000/எக்டர் தென்னங்குருத்துப் பகுதியில் விடவும்.
பெத்திலிட், பிரேக்கனாய்டு, இக்நிமோனிட்ஸ், போன்ற புழுப்பருவ ஒட்டுண்ணிகளையும், யூபோடிலிட் போன்ற கூட்டுப்புழு பருவ ஒட்டுண்ணிகளையும் ஜனவரி மாதம் முதல் வெளியிட்டு கோடை காலத்தில் பூச்சிப் பெருக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

37. தென்னையில் எதனால் இலை உதிர்கிறது?

நத்தைப் புழு இலை உதிர்வை ஏற்படுத்துகிறது. மணல் கலந்த வண்டல் மண் உள்ள கேரள கர்நாடகப் பகுதிகளில் புழுக்கள் காணப்படும். வேர்களை சேதப்படுத்தும், கன்றுகளில் துளைவிட்டு அடித்தண்டு வரை செல்லும். இதற்கு, இதன் ஒரு வருட ஆயுட் காலத்தில் 8 மாதம் புழுப்பருவம். செப்டம்பர்-அக்டோபரில் அதிகமான புழுக்கள் இருக்கும். முன் பருவ மழைக்கு பின்னர் மே-ஜுன் மாதத்தில் மண்ணில் இருந்து முதல் வண்டுகள் வெளியே வரும்.

38. நத்தைப்புபுழுக்களை எவ்வாறு கண்டறியலாம்?

பச்சை மற்றும் சாம்பல் கருப்பு நிற புழுக்கள்
அடர் காப்பி நிற ஓடுகள் உடைய கூட்டுப்புழுக்கள் பச்சை சிறகுகள் அந்துப்பூச்சி அல்லது சிறிய சாம்பல் காப்பி நிற அந்துப்பூச்சி

39. எவ்வாறு நத்தைப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்?

டைகுளோர்வாஸ் 76 WSC 2 மில்லி/லிட்டர்
பேசில்லஸ் துரிஞ்சன்சிஸ்
டிரைஅசோபாஸ் 40 EC 5 மில்லி
மிதைல் டெமட்டான் 25 EC 4 மில்லி/லிட்டர்
15 மில்லி மோனோகுரோட்டோபாஸ் + 15 மில்லி தண்ணீர் கலந்து வேர்மூலம் உட்செலுத்துதல்,

40. சிற்றிலை நுனிகள் ஏன் சுருள்கிறது?

· தென்னை தத்துப்பூச்சியினால் இலைநுனிச் சுருள் ஏற்படுகிறது.

41. தென்னை தத்துப்பூச்சி, தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

கார்பரில் 50 WP 2 கிராம்/லிட்டர
இலைக் கம்பளிப்புழுவைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 10 மில்லி + தண்ணீர் 10 மில்லி கலந்து, 45 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை வேர்மூலம் உட்செலுத்தவும்.
விளக்குப்பொறிகள் வைத்து பூச்சிகளை பிடிக்கவும்.
டைகுளோர்வாஸ் 76 WSC மருந்தை 2 மில்லி/லிட்டர்

42. இலையின் நடு நரம்பை மட்டும் விட்டுவிட்டு இலைப்பகுதிகளை எது சாப்பிடுகிறது? அதை எவ்வாறு கண்டறிவது?

இலை தின்னும் கம்பளிப் புழுக்கள் நடுக்குச்சியை மட்டும் விட்டு, இலைகளை திண்ணும். புழுக்கள் முந்தைய பருவத்தில் காப்பி நிறத்திலும், பின்னர் பச்சை நிறத்திலும் இருக்கும். பூச்சிகள் பழுப்பு வெள்ளை நிறத்தில் காணப்படும்.
டைகுளோர்வாஸ் 76 WSC 2 மில்லி/லிட்டர் தெளிக்கவும்.

43. தென்னை இலையில் எதனால் சீரற்ற ஓட்டைகள் வருகின்றன?

பை புழு இலைகளில் சீரற்ற ஓட்டைகளை ஏற்படுத்துகிறது. புழுக்கள் நுாற்களால் ஆன முக்கோண உருண்டை கூடுகளில் காணப்படும்.

44. எதனால் இளவயதில் குரும்பை உதிர்வும், வேர்பாதிப்பும் ஏற்படுகிறது?

வெள்ளைப் புழுக்கள் குரும்பை உதிர்வையும், வேர் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. பிற அறிகுறிகள் என்னவெனில்
மஞ்சள் நிற இலைகள்
பூப்பு தாமதமடைதல்
மகசூல் குறைவு
போன்றவை ஆகும்.

45. தென்னை சிற்றிலைகளை வெட்டி சுருட்டுவது எது?

சுவேஸ்டஸ் கிரிமியஸ், சிற்றிலைகளில் ஒரு பக்கத்தை வெட்டி சுருட்டி கூட்டினுள் செலுத்தும்.
அதன் அடையளங்கள்
புழுக்கள்: மென்மை, பச்சை நிறத்தில் இரு முனைகளிலும் சிறுத்து, தலை மற்றும் உடலுக்கு இடையே தடுப்பு உள்ள புழுக்கள்.
பூச்சி: முன் இறகுகளில், சாக்லேட் காப்பி நிறத்தில் மஞ்சள் புள்ளிகள் இருக்கும்.

46. வெள்ளைப் புழுவை எவ்வாறு கண்டறியலாம் ?

கோடுகள் போட்ட இறகுகளுடன் காப்பி நிற வண்டுகள் தென்பட்டால், வெள்ளைப் புழுக்கள் இருக்கும் என அறியலாம்.

47. வெள்ளைப் புழுவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

வேம்பு, ஐலேந்தஸ் மற்றும் அக்கேசியா போன்ற கவர்ச்சிப் பயிர்களை நடலாம். அல்லது இலைகளுடன் வேப்பங்குச்சிகளை வெட்டி தென்னை மரங்களுக்கு அருகில் மழைக்காலத்தில் நட்டு வைக்கலாம். வண்டுகளை கவர்ந்து இழுக்க உதவுகிறது.
விளக்குப்பொறி @ 1/எக்டர்
நடவின் போது, மண்ணில் மாலத்தியான் 5 D அல்லது என்டோசல்பான் 4 D மருந்து, 25 கிலோ இடவும். (மரம் ஒன்றுக்கு 10 D போரேட் மருந்து 100 கிராம் அல்லது குளோர்பைரிபாஸ் 0.04% கரைசல் நனைக்கவும்) வருடத்திற்கு இருமுறை என ஏப்ரல்-மே மற்றும் செப்டம்பரில் மருந்து இடவும்.

48. கரையான் தாக்கத்தை எவ்வாறு தவிர்க்கலாம்?

5% வேப்பெண்ணெய்யில் துணியை நனைத்து, தென்னை மரத்தின் அடித்தண்டில் 2 மீட்டர் உயரத்திற்கு சுற்றி வைக்கவும்.
1% காப்பர் சல்பேட் கரைசல் (அல்லது) 80% முந்திரி ஓடு எண்ணெய் அல்லது குளோர்பைரிபாஸ் @ 3 மில்லி/லிட்டர் தண்ணீர் அல்லது 5% வேப்பெண்ணெய் அல்லது 20% வேப்பங்கொட்டை கரைசல் தெளித்து இலைகளில் கரையான் தாக்கத்தை கட்டுப்படுத்தவும்.
நாற்றங்காலை 0.05% குளோர்பைரிபாஸ் கரைசலில் 20-25 நாட்கள் இடைவெளியில் நனைக்கவும். தென்னை மரத் தண்டை அதே மருந்து கொண்டு பூசவும்.

49. தென்னை இலைகளின் மேற்புரத்தில் எதனால் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுகிறது?

கண்ணாடி இறகுப்பூச்சித் தாக்கத்தால், இலைகளில், வெள்ளைப் புள்ளிகள் ஏற்படும்.

50. எவ்வாறு கண்ணாடி இறகுப் பூச்சிகளை கண்டறிவது?

அடர் ஒட்டுகளுடன் வெள்ளை நிற குஞ்சுகள் வெள்ளை நிற வலையுடன் கூடிய கண்ணாடி இறகுகள் .

அசோலா ஓர் அற்புதமான தீவனம்

அசோலா ஓர் அற்புதமான தீவனம் azolla-pinnata
அசோலா ஓர் அற்புதமான தீவனம் ..!!!

கால்நடை வளர்ப்பில் பெரும் பங்காற்றுவதும் அதிக செலவு பிடிக்கக் கூடிய விஷயம் கால்நடைக்கான தீவனம்தான்.

பசுமாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு என அனைத்து வகை கால்நடை வளர்ப்புத் தொழில் லாபம் அடைய வேண்டுமென்றால், தீவனத்திற்கான செலவினை குறைக்க வேண்டும்.

மாற்றுத் தீவனங்கள் குறைவான விலையில் உற்பத்தி செய்து பயன்படுத்தினால் மட்டுமே தீவனத்திற்கான செலவினைக் குறைக்க இயலும்.

இந்த மாற்றுவகை தீவனத்தில் சத்து மிகுந்ததும், எளிதில் உற்பத்தி செய்யக் கூடியதும் ஆன அசோலா தண்ணீரில் மிதக்கக் கூடிய தாவரங்களில் பிரதான இடத்தை வகிக்கின்றது. மிக எளிதாக உற்பத்தி செய்து பயன்படுத்தக்கூடிய இந்த அசோலா தற்போது பல்வேறு தொழில்நுட்ப அறிவுமிக்க கால்நடை பண்ணையாளர்களால் வளர்க்கப்பட்டு கால்நடை தீவனத்துடன் உணவில் சேர்க்கப்படுகின்றது.

தற்போது கால்நடை தீவனத்திற்கானது எனப்படும் அசோலா ஆரம்பத்தில் நெற்பயிருக்கான உரமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. தழைச்சத்து நெற்பயிரின் வளர்ச்சிக்கு இன்றியமையாது. இரசாயன உரங்களினால் கிடைத்த தழைச்சத்தை, விவசாயிகளுக்கு அதிக செலவு பிடிக்கக் கூடியதும், சூழலுக்கு மாசு விளைவிக்கக் கூடிய ரசாயன உரத்தின் தவறான பயன்பாட்டை மட்டுப்படுத்த, இயற்கையிலேயே நெல் வயல்களில் வளரக்கூடிய நுண்ணுயிர்கள் மூலமும், சில தாவரங்கள் மூலமும் கிடைக்கச் செய்ய அதிக அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அசோலா (Azolla Pinnala) எனும் நீரில் மிதந்து வளரும் தாவரத்தை நெல் வயல்களிலேயே நேரடியாக வளர்க்கலாம் என கண்டறியப்பட்டது.

அசோலா பெரணி (Floating Water Fern) என்ற தாவர இனத்தை சேர்ந்தது நெல் வயல்களில் வளரக்கூடிய நீர் தாவரம். இது மிகமிகச் சிறிய இலைகளையும், மெல்லிய வேர்களையும் கொண்டது. அசோலா நெல் வயல்களில் இருக்கும் தண்ணீரில் மிதந்து காற்றில் இருக்கும் தழைச்சத்தை சேகரித்து நெற்பயிருக்கு கொடுக்கின்றது.

பெரும்பாலும் நல்ல பச்சை நிறத்திலும், அபூர்வமாக லேசான பழுப்பு நிறத்தில் காணப்படும் அசோலாவின் இலைகளானது முக்கோன வடிவத்திலிருந்து பல கோண வடிவம் வரையும் இருக்கும். இந்த அசோலாவின் இலைகள் 1 செமீ முதல் 2.5 செமீ வரை விட்டமுடையவை. இதன் வேர்கள் 2 செமீ முதல் 10 செமீ வரையில் நீளமுடையவை. இது சிறு இலைகளை உடைய மிதக்கும் தண்டைக் கொண்டது.

தண்டின் இரண்டு பக்கங்களிலும் ஒன்றன் மீது ஒன்றாக இலைகள் மாற்று வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இலையும் மேற்புறம், கீழ்புறம் என இரண்டு பாகங்களை உடையது. இலைகளின் மேல்புறம் தழைச்சத்தை சேகரித்து பசுமையாக இருக்கின்றது. கீழ்ப்புறம் பச்சையம் அற்றும் நீரில் அமிழ்ந்தும் காணப்படுகின்றது. இலையில் மேற்புறத்தின் உட்பகுதியில்தான் தழைச்சத்தை கிரகிக்கும் அனாபினா அசோலே (Analaena Azollae) எனும் நீலப் பச்சைப்பாசி காணப்படுகின்றது. இது தழைச்சத்தை கிரகித்து அசோலாவிற்கு அளிக்கிறது.

அசோலா அதிக அலைகளில்லாத, அதிக நீரோட்ட வேகம் இல்லாத அமைதியான நீர் நிலைகளில் வளரக் கூடியவை. குளங்கள், சிறு ஓடைகள், நெல் வயல்களில் வளரக்கூடிய அசோலா மிதக்கும் வகைத் தாவரம்தான் என்ற போதிலும் வயலில் சேற்றுடன் கலந்த மண் பரப்பிலும் வளரும் தன்மையுடையது. அசோலா பிலிக்குலாய்டஸ் எனும் ரகம் 10-15 செமீ ஆழமாக வேர்விட்டு மண்ணில் சத்துக்களை உறிஞ்சிக் கொடுக்கும்.

அசோலா வகைகள்:

அசோலாவில் பல வகைகள் உள்ளன.

அசோலா பின்னேட்டா
அசோலா மெக்சிகானா
அசோலா பிலிக்குலாய்டஸ்
அசோலா கரோலினியானா
அசோலா மைக்ரோபில்லா
அசோலா நைலோட்டிகா.

தமிழகத்தில் மிகப் பரவலாக காணப்படுவது அசோலா பின்னேட்டா ரகம்தான். இந்த ரகம் அதிக தழைச்சத்தைக் கிரகித்து அதிக வெப்பநிலையைத் தாங்கி நன்கு வளரும் இயல்புடையது.

அசோலாவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன:

21 – 24% புரதச்சத்து (crude protein)
9 – 21% நார்ச்சத்து (crude fibre)
2.5 – 3% கொழுப்பு (ஈதர் எக்ஸ்ட்ராக்ட் – ether extract)
10 – 12% சாம்பல் (Ash)
1.96 – 5.30% தழைச்சத்து N
0.16 – 1.59% மணிச்சத்து P
0.31 – 5.9% சாம்பல் சத்து K
0.45 – 1.70% சுண்ணாம்புச் சத்து
0.22 – 0.73% கந்தகச் சத்து
0.22 – 0.66% மெக்னீசியம்
0.04 – 0.59% இரும்புச் சத்து

அசோலா வளர்வது வருடம் முழுவதும் இயல்பாக நடக்கக்கூடிய செயல் என்றாலும் அதற்கான கீழ்கண்ட சூழ்நிலை நாம் உண்டாக்க வேண்டும்.

ஒளி அல்லது வெளிச்சம்:
**************************
1. பச்சையம் தயாரிப்பதற்கு சூரிய ஒளி தேவை என்றாலும் நேரடி சூரியக் கதிர் பாயாமல் நிழல் வலைக்குள் ஊடுறுவிச் செல்லும் குறைவான வெளிச்சத்தில் நன்கு வளரும்.

2. பொதுவாக அசோலாவானது 25-50% வெளிச்சத்தில் நன்கு வளரும்.

3. மிக அதிக சூரிய ஒளி அதனுடைய மென்மையான பகுதிக்கு சேதமுண்டாக்கும்.

4. மிக அதிக சூரிய ஒளியினால் பாதிக்கப்படும் அசோலா பழுப்பு, சிவப்பு நிறமாக மாறி இறந்துவிடும்.

5. அதேபோல மிகவும் இருட்டு இருந்து போதுமான சூரிய வெளிச்சமில்லையென்றாலும் வளர்ச்சி தடைபட்டு குறையும்.

தண்ணீர்:
***********
1. அசோலா வளர்ப்பிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. தண்ணீரிலில்லாமல் அசோலாவை வளர்க்க இயலாது. எப்போதும் தண்ணீரின் அளவை நிலையாக வைத்திருக்க வேண்டும்.

2. 4 அங்குல உயரத்தில் தண்ணீர் எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. தண்ணீரின் மட்டம் குறைவாக இருந்தால் வேர்கள் குளத்தினை தொட்டால் அசோலாவில் வளர்ச்சி குன்றும்.

வெப்ப அளவு:
***************
1. 20 c – 30 c அளவு வெப்பநிலை மட்டுமே அசோலாவிற்கு ஏற்றது.

2. 37 c க்கு மேல் வெப்பத்தின் அளவு அதிகரித்தால் அசோலாவின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும்.

3. 20 c க்கும் குறைவான வெப்பநிலையில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

காற்றில் ஈரப்பதம்:

1. காற்றில் ஈரப்பதமானது 85 – 90% இருக்க வேண்டும்.

2. காற்றில் ஈரப்பதமானது 60% க்கும் கீழ் வந்துவிட்டால் அசோலா காய்ந்துவிடும்.

தண்ணீரின் தரம் – கார அமில நிலை:

1. தண்ணீரின் கார அமில நிலை pH 5 -7 வரை இருக்க வேண்டும்.

2. உப்பு நீரில் வளராது. அதிக உப்பு இருந்தால் வளர்ச்சி தடைபடும்.

3. அதிகப்படியான அமிலத்தன்மையும், அதிகப்படியான காரத்தன்மையுள்ள தண்ணீரில் அசோலா வளர்க்க இயலாது.

காற்று:

1. வேகமாக வீசும் காற்று மறைமுகமாக அசோலா வளர்ச்சிக்கு இடையூறு செய்கின்றது. காற்று வீசும்போது மிதக்கும் அசோலா எதிர்திசையில் சென்று மொத்தமாக ஒதுங்கி அங்கு நெருக்கம் உண்டாகிறது. அதிக நெருக்கடியால் வளர்ச்சி குறைகின்றது. இறப்பும் நேருகின்றது.

2. அதிக வேகமான காற்று அசோலாவில் சிதைவுகளை ஏற்படுத்துகின்றது.

சத்துகள்:

1. அசோலா தனக்குத் தேவையான சத்துக்களை தண்ணீரில் இருந்து எடுத்துக் கொள்கின்றது. அசோலா வளர்வதற்கு அனைத்து வகையான சத்துக்களும் தேவைப்பட்டாலும் பாஸ்பரஸ் எனும் மணிச்சத்து அதிக அளவில் தேவைப்படுகின்றது.

2. தண்ணீரில் கரையும் பாஸ்பரஸ் அடிக்கடி கொடுப்பதன் மூலம் அசோலாவின் வளர்ச்சி சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். தண்ணீரில் 20 ppm எனும் அளவிற்கு மணிச்சத்து (பாஸ்பரஸ்) எப்போதும் இருக்க வேண்டும்.

3. நுண் ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சியையும் இனப்பெருக்கத்தையும் துரிதப்படுத்தும்.
கால்நடைகளுக்குத் தீவனமாக கொடுக்கக் கூடிய இந்த அசோலாவை நமது தேவைக்கு எவ்வாறு வளர்ப்பது என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.

குறைந்த ஆழம் உள்ள தேங்கிய தண்ணீரே அசோலா வளர்ப்பதற்கு ஏற்றது. நமக்கு அசோலா தேவைப்படும் இடத்திற்கு அருகிலும், அடிக்கடிச் சென்று பார்வையிட வசதியான இடத்திலும், எளிதில் தண்ணீர் கிடைக்கின்ற இடத்தின் அருகாமையிலும் அசோலா வளர்க்க ஏற்ற இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

நிழலான பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அல்லது நிழல் வலையைப் பயன்படுத்தி செயற்கையாக நிழல் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் ஆவியாவது குறைந்தால் அசோலாவின் வளர்ச்சி நன்கு இருக்கும். தரைப்பகுதி கூரான கற்கள், முள், வேர் போன்றவைகள் இல்லாமல் நன்கு சமப்படுத்தப்பட வேண்டும். இவைகள் இருந்தால் தண்ணீரை நிறுத்த விரிக்கும் பிளாஸ்டிக் பாய் கிழிந்து தண்ணீர் கசிந்து வீணாகும்.

அசோலா வளர்ப்புத் தொட்டி கால் நடைகளின் எண்ணிக்கை தற்போது கிடைக்கும் திட, சத்துணவு, இடம் தண்ணீர் போன்றவைகளின் இருப்பு போன்றவற்றை அனுசரித்து மாறக்கூடியது.

தினசரி 2 கிலோ அசோலா உற்பத்தி செய்ய 6 அடி X 42 அடி அசோலா வளர்ப்புத் தொட்டி போதுமானது. நாம் தேர்வு செய்த நிழலான இடத்தை நன்கு சமன் செய்து கொள்ள வேண்டும்.

இடம் மிகச் சரியாக சமமாக இருப்பது மிக அவசியம். மட்டமான மரப்பலகையை வைத்து பொடி மணலை தூவி இடத்தை சமப்படுத்தி கொள்ள வேண்டும். 6X4 அளவுள்ள சற்று தடிமனான ப்ளாஸ்டிக் பாயை விரித்து அதனைச் சுற்றிலும் இரண்டு வரிசை உயரம் செங்கலை அடுக்கி, தண்ணீர் தேங்கி நிற்கும் அமைப்பை உண்டாக்க வேண்டும்.

இந்த பிளாஸ்டிக் தாளில் எந்தத் துளையோ, கிழிசலோ இல்லாமல் இருப்பது மிக முக்கியம். நிலத்தை சமப்படுத்தியபின் அதன்மேல் பழைய சாக்கு, பிளாஸ்டிக் சாக்கு போன்றவற்றைகளை பரப்பி அதன்மேல் விரித்தால் அருகிலுள்ள மரங்களின் வேர்களால் உண்டாகும் துளைகள் மட்டுப்படுத்தப்படும்.

இந்த அமைப்பில் 10 செமீ உயரத்திற்கு தண்ணீர் நிரப்ப வேண்டும். அத்துடன் மூன்று கூடை அளவிற்கு குளத்து வண்டல் மண்ணைப் பொடி செய்து தூவி, அத்துடன் போர் போடும்போது கிடைகின்ற கல்மாவை 2 கிலோ அளவில் தூவ வேண்டும். போர் மண் கிடைக்கவில்லையென்றால் 50 கிராம் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் தூவலாம். அத்துடன் 2 கிலோ பசுஞ்சாணத்தைத் தண்ணீரில் கரைத்து அதிலுள்ள அமோனியா மீத்தேனை வெளியேற்ற அதனையும் கலக்க வேண்டும்.

இப்போது அசோலா வளர்ப்பதற்கான தொட்டி தயார். இந்த தொட்டியில் 1 கிலோ அளவிற்கு விதை அசோலாவைத் தூவ வேண்டும்.

விதை அசோலா என்பது இன்றுமொரு அசோலா வளர்ப்பவரிடமிருந்து வாங்கி வரும் பச்சை, புதிய அசோலாதான்.

இந்த அசோலா தொட்டியினுள் வெளி இலைகள் விழுந்துவிடாமலும், புழுதிக்காற்றினால் தூசு படியாமலிருக்கவும், நிழலின் அளவை சீராக்கவும், கால்நடைகள் ஆடுமாடு, கோழி, நாய் போன்றவை உள்ளே புகுந்து மிதித்து விடாமலிருக்கும்.

நிழல் வலையால் மேல் பகுதியிலும், நான்குபுறமும் மூடப்பட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

நாம் தெளித்த விதை, சுற்றுப்புற சூழ்நிலை சத்துக்களின் அளவு போன்றவற்றை அனுசரித்து அசோலாவின் வளர்ச்சி காணப்படும்.

இரண்டு அல்லது மூன்று வாரத்தில் தொட்டி முழுவதும் அசோலா படர்ந்து இருக்கும். இதனை பிளாஸ்டிக் வலைகளைக் கொண்டு சேகரிக்கலாம்.

ஒரு 6 அடி X 4 அடி அசோலா தொட்டியிலிருந்து தினசரி 2 கிலோ அசோலாவை அறுவடை செய்யலாம்.

அசோலாவை பச்சையாகவே உணவாகக் கொடுக்கலாம்.

உற்பத்தி அதிகமாக இருக்கும்போது நிழலில் உலர்த்தியும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

அசோலாவின் வளர்ச்சியில் குறைபாடு காணப்பட்டால் அதற்கு மணிச்சத்து பற்றாக்குறை, அதிக வெப்பம், அதிக வெளிச்சம் அல்லது பூச்சி தாக்குதல் காரணமாக இருக்கலாம்.

சுருண்ட வேர், குறைவான வளர்ச்சி, இலை சிறுத்துப் போதல், நிறமாற்றம் ஆகியவை மணிச்சத்து (பாஸ்பரஸ், குறைபாட்டால்) வருகின்றது. 25 சதுர அடி குளத்திற்கு 100 கிராம் பாஸ்பரஸ் உரமிட வேண்டும்.
அதிக வெயிலினாலும், வெளிச்சத்தாலும் வளர்ச்சி குறைந்தால் நிழல் வளையின் சதவிகிதத்தை 50 லிருந்து 60% அல்லது 75% க்கு கூட்டலாம். வெளியே விரைவாக வளரும் அகத்தி போன்ற நிழல் மரங்களை வளர்க்கலாம்.

அசோலாவை கால்நடைகளுக்குப் பச்சையாகவே கொடுக்கலாம். சாண வாடை அடித்தால் அசோலாவை நல்ல தண்ணீரில் அலசி எடுத்துவிட்டு கொடுக்கலாம்.

கால்நடை, கோழி போன்றவைகளுக்கான கலப்பு தீவனம் கொடுக்கும்போது அத்துடன் அசோலாவை கலந்து கொடுத்தால் எளிதில் உண்ணும். கோழி, வான்கோழி, வாத்து போன்ற வீட்டுப் பறவைகள் அசோலாவை மிகவும் விருப்பமாக உண்கின்றன. வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் சராசரியாக ஒவ்வொரு கோழிக்கும் 100-300 கிராம் அசோலா தீவனமாக கொடுக்கப்படுகின்றது. கோழி குஞ்சுகளில் தீவனத்தில் 20% அசோலா கலந்து கொடுத்தால் குஞ்சுகள் நன்கு வளர்ந்து நல்ல எடையை அடைகின்றது. அசோலாவில் அதிகப் புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் உள்ளது. மேலும் இதில் நார்ப்பொருட்கள் குறைவு.

கால்நடையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் அசோலா கொண்டுள்ளது. உப்புடன் அசோலா கலந்து பன்றிகளுக்குக் கொடுத்தால் பன்றியின் உடல் எடை விரைவில் அதிகரிக்கின்றது. அதன் இறைச்சியின் தன்மையும் நன்றாக இருக்கின்றது. பன்றிகள் அசோலாவை விரும்பி உண்கின்றன. மீன்களும் மற்ற நீர் தாவரங்களை விட அசோலாவை விரும்பி உண்கின்றன.

அசோலாவானது மிக குறைந்த உற்பத்திச் செலவில் கிடைக்கக்கூடிய ஒரு உயிர் உரமும் கூட. நீலப்பச்சை பாசியுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து விரைந்து வளர்ந்து, பெருகி அதிக மகசூல் கொடுக்கிறது. அசோலாவான தனது எடையை 2-3 நாட்களுக்குள் இரண்டு மடங்காக பெருக்கும் ஆற்றலை உடையது.

20-30 நாட்களுக்குள் வளர்ந்து ஏக்கருக்கு 10 மெட்ரிக் டன் மகசூல் கொடுக்கும்.
இத்தனை அற்புத பலன்களையும், சக்தியையும் உடைய அசோலாவை கறவை மாடு வளர்ப்போர் சிறிது இடத்தை ஒதுக்கி வளர்க்கலாம். இதன் உற்பத்திச் செலவு மிக மிகக் குறைவு.

அசோலாவை கறவை மாடுகளுக்கு தொடர்ந்து உணவாக கொடுத்துக் கொண்டு வந்தால் பால் உற்பத்தி அதிகரிக்கின்றது. அத்துடன் பாலின் தரமும் கூடும்.

அசோலாவானது கால்நடைகளுக்கு சத்துக்கள் நிறைந்த தீவன இணை உணவு. குறைந்த உற்பத்திச் செலவில் அசோலாவை உற்பத்தி செய்து கால்நடைகளுக்குக் கொடுக்கும்போது பாலின் உற்பத்தி செலவு குறைந்து லாபத்தின் அளவு கூடுகின்றது.
அசோலாச் செடி வளர்கின்ற விதத்தையும், வேகத்தையும் கவனித்தால் அற்புதமான அனுபவமாக இருக்கும். அதனுடைய கணுக்கள் உடைந்து சிறுசிறு துண்டுகளாகி ஒவ்வொரு துண்டும் வேர்கள் விட ஆரம்பித்து தனித்து வளரும். இவ்வளவு விரைவான வளர்ச்சியை வேறு பயிர்களில் காண இயலாது.

இந்தத் துரித வளர்ச்சியால்தான் 6 அடி X 4 அடி அளவுள்ள அசோலா வளர்க்கும் தொட்டியில் இருந்து தினசரி 2 கிலோ அளவிற்கு அசோலா அறுவடை செய்ய முடிகின்றது.

ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழுள்ள வேளாண் அறிவியல் நிலையம் அல்லது உழவர் பயிற்சி மையத்தை அணுகினால் விதைக்கான அசோலாவை எளிதில் பெறலாம். மிக எளிய தொழில்நுட்பம், குறைந்த முதலீடு, அபரிதமான மகசூல் உள்ள அசோலா வளர்ப்பு, கால்நடை வளர்ப்போருக்கு நல்லதொரு மாற்று தீவனத்தைக் கொடுக்கின்றது.

குறைந்த செலவில் உற்பத்தியாகும் இந்த தீவனத்தைப் பயன்படுத்தும்போது நமது உற்பத்திச் செலவு குறைந்து லாபத்தின் அளவு அதிகரிக்கின்றது.

நன்றி: தினமணி

மறை நீர்

மறை நீர் Virtual water

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

Continue reading