Month: May 2018

Power of Arc Shape and Filler Slab

Power of Arc Shape and Filler Slab

உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் ரூப் ஸ்லாப் காங்கிரீட் முறைதான் அதிக ஸெல்ப் வெய்ட் கொண்ட முறை. அதாவது அதிக எடை கொண்ட கூரையை வடிவமைத்து அந்த எடையை தாங்கும் அளவிற்கு சுவர்கள் மற்றும் அஸ்திவாரத்தின் வடிமைப்பதின் மூலம் கட்டிடத்தின் செலவுகளை நாமாகவே கூட்டி கொண்டிருக்கிறோம்.

Continue reading

செப்டிக் டேங்க் வீண் செலவு

செப்டிக் டேங்க் வீண் செலவு
செப்டிக் டேங்க் வீண் செலவு

வீடு கட்டும் போது நாம் செய்யக்கூடிய மற்றுமொரு வீண் செலவு இந்த செப்டிக் டேங்க். அதுமட்டுமின்றி இந்த செப்டிக் டேங்கின் மூலம்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால்தான் நெருக்கமான நகர்ப்புறங்களில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது.

இதற்கு மிகச் சிறந்த மாற்று வழி soak pit முறையாகும். இம்முறை செலவு குறைவான மற்றும் மீண்டும் மீண்டும் கழிவு நீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் செலவில்லாமல் இயக்க முடியும். இதனை எவ்வாறு அமைக்கலாம் என்பதைக் காண்போம்.

முதலில் ஆறு அடிக்கு ஆறு அடி 6 அடி ஆழம் குழி  எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிசிசி கொண்டு அடித்தளம் அமைக்க வேண்டும். அதன்பிறகு 4 அடி விட்டம் ஒரு அடி உயரம் உள்ள ரெடிமேட் concrete ரிங் வாங்கி கொள்ள வேண்டும். அதனை குழியினுள் பி சி சி யின் மீது ஒவ்வொன்றாக அடுக்கவேண்டும். பின்பு கவர் ஸ்லாப் கொண்டு இதனை மூடி விடலாம் இதன்பிறகு காங்கிரிட் rink சுற்றி மணலை கொட்டிவிட வேண்டும். அதன்பிறகு கழிவறையின் குழாயை பொருத்த வேண்டும். இதன்மூலம் கழிவறையில் இருந்து வெளிவரும் நீரை சுற்றிலும் உள்ள நிலம் உறிந்து உறிந்து கொள்ளும். திடக்கழிவு பாக்டீரியா மற்றும் பல கண்ணுக்கு தெரியாத உயிரினங்களால் தின்று சிதைக்கப்படும். இது எந்த காலத்திலும் நிறையாது. கொசுவும் உற்பத்தியாகாது. இதனை கீழே படத்தில் காண்பித்து உள்ளேன்

(((( சில பகுதிகளில் கொத்தனார்கள் தொட்டியின் அடிப்பகுதியை மட்டும் பூசாமல் விட்டுவிடுவதை காணலாம் அவர்கள் செலவு செய்தாலும் தப்பித்தார்கள்))))

இதுபோல் ஏற்கனவே செய்துள்ளவர்கள் தங்கள் கருத்துகளை பதியவும் அது மற்றவர்களுக்கும் பயன்படும்

சரி நான் ஏற்கனவே செப்டிக் டேங்க் கட்டி விட்டேன் இப்போது கொசு உற்பத்தி ஆகாமல் எவ்வாறு தடுப்பது.

அதற்கும் வழி உண்டு. அருகிலுள்ள ஏதாவது workshop ல் வேஸ்ட் ஆயில் வாங்கிக்கொள்ளவும் அதனை உங்கள் செப்டிக்டேங்க்னுள் ஊற்றி விடவும் ஆயில் நீரைவிட அடர்த்தி குறைவு என்பதால் எப்போதும் மேலே மிதந்து கொண்டிருக்கும் .இதன்மூலம் கொசு செப்டிக் டேங்கினுள் அமர்ந்து முட்டையிடுவதை தடுக்க முடியும். இதனையும் படத்தில் வரைந்து காண்பித்து உள்ளேன்.நன்றி.


முடிந்தவரை இதனை பகிரவும்

தொடரும்…
உங்களுடன் நான் ஹரி

வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும்.

வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும்

வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும்.

நாம் சுவாசித்தல் மட்டும் போதாது, நம் வீட்டின் சுவரும் நம்மை போல சுவாசிக்க வேண்டும்.அப்போது தான் வீட்டின் உள்ளே சூடும் குளிரும் செல்லாது.

நீங்கள் பூச்சு வேலை செய்தால் இது நடக்காது.

Continue reading

வீட்டினுள் வெப்பத்தை குறைக்க

வீட்டினுள் வெப்பத்தை குறைக்க
வீட்டினுள் வெப்பத்தை குறைக்க

வீட்டினுள் வெப்பத்தை குறைக்க வடிவமைப்பும் மிக முக்கிய பங்குவக்கிறது. நம் பாரம்பரிய முறை வடிவமைப்பான தொட்டி கட்டு வீடுதான் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதுவே உண்மையாக வேத நூல்களில் கூறப்பட்ட வாஸ்து அமைப்பு.

வாஸ்து அமைப்பு என்பது ஒரு அறிவியல். பஞ்சபூதங்களையும் சரியாக பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது வியாபாரம் ஆக்கப்பட்டது வேறு கதை.

வீட்டின் நடு பகுதியில் 30 சதவிகித பகுதி திறந்திருக்க வேண்டும்.இதன் மூலம் வீட்டினில உள்ள சூடான காற்று வெளியேருக்கிறது மற்றும் சூரிய வெளிச்சம் பகல் நேரங்களில் வீடு முழுவதும் கிடைக்கிறது.

மற்றும் லாரி பேக்கர் வீடு கட்டும்போது வீட்டின் நடுவில் பூசாத செங்கற்களைக் கொண்டு தொட்டி கட்டி அதில் தாமரை செடியை வைத்துவிடுவார் இதனால் வெயில் நேரங்களில் பூசாத சுவர் தண்ணீரை உறிஞ்சி அறையில் உள்ள வெப்பத்தை கொண்டு நீரை ஆவியாக்கி வீட்டை குளிர்ச்சியாக்குகிறது.

பெரும்பாலான கட்டிடங்களில் கூரை அமைக்கும் போது அதனை சாய்தள கூரையாக அமைப்பார் இம்முறையால் அறையில் உள்ள வெப்பம் உச்சியின் வழியாக சுலபமாக வெளியேறும் இதற்கு பக்கச்சுவர்களின் உயரமும் எட்டு அடி இருந்தால் போதும் மேலும் கைப்பிடிச் சுவர் கட்ட வேண்டிய தேவையில்லை இதற்கு கூரையின் கணமும் குறைவாக இருந்தால் போதும்.

மேலும் மேற்கூரை அமைக்கும் போது மூன்று அடி வெளிப்பக்கம் சன்செட் போல நீட்டி விடுவார் இதன்மூலம் சுவரின் மீது சூரிய வெப்பமும் மழை நீரும் நேரடியாக படுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலமும் வெப்பத்தைக் குறைக்கலாம்.

தொடரும்….
உங்கள் ஆதரவுடன் நான் ஹரி

சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள்

சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள்

சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள் இவற்றைச் செயல்படுத்தினால் கட்டடத்தின் செலவுகளைப் பெரும்பாலும் குறைக்கலாம்.

வீடு என்பது வசிப்பிடம் என்ற நிலையிலிருந்து, தம் வளத்தைக் காட்டும் இடமாக மாறிவிட்டது. இலட்சங்கள் இல்லாமல் வீடு கட்ட முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. ஆனால், நம் பண்டைய வாழ்வில் கட்டடம், இவ்வளவு தூரம் பணம் உறிஞ்சாது. இன்றைய நிலையில் சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது குறித்து, நாம் விழிப்புணர்வு பெற வேண்டும்.

அகமதாபாத் நகரம், கட்டடக் கலையின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்களான லூயி கான், கபூசியர், சத்தீஸ் குஜரால் (முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜராலின் சகோதரர்), பாலகிருஷ்ண டோஷி போன்றோர் அங்கு மிகச் குறைந்த செலவிலேயே கட்டடங்களை உருவாக்கினர்.

போபாலில் நடைபெற்ற விஷ வாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயில் பாலகிருஷ்ண டோஷி வீடுகட்டித் தந்தார்.

பூசப்படாத செங்கல் சுவர் மூலம் கணிசமாகச் செலவைக் குறைக்கலாம். லண்டன் கட்டடக் கலைஞரான லாரி பேக்கர், இது குறித்துப் பல ஆய்வுகள் மேற் கொண்டுள்ளார்.

காந்தியைப் பார்க்க இந்தியா வந்த இவர், காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, எளிய கட்டடங் களை உருவாக்கத் தொடங்கினார். கேரளத் தலைமைச் செயலகத்தைக் கட்ட, கேரள அரசு, இவரிடம் நான்கு கோடி ரூபாய் கொடுத்தது. ஒரே கோடியில் கட்டி முடித்து, மூன்று கோடியை அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.

திருவனந்தபுரத்தில் ஒரு பூசப்படாத வீட்டில் வசிக்கிறார். கட்டடக் கலையின் காந்தி என அழைக்கப்படும் இவரின் கருத்துகள், மிக முக்கியமானவை.

* சுவரை எழுப்பிவிட்டு, அதன்மேல் சிமென்ட், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், வண்ணம் (பெயின்ட்) ஆகியவை பூசத் தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது. சுவரைப் பூசாமல் விட்டால் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு.

* நகரத்துக் கட்டடங்கள், கனசதுரமாகவே இருக்கும். சமதளமான கூரையைக் கொண்டவை. ஆனால் பழங்காலத்து வீடுகள், சரிவான கூரை கொண்டவை. அதன் மூலம் தண்ணீர் வழிந்து ஓடிவிடும்

* கடைக்காலிடும்போது வெட்டும் மண்ணை, வேறெங்கோ போய்க் கொட்டவேண்டாம். அதே கட்டடத்தின் ஜல்லிக் கலவைக்கே பயன்படுத்திக் கொள்ளலாம்.

* குறைந்த ஆழத்தில் அஸ்தி வாரம் போட்டால் போதும். தஞ்சை பெரிய கோயில் நான்கு அடி ஆழமான அடித்தளத்தில் தான் நிற்கிறது.

* சுவரும் தரையும் சந்திக்கும் இடத்தில் சுவருக்குப் பெயின்டுக்குப் பதில் தார் அடிக்கலாம்.

* 10 கி.மீ.-இல் என்ன கல் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தலாம். தொலைதூரத்திலிருந் தெல்லாம் வரவழைக்கவேண்டாம். போக்குவரத்துச் செலவு குறையும்.

* மேசை-நாற்காலி போன்ற மரச் சாமான்களை அப்படியே பயன் படுத்தலாம். அதன்மேல் பெயின்ட் அடிக்கவேண்டாம்.

* மூலைச் சுவர்களை அலமாரி வைக்கப்பயன்படுத்தலாம். அங்கு சுவரின் வலிமை அதிகம்.

* வெளிப்புறத் தோற்றத்தைப் பற்றி மட்டுமே கொத்தனார்கள் கவலைப்படுகிறார்கள். காற்றும் வெளிச்சமும் வரமுடியாமல் எல்லாத் திசையையும் அடைத்து விடுகிறார்கள். வடகிழக்கு-தென் மேற்குப் பருவக்காற்றுக்கு ஏற்ப வீடுகளைக் கட்டவேண்டும்.

– இவை அனைத்தும் லாரி பேக்கர் கூறும் யோசனைகள். இவற்றைச் செயல்படுத்தினால் கட்டடத்தின் செலவுகளைப் பெரும்பாலும் குறைக்கலாம்.

தொடரும்…….
உங்கள் ஆதரவுடன் ஹரி

பசுமை வீடுகள்

பசுமை வீடுகள்

சிமெண்ட் கட்டிடங்களில் இருந்து வெளிவரும் ரெடியேஷன் எனப்படும் கதிர்வீச்சு மிகமிக அதிகம்.இதனால் உடலில் ஏற்படும் நோய்கள் பல.

மற்றும் மண்ணை கொண்டு லாரி பேக்கர் முறையில் வீடு கட்டும் போது பழைய கூரை வீடு போன்ற குளிர்ச்சியான சீதோசண நிலை கிடைக்கும்.

Continue reading

உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள்

உயிர் உரங்கள் ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள்

#உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் போன்றவற்றை குறித்து கேள்வி பதில்கள்

பயிர் பாதுகாப்பிற்கான உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் போன்றவற்றை கத்தரி. தக்காளி. மிளகாய், வெங்காயம் போன்றவற்றில் சில கேள்வி பதில்களைப் பற்றி பார்க்கலாம்.

1. நல்ல நிலம் எப்படி இருக்கனும்?

வடிகால் வசதியுள்ள வளமான மண்ணாக இருக்கனும்.
Pர் 6.5 முதல் 7.5 வரை கார அமிலம் இருக்கனும்
மண்ணில் நீர் பிடிப்பு தன்மை இருக்கனும்

2. பயிருக்கு என்னென்ன சத்துக்கள் போடனும் அவை
யாவை?
மொத்தம் பயிருக்கு இடவேண்டியசத்துக்கள் 16 அவை
பேரூட்டச்சத்துக்கள் , நுண்ணூட்டச்சத்துக்கள்

பேரூட்டச்சத்துக்கள் என்பது அதிகளவில் பயிர்களுக்கு
போடக்கூடிய உரமாகும்
நுண்ணூட்டச்சத்துக்கள் என்பது பயிருக்கு குறைந்த
அளவில் கொடுக்கக் கூடிய உரமாகும்.

சத்துக்கள்
1. தழைச்சத்து
2. மணிச்சத்து
3. சாம்பல் சத்து
4. சுண்ணாம்பு சத்து
5. மெக்னீசியம்
6. கந்தகம்
7. துத்தநாகம்
8. இரும்பு
9. போரான்
10. மாங்கனீசு
11. குளோரின்
12. மாலிப்டினம்
13. போராக்ஸ்
14. கார்பன்
15. ஹைட்ரஜன்
16. ஆக்சிஜன்

தழை, மணி, சாம்பல் – இவை பேரூட்டச்சத்துக்கள்
தழைச்சத்தும், மணிச்சத்தும் வாயுநிலையில் இருக்கும்.
பயிருக்கு காற்றின் மூலம் கிடைக்கும்

கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிசன் (வாயுநிலை ) இவை
கொழுப்புச்சத்து காற்றிலிருந்து கிடைக்கும்.
மண்ணிலிருந்து கிடைக்ககூடிய சத்துக்கள்
சாம்பல் சத்து, சுண்ணாம்புசத்து

3. சத்துக்களை எப்பொழுது பயிர்களுக்கு போட வேண்டும்?

மணிச்சத்தை அடியுரமாக மட்டுமே போட வேண்டும். மற்ற சத்துக்களை களை வெட்டிய பிறகு கூட போடலாம்.

நுண்ணூட்ட சத்துக்களை நடுவதற்கு முன் மேலாக தூவிவட வேண்டும். இவற்றை மேலுரமாகவும்,
இலைவழி உரமாகவும் கொடுக்கலாம்.

4. விதை நேர்த்தி செய்ய டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் எவ்வளவு கலக்க வேண்டும் இரண்டையும் ஒன்றாக கலக்கலாமா?

டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் கலக்கலாம் இரண்டையும் ஒன்றாக கலக்கக் கூடாது.
சூடோமோனஸை இரும்புச்சத்து இல்லாத செம்மண் நிலங்களுக்கு மட்டும் விதை நேர்த்தி செய்ய பயன்படுத்தலாம்

சூடோமோனஸை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம்.

5. மேட்டு நாற்றங்கால் தயாரிக்கும் பொழுது ஏன் நீளம் அளவு தேவையில்லை அகலம் மட்டும் 3 அடி வைக்கவேண்டும் காரணம் என்ன?

மேட்டு நாற்றங்காலில் ஈரப்பதம் ஒன்று சேர்வதற்கும்
சீராக தண்ணீர் எல்லா இடங்களுக்கும் பரவவும்.
களை எடுக்க ஏதுவாகவும்; இருக்கும்.

6. கத்தரி நாற்றின் வயது எவ்வளவு இருக்கனும்?
நாற்றங்காலில் 22 முதல் 25 நாள் வயதுடைய நாற்றுக்களை எடுத்து நடவு செய்யனும்.

7. கத்தரி நடவு செய்தவுடன் என்னென்ன நோய்கள், பூச்சிகள் வரும்?

வாடல் நோய், இலைக்கருகல் நோய் தண்டு அழுகல், சாறு உறிஞ்சும் பூச்சிகள், எறும்பு, வெள்ளைஈ, தண்டு துளைப்பான், காய்ப்புழு

8. கத்தரி நடவு செய்தவுடன் எறும்பு, சாறுஉறிஞ்சும் பூச்சிகள், வெள்ளைஈ, தண்டுதுளைப்பான், காய்ப்புழு இவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.?

ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்
ஒட்டுண்ணி அட்டைகட்டலாம் ஒரு எக்கருக்கு 3 சி.சி
இனக்கவர்ச்சிபொறி ஒரு ஏக்கருக்கு 2 இடங்களில் வைக்கலாம்
நிறப்பொறி மஞ்சள் அட்டை, ஒரு ஏக்கருக்கு 4 இடத்தில் வைக்கலாம்
விளக்குப்பொறி, ஒரு ஏக்கருக்கு ஒரு இடத்தில் வைத்து கவர்ந்து அழிக்கலாம். தாவர இலைச்சாறு அடிக்கலாம்.

9. நோய் தாக்குதல் என்றால் என்ன? பூச்சி தாக்குதல்
என்றால் என்ன?

சாறு உறிஞ்சும் பூச்சிகளின் மூலம் நோய்கள் ஏற்படுகிறது கத்தரியில் சிற்றிலை நோய் வாடல், இலைகருகல் நோய் வரும. நூற்புழு தாக்குதல் தண்டுதுளைப்பாண், காய்ப்புழு, காய் அழுகல்

10. காய்கறி பயிர்களுக்கு போடக்கூடிய நுண்ணுயிர் உரம் எது?

அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா

11. 100 கிலோ கத்தாரிக்காய் உற்பத்தி செய்ய அவை
மண்ணிலிருந்து எடுத்துக் எடுத்துக்கொள்ளும்
சத்துக்களின் அளவு என்ன?

தழைச்சத்து – 4
மணிச்சத்து 0. 5
சாம்பல் சத்து 6
சுண்ணாம்பு சத்து 2
மெக்னீசியம் 0.5
கந்தகம் 0.5

12. 100 கிலோ தொழுவுரத்தில் உள்ள சத்துக்களின் அளவு என்ன?

தழைச்சத்து – 1
மணிச்சத்து 0. 5
சாம்பல் சத்து 1
சுண்ணாம்பு சத்து 3
மெக்னீசியம் 0.5
கந்தகம் 0.5

13. சூப்பர்பாஸ்பேட்டை எப்படி போட்டால் சத்துக்கள் வீணாகாமல் பயிருக்கு அப்படியே கிடைக்கும்?

ஊட்டமேற்றிய தொழுவுரமாக மாற்றி போட்டால் சத்து அப்படியே பயிருக்கு கிடைக்கும்.

14.ஜிப்சத்தில் உள்ள சத்துக்கள் என்ன அளவு எவ்வளவு?
கந்தகசத்து 14 சதம்
சுண்ணாம்பு சத்து 22 சதம்

15.பயிருக்கு நோய்வர காரணிகள் என்ன?
காலநிலை – ( வெளிக்கூறுகள்)
ஊட்டச்சத்து பற்றாக்குறை
விதை நேர்த்தி செய்யாமை
நீர் பாய்ச்சுவதன் மூலம்

16.கத்தரியில் பச்சை தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்.?

பூச்சி விரட்டியை பயன்படுத்தலாம்
மஞ்சள் அட்டை கட்டலாம்
ஊடுபயிர் சாகுபடி செய்யலாம் ( மகரந்தம் அதிகம் இருக்கக்கூடிய பயிர்கள் மக்காச்சோளம், சூரியகாந்தி போன்ற பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.விளக்குப் பொறி வைக்கலாம்.

17. தத்துப்பூச்சியின் தாக்குதல் எப்படி இருக்கும்? இலைப்பேன் தாக்குதல் எப்படி இருக்கும்?

தத்துப்பூச்சியின் தாக்குதல் – இலை கீழ்நோக்கி சுருண்டு காணப்படும் இலைப்பேன் தாக்குதல் – இலைமேல் நோக்கிசுருண்டு காணப்படும்.

தத்துப்பூச்சி – மூன்று வகைதான் இருக்கும்
முட்டை பருவம், இளம் பருவம், முதிர்ந்த பருவம்
இறக்கைஇருக்காது

சாறு உறிஞ்சும் பூச்சி. முட்டையை தண்டுக்குள் இடும்.
புழு பருவம் இருக்காது.

செம்பேன் , இலைபேன், மாவு பூச்சி இவை மிகச் சிறியது
காற்று அதிகமாக இருந்தாலும், வெயில் அதிகமாக
இருந்தாலும் இப்பூச்சிகள் வரும். மாவு பூச்சியை பயிர் சிலந்தி என்று கூறுவர்.

18. அஸ்விணியை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்.?
அஸ்விணி முட்டை இடாமல் குஞ்சு பொறிக்கும் தன்மை
உள்ளது

இவை ஒன்று பத்தாகும் பத்து நூறு ஆகும் இப்படி பெருகிக்கொண்டே போகும். உணவு பற்றாக்குறை – தீனி குறைவாக இருந்தால் இறக்கை முளைத்து விடும். – ( பறந்து வேறு இடங்களுக்கு சென்று

விடும்) இவற்றை கட்டுப்படுத்த

ஊடுபயிர் தட்டபயிர் சாகுபடி செய்யலாம்.
உரத்தை குறைக்கனும்,
வேப்பங்கொட்டைச் சாறு அடிக்கலாம்.
மைதா மாவு, கோதுமை மாவு கரைத்து ஊற்றலாம்.
தாவரக் கலைசல். அடிக்கலாம்.

பூண்டு அரைக்கிலோ, மிளகாய் அரைக்கிலோ, வேப்பங்கொட்டை இடித்த தூள் 1 கிலோவை 1 லிட்டர் கோமியத்தில் ஒரு நாள் ஊறவைத்த கரைசல் அடிக்கலாம். (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி)

19. தக்காளியில் வாடல் நோய்க்கும், பாக்டீரியா வாடலுக்கும் என்ன வித்தியாசம்?

வாடல் நோய் கொஞ்சம், கொஞ்சமாக வாடும்.
பூஞ்சாண நோய் ஒரு பைப் லயன் – இவை பயிரின் வேர்
அடைத்து இருக்கும் பயிர் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்( நூற்புழு வேரை அடைத்துவிடும்.) அதனால் பயிரின் மற்ற பாகங்களுக்கு போகும் சாறை ( பைப் லயன் அடைத்து விடும்) பாக்டீரியா வாடல் உடனே வாடிவிடும். –(இலைகருகி)பாக்டீரியா வாடல் – ஒரு

கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி
அதில் செடியின் வேரை பாகத்தை வெட்டி தண்ணீர் நிறம்பிய டம்ளரில் வேரை போடவேண்டும் அதில் ஒரு வித திரவம் வடியும் அப்படி வடிந்தால் அது பாக்டீரியா வாடல் நோய் எனப்படும்