Month: December 2019

வடகிழக்கு பருவமழை

*வடகிழக்கு பருவமழை* தமிழகத்தில் முறையான அளவு,தேவையான அளவு எந்த பகுதியிலும் பெய்யாத நிலை உள்ளது.
எந்த ஒரு மாவட்டத்திலும் முழுமையான பரப்பளவிற்கு பொதுவான மழை கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் பொதுவான அல்லது அதிகமான ஆழத்தைப் பொறுத்த வரையில் 8 உழவு மழை எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தூரல், சாரல் மற்றும் அவ்வப்போது பெய்த மழை என அனைத்தையும் கூட்டினால் கூட 2 – 2.5 உழவு மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் குளங்கள், கண்மாய்கள்,ஏரிகள் முழுக் கொள்ளளவுக்கு நிறையாமலும் அடுத்த கோடைக்குத் தேவையான நிலத்தடிநீர் மட்டத்தை செறிவூட்டும் வகையிலும் இல்லை.
பொலபொல என நீண்டு பெய்த சாரல் அதிகமழை உணர்வைக் கொடுத்தாலும் தமிழகத்தின் நிலத் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை.

எனவே மழை முடிந்த இந்த சூழலில் விவசாயிகள் புதிய போர் போட்டு பணத்தை விரயமாக்காமல் *நீர் சிக்கனத்தைத்* தாரக மந்திரமாகக் கொண்டு கீழ்கண்ட ஆலோசனைகளைக் கடைபிடிக்கலாம்.

1. நெல், கரும்பு, வாழை, மஞ்சள் பயிரிடுவதைத் தவிர்க்கலாம். அல்லது சாகுபடி பரப்பைக் 4கில் 1 அளவாகக் குறைக்கலாம்.
2 .அனைத்து பயிர்களுக்கும் அரசின் மானியத்துடன் கூடிய *சொட்டுவான்களுடன்* கூடிய சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கலாம்.
3. *மூடாக்கு அமைப்பது* அனைத்து வகைப் பயிறுகளிலும் வயல்களிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
4. வயல்வரை வாய்க்கால்வழி பாய்ச்சுவதைத் தவிர்த்து *பைப்களின் வழி* கொண்டு செல்லும் வகையில் உடன் அமைக்க வேண்டும்.
5. *தொட்டிகள் கட்டி அல்லது சின்டெக்ஸ் போன்ற PVC தொட்டிகளில்* கிணறு,போரிலிருந்து கிடைக்கும் சிறிதளவு நீரைக் கூட சேகரித்து பாசனதத்தை அளவாக முறையாகத் தேவையான அளவில் செய்ய வேண்டும்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்.

பெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லியின் பயன்கள்

*பெவேரியா பேசியானா* என்ற இயற்கை பூச்சிக்கொல்லியின் பயன்கள்

ரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி பல்வேறு பூச்சிகளுக்கு நோய்களை உண்டாக்கி அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது.

பூச்சிகளை அழிப்பதில் பெவேரியா பேசியானா என்ற பூஞ்சான பூச்சிக் கொல்லி முக்கியமானதாகும்.

பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி எந்தெந்த பூச்சிகளை கட்டுப்படுத்த எவ்வளவு பயன்படுத்துவது?

கட்டுப்படுத்தும் பூச்சிகள்:

•பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி நெல், இலை சுருட்டுப்புழு, இலைப் பிணைக்கும் புழு, கொம்புப் புழு, கூண்டுப்புழு, குட்டை கொம்பு வெட்டுக்கிளி, முள் வண்டு, புகையான் மற்றும் பச்சைத் தத்துப்பூச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

• தக்காளியில் பழத்துளைப்பானை கட்டுப்படுத்தும்.

•மணிலா, பருத்தி வகைகள், சூரியகாந்தி, பச்சை மிளகாய், கனகாம்பரம், கேந்தி மலரில் தோன்றும் பச்சைப் புழு(ஹலியாதிஸ்) மற்றும் புரடீனியா புழு (ஸ்போடோட்டீரா) ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.

•பருத்தியில் உள்ள அனைத்து காய்ப்புழுக்கள் மற்றும் வெள்ளை வண்டு, கரும்பு தண்டுத் துளைப்பான்கள், தென்னை காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூண்வண்டு ஆகியவைகளையும் கட்டுப்படுத்தும்.

•கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரையில் தோன்றும் காய்த்துளைப்பானுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

• மாமரத்தில் தோன்றும் இலை மற்றும் பூ பிணைக்கும் புழுக்கள், தேக்கு மரத்துளைப்பான், வாழை கிழக்கு கூண் வண்டு மற்றும் தண்டு கூண் வண்டு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.

பயன்படுத்த வேண்டிய அளவுகள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்

பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்

பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்

அனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரங்க்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும்.

உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி இப்பொழுதே நடவு செய்யலாம். தற்பொழுது பழ மரங்கள் நடவு செய்ய சில விபரங்ககளை பார்க்கலாம்

மா
பல்வேறு மண்ணிலும் வளரும், களர் வடிகால் வசதியற்ற மண் உகந்ததல்ல வளமான குறுமண் மிக ஏற்றது. அதிக மணலாக இருந்தால் மரம் வளரும். ஆனால் பழத்தின் தரம் குறையும்.மண்கண்டம் ஆழம் வேண்டும். ஆழம் குறைந்தால் பழம் புளிக்கும்.

கொய்யா
களர் நிலத்திலும் கூட வளரும். ஆயினும் மணல் கலந்த வடிகால் வசதியுடைய நிலங்;களில் வறட்சியைத் தாங்கும். ஆயினும் பாசன நிலங்;களிலேதான் அதிக மகசூல் கிடைக்கும்.

சப்போட்டா
இதன் வேர்கள் அதிக ஆழத்தில் செல்லாது, ஓரளவுக்கு உவரைத் தங்;கி வளரும். வடிகால் வசதியுடைய ஆழமான வண்டல், செம்மண், கரிசல்மண், மணல் கலந்த மண் வகையில் நன்கு வளரும்.

எலுமிச்சை
மண்ணில் கார அமில நிலை 6-5- 7.0 க்குள் இருந்தால் நலம். இதன் வேர்கள் மேலாகவே படர்ந்திருக்கும்.
வடிகால் வசதிமிக்க கரிசல் மற்றும் மணற் பாங்கான வண்டல் மண்ணில் நன்கு வளரும்.

மாதுளை
களர் ஈரப்பதத்தையும் தாங்;கி வளரும்.
ஆழமான மணற்பாங்கான வண்டல் மண்ணில்; நன்கு வளரும்

பப்பாளி
வடிகால் வசதியும், அதிக உரமும் இடப்பட்ட மணல் கலந்த மண் ஏற்றது. வண்டல் மற்றும் மிதமான கரிசல் மண்ணிலும் வளரும். சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ள நிலங்;களிலும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளிலும் நன்கு வளராது.

சீத்தா
மணற்பாங்கான வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. வறட்சியை தாக்கு பிடித்து வளர்ந்து மகசூல் கோடுக்கும், ஆடுமாடு கடிக்காது.

பலா
ஆழமான வண்டல் நிங்கள் ஏற்றவை.
காற்றிலே ஈரப்பதமும், வெப்பமான தட்ப வெப்ப நிலையும் ஏற்றவை.

வழகால் வசதி குன்றிய, நீர் மட்டம் மேலாக உள்ள இடங்கள் ஏற்றவையல்ல

சீமை இலந்தை
ஆழமான வேர்ப்பகுதி வளரும் பலதரப்பட்ட மண்ணிலும் வளரும். வறட்சி மற்றும் நீர் தேங்கும் நிலங்களிலும் வளரக் கூடியது.

நெல்லி
குறைந்த அளவு மண் கண்டத்திலும் தாக்குபிடித்து வளரும்,
கார அமில நிலை 7.5- 8.5 விரும்பத்தக்கது. 9.5 பிற பழமரங்கள் வளரமுடியாத நிலையிலும் கூட தாக்கு பிடிக்கும். காற்றிலே ஈரப்பதமான சூழ்;நிலையும், மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களின் உதவியும் அவசியம் தேவை.

தென்னை
ஆழமான, வளமான மண்கண்டம் அவசியம், களிம்பு இல்லாத மணல் கலந்த வண்டல் மிகச் சிறந்தது.

வெள்ளாடு வளர்ப்பின் வழிமுறைகள்

நம் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில் வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாக உள்ளது. மிகவும் வளம் குன்றிய பகுதிகளில் உள்ள மோசமான சூழ்நிலையில் வளரும் செடிகள்  மற்றும் மரங்களை கொண்டு ஆடுகளை வளர்க்கலாம்.

Continue reading