Month: April 2020

நம்மாழ்வார் என்கிற ஒரு அளவிலா விளைவுவிசை

சிவா… நான் பேசுன பேச்சுக்கள, நான் எழுதுன எழுதுன எழுத்த, நான் பகிர்ந்த தத்துவத்த… இந்த எல்லாத்தையும் நம்பி ஒருத்தன் சின்ன வைராக்கியத்தோட களத்துல இறங்கி வேல செய்வான். ‘அந்தாளு சொன்ன எல்லாமே பொய்யா இருக்குது, எதையுமே செயல்படுத்த முடியலையே’ அப்டின்னு ஒருநாள் அவன் உள்மனசுக்குத் தோணும். அந்த சமயத்துல அவனா ஒரு முடிவெடுத்து, அவனுக்கு உள்ளே புதுசா தோணுன ஒரு எண்ணத்துல இருந்து ஒரு செயல அவனே சுயமா கண்டுபிடிப்பான். அது முழுசா செயல்சாத்தியம் ஆகும். அந்த இடம்… அங்கதான்ய்யா என் தத்துவம் வெற்றி பெறுது

Continue reading

நம்மாழ்வார் பிறப்பும் இறப்பும் உணர்த்திய செய்தி

nammlavaar

பேச்சைவிட அவரது அந்தச் சிரிப்பு, வார்த்தைகளின் வசீகரத்தை விட நம்மாழ்வாரின் சிரிப்புக்கு மயங்காத நபர்களே இல்லையெனலாம், எருக்கலம் காய் வெடித்து சிதறும் பஞ்சு போல ஒரு சிரிப்பு ஒலி, யாருடைய அங்கிகார எதிர் சிரிப்புக்கும் தலையசைவுக்கும் காத்திராமல் வெடித்து சிரிக்கும் அந்த சிரிப்பு சத்தம் தான் எனை மிகவும் நெருக்கமாக உணரச் செய்தது, அருகிருப்போரை அரவணைக்கும் பார்வையும், பேச்சும், சிரிப்பும் அகலாத மனிதன்.

Continue reading

கொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழிமுறைகள்

பழ ஈ தாக்கத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருவாட்டு பொறியை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 எண்ணிக்கையில் ஆங்காங்கே, நான்கு மரங்களுக்கு நடுவே, மரத்தின் உயரத்தில் பாதி உயரத்தில் கட்டி வைக்கலாம். இதனால் பழங்களில் வரும் காய்ப்புழு சொத்தை, அழுகல் போன்ற விஷயங்களை தடுத்து வருமான இழப்பை குறைக்கலாம்.

Continue reading

உழவு – அதிகாரம் 104

tiruvalluvar statue

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை -1031.
———-
சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகில், எவ்வளவு மதிப்பை உடைய தொழில்களை மக்கள் செய்தாலும், அவரவர் வயிற்றுப் பாட்டுக்கு உணவையே எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.

எத்தகைய தொழில் நடக்காமல் நின்று போனாலும் யாரும் பசியில் வாடமாட்டார்கள். ஆனால் உழவுத்தொழில் ஒன்று மட்டும் நின்று போனால் உலகம் சுற்றுவதே நின்றது போலாகிவிடும்.

எத்தகைய தொழில் செய்வோரும் உழவினால் வரக்கூடிய உணவை உன்பவரே.

Continue reading