Month: May 2021

பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை

rice-field

பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை: பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும் எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.

Continue reading

உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சுமா

நாம் பொதுவாக அனைத்து கூட்டங்களிலும் கேட்கும் ஒரு வாக்கியம் உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது என்ற வாசகம்

மக்கள் தொகை பெருக்கமும் மனித வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்களும் ஒவ்வொரு தொழிலாளியும் தினசரி வருமானத்தை அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையும் ஒரு பயிரை முழுமையாக வளர்ப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் இடுபொருள் செலவும் அதிகரித்து கொண்டு வரும் சூழலால் ஏற்படும் வாக்கியம் அது.

Continue reading

மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு

jasmine

மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு:

இளம் மல்லிகை பூக்களை தாக்கும் இளம் மஞ்சள் நிற மொட்டு புழு, பூக்களின் உள்ளே நூலாம்படை போன்ற அமைப்பை உருவாக்கி, மலரின் உள்பகுதியை சாப்பிடுவதால் பூக்கள் இறுதியாக சிவப்பு நிறம் மாறி கருகி விடுகிறது.
மல்லிகை சாகுபடியில் வருமானத்தை குறைக்கும் இந்த புழுக்களிலிருந்து பயிரினை பாதுகாக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து செய்யலாம்.
1. சிவப்பு நிறத்தில் பாதிக்கப்பட்ட இளம் அரும்புகளை வாரம் ஒரு முறை சேகரித்து பாலித்தீன் பையில் கட்டி அப்புறப்படுத்தலாம்.
2. 10 லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் வேப்பங் கொட்டையை இடித்து ஊறவைத்து அதில் காதி சோப்பு அல்லது சிகைக்காய் கலந்து நன்கு பால் ஆகும் அளவுக்கு கரைத்துவிட்டு அதனை மாலை வேளையில் தெளிக்கலாம். வாரம் ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தெளிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணையை நன்கு கரைத்து பின்பு தெளிக்கலாம்.
3. ஏக்கருக்கு 4 எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறிகளை பயிரின் மேல் பரப்பில் பொறியின் தலைப்பகுதி இருக்குமாறு கட்டி விடுவது நல்லது.
4. 10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். வாரம் ஒரு முறை என மூன்று வாரங்களுக்கு தெளிக்கலாம்.
5. மல்லிகைச் செடியை முறையான காலங்களில் கவாத்து பண்ணுவதும் நிலத்தை சுத்தமாக வைத்திருப்பதும் நல்லது.
6. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை இயக்குவது நல்லது.
7. இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் காய்ந்த பூக்களை எடுத்த பின்பு தெளிப்பது நல்ல பலன் தரும்.
8. மல்லிகைச் செடிகளை சுற்றி உள்ள களைச் செடிகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். இவ்வகைச் செடிகளில் தான் இந்த புழுக்களை உண்டாக்கும் பூச்சிகள் வாழ்ந்து கொண்டிருக்கும்.
செடி நன்கு வளர்ச்சி அடைய மற்றும் அதிக பூக்கள் பூக்க செடிகள் அதிக வருடம் மகசுல் தருவதற்கு இயற்கை விவசாயம் செய்வோம்..
..ஒவ்வொரு தெளிப்புக்கும் (10நாள் இடைவெளி ).பஞ்சகவ்யம், மீன் அமிலம், பழம் EM ஜீவமிர்தம், பூச்சி விரட்டி தெளிப்புக்கு பயன்படுத்தவும்
ஒவ்வொரு பாசனத்திலும் பஞ்சகவ்யம், மீன் அமிலம், பழம் EM, ஜீவமிர்தம், சூடோமோனாஷ்…. இவையெல்லாம் ஒவ்வொன்றாக தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்..
பூச்சி தாக்குதலுக்கு
அக்னி ஆஸ்திரம் or 18இலை மூலிகை பூச்சி விரட்டி,,, 10நாளுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்….
நாள் பட்ட நோய் தாக்குதல், நெமற்றோடு பிரட்சனை, வளர்ச்சி குறைவு, மஞ்சள் தன்மை,பூக்கள் குறைவு….இவையெல்லாம் படிப்படியாக விரைவில் குறைந்து நல்ல மகசூல் ஏற்படும்…..
அனைவருக்கும் நன்றி
திரு கொய்யா ஆறுமுகம் MA இயற்கை விவசாயி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி 9655950696

கரும்பு பயிர் செய்வதற்கான நாள் வாரி அட்டவணை

sugarcane

கரும்பு பயிர் செய்வதற்கான நாள் வாரி அட்டவணை: இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் நடவு மற்றும் மருதாம்பு கரும்பு பயிர் செய்வதற்கான உத்தேச நாள் வாரி அட்டவணை

Continue reading

கால்நடைகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்கள்

மாடுகளுக்கான அடர் தீவனமுறை

விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள் மற்றும் நோய்கள் மூலம் அவற்றின் உயிருக்கோ அல்லது உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம்.

இவற்றிற்கு தக்க மருத்துவம் செய்யும் முன் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யலாம்.

Continue reading

நிலப்போர்வை அல்லது மூடாக்கு ஒரு பார்வை

பிளாஸ்டிக் நிலப்போர்வை பாலியெத்திலின் பொருட்களால் ஆனது.விவசாயத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் அணுகுமுறை பிளாஸ்டிக்கல்ச்சர் ( Plasticulture ) என்று அழைக்கப்படுகிறது . பிளாஸ்டிக் நிலப்போர்வையில் பல்வேறு வகைகள் உள்ளன

Continue reading

ரோஸ்மெரி சாகுபடி

ரோஸ்மெரி சாகுபடி

வடிகால் வசதியுள்ள செம்பொறை மண் மிகவும் ஏற்றது . மண்ணின் கார அமில நிலை 5.5 முதல் 7.0 வரை இருக்கலாம் . இது 5.0 க்கும் குறைந்திருந்தால் , எக்டருக்கு 2.5 டன் டோலமைட்டை இடலாம் . பனியற்ற மிதவெப்ப மழைக்காலம் மற்றும் 30 டிகிரிக்குக் குறைவாக வெப்பமுள்ள கோடையிலும் , கடல் மட்டத்திலிருந்து 900-2,500 மீட்டர் உயரத்திலும் நன்கு வளரும் . ஜூன் , ஜூலை . செப்டம்பர் , அக்டோபரில் பயிரிடலாம் . பன்னிரண்டு ஆண்டுகள் வரையில் நல்ல மகசூல் கிடைக்கும் .
நிலம் தயாரித்தல் :
இருமுறை உழ வேண்டும் . கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 50 டன் தொழுவுரம் , ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு , 5 டன் இயற்கை உயிராற்றல் உரம் மற்றும் 2 டன் மண்புழு உரத்தை வேண்டும் . பிறகு , 30 செ.மீ. உயரம் , 1.5 மீ . அகலத்தில் பாத்திகளை அமைக்க வேண்டும் . நடவின் போது 5 கிலோ அசோஸ்பைரில்லம் , 5 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை இட வேண்டும் . ஒரு எக்டர் நடவுக்கு 50,000 நாற்றுகள் தேவைப்படும் .
நாற்று உற்பத்தி:
செடிகள் பூப்பதற்கு முன் தண்டுகளை வெட்டி , 10-15 செ.மீ. நீளமுள்ள துண்டுகளாக நறுக்க வேண்டும் . நுனி இலைகள் இருக்க , மற்ற இலைகளை நீக்க வேண்டும் . வேர்விடும் திறனைக் கூட்ட , 10 % சாண மூலிகைக் கரைசலில் 20 நிமிடம் நனைக்க வேண்டும் . பின் நெகிழிப் பைகளில் நட்டு , நிழலில் வைத்து , தினமும் இருமுறை நீரூற்றி வந்தால் , 60 நாட்களில் நாற்றுகள் தயாராகி விடும் .
நடவு :
45X45 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும் . ஆறு மாதம் கழித்துச் செடியின் மையத்தண்டை வெட்டி விட்டால் , பக்கக் கிளைகள் நன்கு வளரும் . இதை மானாவாரியாகப் பயிரிடலாம் . வறட்சியில் பாசனம் செய்தால் பச்சை இலைகள் அதிகமாகக் கிடைக்கும் .
பின்செய் நேர்த்தி :
நட்டு ஒரு மாதத்தில் களையெடுக்க வேண்டும் . ஆண்டுக்கு 4-5 முறை களையெடுத்தல் அவசியம் . இரண்டாம் ஆண்டு முதல் பாஸ்போபாக்டீரியம் மற்றும் அசோஸ்பைரில்லத்தை எக்டருக்கு 5 கிலோ எடுத்து , 30 கிலோ தொழுவுரத்தில் கலந்து வேண்டும் . மேலும் , 3% பஞ்சகவ்யக் கரைசலை ஆண்டுக்கு ஐந்து முறை பத்து நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் . மேலும் , இக்கரைசலை மண் அணைத்தல் முறையில் மாதம் ஒருமுறை இட வேண்டும் .
5% வேப்பெண்ணெய்க் கரைசல் , 10 % . மண்புழு வடிநீர்க் கரைசல் , 3% தசகவ்யக் கரைசலை ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும் . இதற்குப் பூச்சி , பூசண நோய்களை எதிர்க்கும் திறன் இருப்பதால் பயிர்ப் பாதுகாப்பு அவசியமில்லை . ஆண்டுதோறும் ஒரு எக்டரில் இருந்து 12-13 டன் பச்சை இலைகள் கிடைக்கும் .
அறுவடை:
நட்டு 215 நாட்களில் மகசூலுக்கு வரும் . அடுத்து , ஆண்டுக்கு மூன்று முறை , 3 – 4 மாத இடைவெளியில் மகசூலைப் பெறலாம் . ரோஸ்மேரி பூக்கும் போது இலைகளை அறுவடை செய்ய வேண்டும் . 30-35 செ.மீ. நீளத்தில் , இலையுடன் மேல் தண்டுகளை அறுவடை செய்ய வேண்டும் . மெல்லிய தண்டு எண்ணெய் எடுக்க ஏற்றது . கடினத் தண்டால் எண்ணெய்யின் தரமும் மணமும் பாதிக்கப்படும் .
பதப்படுத்துதல்:
அறுவடை செய்த இலைகளை நன்கு கழுவி நிழலில் உலர்த்த வேண்டும் . நீலகிரிப் பகுதியில் 10-15 நாட்கள் வரை உலர்த்த வேண்டும் . சமவெளியில் சிமெண்ட் தரையில் பரப்பி மின்விசிறி மூலம் உலர்த்தினால் இலைகள் சீராகக் காயும் . இதனால் மூன்று நாட்களில் 10% ஈரமுள்ள தரமான இலைகள் கிடைக்கும் . இவற்றைத் தரமான நெகிழிப் பைகளில் அடைத்து வைக்கலாம் . இவ்வகையில் , ஒரு எக்டரில் ஆண்டுக்கு 2.5 டன் உலர் இலைகள் கிடைக்கும் .
முனைவர் தே.கெய்சர் லூர்துசாமி ,
முனைவர் ப.பாலசுப்பிரமணியன் , முனைவர் மீ.திலக் , தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் , உதகமண்டலம் , நீலகிரி மாவட்டம் .