Category: தற்சார்பு வாழ்வியல்

தற்சார்பு விவசாயி-4 காற்றாடி

சோலார் 15 வருடம் உத்தரவாதம் என்பார்கள். மொத்த பணத்தையும் வாங்கிவிடுவார்கள். எலக்டிரானிக் பொருட்கள் 3 வருடத்துக்கு மேல் வராது. உங்கள் செல்போன், கணினி, மின் விசிறி, மிக்ஸி, தொலைகாட்சி இவைகளுக்கு வயசென்ன ? சொட்டை வெயிலிலும், மழையிலும் அப்பளமாக காயும் சோலார் பேனல் என்னைப்பொறுத்தவரை 3 வருடம் வந்தால் அதிசயம். பழுதானால் நாய் கூட சீந்தாது.

Continue reading

தற்சார்பு விவசாயி-3 தண்ணீர்

“விவசாயம் செய்கிறாயா? என்ன போட்டிருக்கிறாய் ?” என்று பார்ப்பவர் எல்லோரும் கேட்பார்கள். மனதிற்குள் திட்டி கொள்வேன்
“உன் வயசென்ன?” என்று பெண்களை கேட்பதும், “உன் சம்பளமென்ன” என்று ஆண்களை கேட்பதும், “இந்த வீடு என்ன விலை” என்று வீட்டுக்காரனை கேட்பதும் என்னை பொறுத்தவரை கேட்ககூடாத கேள்விகள். ஏனென்றால் பதில் சொல்லும்போது அதன் மறுபக்கத்தை எவரும் அவதானிப்பதில்லை.

கடுமையான சுட்டெரிக்கும் வெள்ளை வெயிலில், நிலத்தடி தண்ணீரெல்லாம் வறண்டு போன இடத்தில் பயிரைப்பற்றி யோசிக்கவா நேரம் ? ஏற்கனவே இருக்கும் மரங்களை காப்பாற்றுவதே பிரம்ம பிரயத்தனமாகும். தொடர்ந்து வெப்பக்காற்று அடிக்கும்போது 5 நிமிடத்துக்கொருமுறை தண்ணீர் குடித்து நிழலில் மல்லாக்க படுக்கத்தோன்றும். தண்ணீரே இல்லாத இடத்தில் புல் கூட கருகிவிடும். அப்படி தண்ணீர் இருந்தாலும் இறைப்பது எங்கனம் ?

தோட்டத்தில் எதுவும் தாமாக நடக்காது. ஒவ்வொரு துரும்பை நகர்த்தவும் முயற்சி, பணம் மற்றும் உழைப்பு அவசியம்.

ஒவ்வொரு பயிர் போடும்முன்பும் அதன் ஆயுட்காலம் முழுவதும் எப்படி தண்ணீர் பாய்ச்சுவது, பராமரிப்பது என்று திட்டமிட்டுதான் பிறகு போட முடியும். நிலம் எப்போதும் உங்களுக்காக தயாராக இராது. அதை பண்படுத்த வேண்டும். வேண்டிய நாற்றங்காலை கொண்டுவருவதே ஒரு வாரமாகும். மாதம் கூட ஆகலாம். இப்படியே ஒருமித்த சிந்தனையுடன் பல மாதங்கள் பயிரோடு கழித்துவிட்டு கடைசியில் விற்கும்/வாங்கும் உரிமை மட்டும் நம் கையிலிருக்காது.

Continue reading

தற்சார்பு விவசாயி-2 தன்னுரிமை தற்சார்பு தாளாண்மை

நான் வடிவமைத்து இருப்பது தற்சார்புடன் ஆன “அங்கக பல்லுயிர் தோட்டம்”. இதை சிலர் இப்போதுதான் நான் தொடங்குவது போல எண்ணி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அது என்னுடைய வார்த்தை குறைபாட்டால் விளைவித்த ஒரு குழப்பமேயன்றி வேறில்லை. உண்மையில் பல நிலைகளில் தோட்டத்தில் வேளாண்மை சிறு அளவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அங்கே இருவரை நியமித்து இருக்கிறேன். அவர்களின் வேலை வாய்ப்புக்காக கம்பெனி ஓடிக்கொண்டிருக்கிறது.

Continue reading

தற்சார்பு விவசாயி-1 ஆரம்பம்

அது எப்படி கழனி வாடையே கண்டிராத மாச சம்பளக்காரனுக்கு விவசாய பேராசை ? செய்ய தூண்டியது ஒரு சம்பவம்.

2010 ஆண்டில் ஹைதராபாத் மாநகரத்தின் மாராடுப்பள்ளி குடியிருப்பின் குறுகிய சந்துகளில் மாருதி காரைச் செலுத்தி ஒட்டிக்கொண்டிருக்கும்போது அது நிகழ்ந்தது. ஒரு நண்பனிடம் ஊர்பக்கத்தில் நிலம் வாங்க 50ஆ முன்பணம் அப்போதுதான் குழப்பத்துடன் தயங்கி கொடுத்திருந்தேன். சிந்தனையுடன் காரில் திரும்பும்போது திடீரென்று எதோ ஒன்று “சொத்” என்று கண்ணாடியின் மீது விழுந்தது. கண்ணை மறைத்தது.
மேல்மாடியிலிருந்து ஒரு பெண்மணி உணவுப்பொட்டலத்தை காலி மனையை நோக்கி வீசியிருக்கிறார். தவறி அது வண்டியின் மீது விழுந்துவிட்டது. கொஞ்ச தூரத்தில் காரை நிறுத்தி நெகிழியை இழுத்தால் பொட்டலம் மேலும்உடைந்து காரை மெழுகிவிட்டது. வண்டி முழுவதும் சொட்ட சொட்ட அன்னத்தால் அபிஷேகம். துடைக்க வழியில்லை.
அது ஒரு சமிக்ஜை. உணவு உற்பத்தி செய்ய உத்தரவு என்று உணர்ந்துகொண்டேன்.

Continue reading

பருவ நிலை மாற்றத்துக்கு இயற்கை வேளாண்மையின் தீர்வு

பருவ நிலை மாற்றத்துக்கு இயற்கை வேளாண்மையின் தீர்வு

நாம் மிகவும் தாமதமாகவும், மிக சிறிய அளவிலும் கிறுக்குத்தனமான தீர்வுகளை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். இந்த தொழில்நுட்ப தீர்வுகளுக்கு நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இயற்கை வழி விவசாயம், காடு வளர்ப்பு, இயற்கை வளம் காப்பது மூலம் கணிசமாக பருவ நிலை மாற்றத்தை குறைக்க முடியும். 52 கிகா டன் கரியமில வாயு ( மொத்த வருடாந்திர உலகளாவிய வாயு உமிழ்வு) அனைத்தையும் நிலத்தில் நிறுத்த முடியும்.

Continue reading

எளிய உயிர்வேலி

எளிய உயிர்வேலி
ஒரு மறைப்பானாக அதே வேளை முள் இல்லாத உயிர் வேலியாக செம்பருத்தியைத் தேர்ந்தெடுக்கலாம்.

Continue reading

வீடு கட்டுவது VS வீடு வாங்குவது

வீடு கட்டுவது VS வீடு வாங்குவது

நிலம் வாங்கி வீடு கட்ட முனையும் போது, நாம் அதனோடு நிறைய பயணிக்கிறேம். நிலம் வாங்குவதில் இருந்து வீடு முடியும் வரை ஒவ்வொரு நிலையிலும் அதன் வளர்ச்சியில் நம் பங்கு உண்டு. வீட்டின் வரைபடம் முடிவு செய்தல்,வாஸ்து,எலிவேஷன்,அறைகளின் வடிவமைப்பு, ப்ளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் டிசைன் என்று நாம் ஒவ்வொரு நிலையிலும் நம் குடும்பமாக கூடி முடிவு எடுக்கிறோம். எல்லோரும் சேர்ந்து வீட்டிற்கு என்ன டைல்ஸ் போடலாம், என்ன டிசைன் switch வாங்கலாம் என்று பார்த்து பார்த்து வாங்குவோம். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல- எல்லோருக்கும் ஒரே விஷயம் பிடித்து விடுவதில்லை.கடைக்காரர் முன்னாடி சண்டையே போட்டாலும் இதை நாம் விரும்பியே செய்கிறோம். பேசிக் கொள்ளவே நேரம் கிடைக்காத பல குடும்பங்களை வீடு கட்டும் 6 மாதங்கள் பிணைத்து விடுகிறதோ என்று தோன்றிய நாட்கள் உண்டு.

Continue reading