Category: Cattle rearing

வறட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள்

வறட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள்.

விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழில்கள் பலவற்றைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும்.

வேளாண்மையில் பயிர்சாகுபடி என்பது ஒரு அங்கம்தான். பல்வேறு பயிர்களை விதைத்து, பராமரித்து, அறுவடை செய்வது மட்டுமே முழுமையான விவசாயம் ஆகாது. இப்படி பயிர்களை மட்டுமே நம்பி நடக்கும் விவசாயத்தில் லாபமும் குறைவுதான். தவிர இந்தவகை விவசாயத்தில் மண்வளம் மளமளவென குறைந்து கொண்டே போகும்.

இந்த நிலைமையை தவிர்க்கவே இணைத்தொழில்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், மழைவளமும், நீர் வளமும் குறைந்து கொண்டு வரும் தற்போதைய சூழலில் அதற்கேற்றவாறு சுயதொழில்களைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும்.

Continue reading

சினை நிற்க இயற்கை மருத்துவம்

சினை நிற்க இயற்கை மருத்துவம்

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்.

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்: கால்நடைகளின் தற்காலிக மலட்டு தன்மையை சரி செய்ய எளிய மருத்துவம்.

இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம். அது என்ன பண்ணும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம், தீவணம் ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்னா கூட சேர்க்குறாங்க ன்னு நிஜமா நமக்கு தெரியுமா? பண்றதெல்லாம் தப்பு நாம தான், இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை வருது. இன்னைக்கு இருக்குற நிலைல தீணி பெரும் பாடு தான். இருந்தாலும் புதுசா கறவை மாடு வாங்குறதுக்கு கொஞ்ச காலம் தட்ட போட்டு மாட்டை இந்த சிகிச்சையை செஞ்சு அதோட தற்காலிக மலட்டு தன்மையை சரி செஞ்சுரலாம்.

தேவையான பொருட்கள்:

1. வெள்ளை முள்ளங்கி.
2.. கற்றாளை துண்டு
3. முருங்கை இலை
4. பிரண்டை (தண்டு)
5. கறிவேப்பிலை
6. மஞ்சள் கிழங்கு

சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்:

சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும், அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும்.

1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும்.
(நாள் 1 -5)

2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரை, கற்றாழையை முட்களை சீவிவிட்டு, தினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9)

3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13)

4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17)

5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை உடன் மஞ்சள் ஒரு ஓரிரு கிழங்கு (பெரியாத இருப்பின் ஒன்று, சிறியது எனில் இரண்டு, கடையில்வாங்கிய பொடியை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 18 -21).

மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேளை  மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.

கால்நடை மருத்துவர் , பேராசிரியர் திரு.புண்ணியமூர்த்தி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறை.

தீவனச் சோளம் கோ எஃப்.எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை

தீவனச் சோளம் கோ எஃப்.எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை..!!!

விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம்.

Continue reading

பாலின் அளவு ஏன் குறைகிறது

பாலின் அளவு ஏன் குறைகிறது ?

“பால் நன்றாக கறந்து கொண்டிருந்த கறவை மாட்டை வாங்கி வந்தேன். ஆனால், எங்கள் பண்ணைக்கு மாடு வந்தவுடன் பாலின் அளவு குறைந்து விட்டது. இதற்கு என்ன காரணம்?”

Continue reading

உம்பளச்சேரி மாடு

உம்பளச்சேரி காளை
உம்பளச்சேரி மாடு

இது ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களுக்கு சொந்தமான மாட்டினம்.  இது தற்போதைய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உம்பளச்சேரி என்னுமிடத்திலிருந்து எனும் கிராமத்தில் தோன்றியதால் இங்கு கிடைக்கும் உப்பல் அருகு எனும் புல்லினை மேய்ந்து வளர்ந்ததாலும் இப்பெயர் பெற்றது..இதன் பிறப்பிடம் தொடக்கத்தில் இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதியே.

இதன் மூதாதையர் இந்த டெல்டா மாவட்டங்களில் வலசை முறை மேய்ச்சலில் வளர்க்கப்படும் தஞ்சாவூர் வகையறா கிடை மாடுகளே, இதன் தாய் இனமான தஞ்சாவூர் வகையறா கிடை மாடுகளை போலவே அனைத்து குணங்களையும் பெற்றிருந்தாலும் இவற்றின் கொம்புகள் சரியான அமைப்பாக வளராது.

பெரும்பாலும் இம்மாட்டின் எருதுகளுக்கு கொம்புகளைத் தீய்த்து விடுகிறார்கள்.

காதுகளையும் குதிரைகளுக்கு இருபது போல அழகாக கத்தரித்து விடுவார்.

இது காது நாவெடை காது என்று அழைக்கப்படும்.

உம்பளச்சேரி பசுமாடு
உம்பளச்சேரி பசுமாடு

 

உம்பளச்சேரி காளை
உம்பளச்சேரி காளை

வெள்ளை நிற நெற்றிப்பொட்டு ,வெண்மை நிற வால்குஞ்சம்,இடுப்பில் மறை (தட்டு மறை),திமில் மறை(கொண்டை மறை),பூட்சு மறை(நான்கு காலிலும் மறை),வெங்குளம்பு(வெள்ளை நிறகுளம்பு) இவற்றின் அங்க அடையாளம்.

இது மானவுணர்வும் சுறுசுறுப்பும் வாய்ந்த மாடு. இதைப் பழக்குவது எளிதன்று. கடிப்பதும் உதைப்பதும் இதன் இயற்கை.

டெல்டா மாவட்டங்களின் கடுமையான உளை,சேறு நிறைந்த சேற்று வயல்களை உழுவதற்கு இந்த மாட்டு இனத்துடன் வேறு எந்த உள்நாட்டு மாடுகளும் போட்டி போட முடியாது. அதிகச் சுறுசுறுப்புற்றதுமான மாடு. இதற்குத் தீனிச் செலவும் குறைவு.

பசுக்கள் மிகுந்த தாய்ப்பாச பிணைப்பு கொண்டது. கன்றுகளை விட்டு பிரியாமல் இருக்கும் பால்மடி சிறுத்து காணப்படும். மடிப்பகுதி அடிவயிற்றோடு ஒட்டி காணப்படும். பால்காம்புகள் மிகச்சிறியதாக நல்ல இடைவெளி விட்டு காணப்படும்.

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் ..!!
மாடுகளுக்கு வரும் நோய்களுக்கு மூலிகை மற்றும் முதலுதவி மருத்துவம் பற்றி பார்ப்போம்

 

மடி வீக்க நோய் (Mastitis):

கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும்,

கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும்.

மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்

சோற்றுக்கற்றாழை-200 கிராம் (ஒரு மடல்)மஞ்சள் பொடி-50 கிராம்சுண்ணாம்பு-5 கிராம் ( ஒரு புளியங்கொட்டை அளவு)

சிகிச்சை முறை : (வெளிப்பூச்சு)

மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும்.

வயிறு உப்புசம் (Bloat):

கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள்

வெற்றிலை-10 எண்ணிக்கைபிரண்டை-10 கொழுந்துவெங்காயம் -15 பல்இஞ்சி -100 கிராம்பூண்டு -15 பல்மிளகு-10 எண்ணிக்கைசின்ன சீரகம்-25 கிராம்மஞ்சள்-10 கிராம்

வயிறு உப்புசம்  சிகிச்சை முறை : (வாய் வழியாக)

சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

கோமாரி வாய்ப்புண் (Foot & Mouth disease):

கோமாரி அல்லது கால் – வாய் காணை ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது.

வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும்.

பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில் கன்றுகளை பால் ஊட்ட விடுதல் கூடாது. இந்நோய் வராது தடுக்க முறையாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்

தேங்காய் துருவல் -1 தேங்காய் ( பால் கட்டியது)சீரகம் -50 கிராம்வெந்தயம் -30 கிராம்மஞ்சள் பொடி -10 கிராம்கருப்பட்டி (பனை வெல்லம்) -20 கிராம்

சிகிச்சை முறை – மாடு ஒன்றுக்கு உள் மருந்து : (வாய் வழியாக):

சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய்கண்ட மாடு ஒன்றுக்கு தினமும் இருவேளை குறைந்த பட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகள் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையைத் தூக்கிப்பிடித்து இரு கடைவாய் பகுதியிலும் மெதுவாக உள்ளே செலுத்த வேண்டும்.

கோமார் கால் புண் (Foot lesions):

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :

குப்பைமேனி -100 கிராம்பூண்டு-10 பல்மஞ்சள்-100 கிராம்இலுப்பை எண்ணெய் (அ) நல்லெண்ணெய்-250 கிராம்

சிகிச்சை முறை : (வெளி பூச்சு மருந்து)

முதல் மூன்று பொருட்களை இடித்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடையின் கால்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பின் மேற்கண்ட மருந்தை இட வேண்டும்.

 

விட(ஷ)க்கடி:

விடத்தன்மையுள்ள உயிரினங்களான தேள், குளவி, வண்டு, பூரான், அரணை மற்றும் சிறு பாம்புக் கடியினால் தோலில் தடிப்பு, உடல் வீக்கம், வயிறு உப்புசம், வாயில் நீர் வடிதல், முச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஆடுகளில் தென்படும்.

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :

உப்புதும்பை இலை -15 எண்ணிக்கைசிறியா நங்கை (இலை) (நில வேம்பு)-15 எண்ணிக்கைமிளகு-10 எண்ணிக்கைசீரகம் -15 கிராம்வெங்காயம்-10 பல்வெற்றிலை -5 எண்ணிக்கைவாழைப்பட்டை சாறு-50 மி.லி -15 கிராம்

சிகிச்சை முறை :

சின்ன சீரகம், மிளகினை இடித்து பின்பு இதனுடன் மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு உருண்டைகளாக 100 கிராம் கருப்பட்டி (பனை வெல்லம்) கலந்து உப்பில் தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்.

தகவல் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்.

தொகுப்பு : நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.

கால்நடை

கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் – 1

கேள்வி :

ராமேஸ்வரம் பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ப்பதற்கு என்று மேய்ச்சல் நிலம் இல்லை. இதனால் அடிக்கடி பக்கத்து வயல்களில் ஆடு சென்று மேயும் போது பிரச்சனை வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே வளர்க்கும் வகையில் தீவனங்களை பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும்

Continue reading