Category: Zero budget farming

மண்புழுவை நிறைய உற்பத்தி செய்வது எப்படி

மண்புழுவை நிறைய உற்பத்தி செய்வது எப்படி

நமது நிலங்கள் நிறைய மகசூல் பெற வேண்டுமென்றால் நிலத்து மண் சத்துள்ள மண்ணாக மாற்றப்பட வேண்டும். அதற்கு மண்புழுவின் உதவி பெரிதும் உதவுகிறது.
அந்த மண்புழுவை நமது நிலத்தில் நிறைய உற்பத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்

அதற்கு மண்புழுவின் உதவி பெரிதும் உதவுகிறது

அந்த *மண்புழுவை நமது நிலத்தில் நிறைய உற்பத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்*

Continue reading

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை.
தேவையான பொருட்கள்:
1. 30 கிலோ மாட்டு சாணம். சாணம் இருபத்திநான்கு மணி நேரத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். பசு மாடு மற்றும் காலை மாட்டு சாணம் உபயோக படுத்தலாம்.

Continue reading

இயற்கை விவசாய முறை நெல் சாகுபடி

இயற்கை விவசாய முறை நெல் சாகுபடி

பல்வேறுபட்ட கால நிலைகள், மண் வகைகளில் நெல்பயிர், அதைச் சார்ந்த பயிர் சுழற்சி முறையை கடைப்பிடித்து வருவதால், அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டியுள்ளது.இதன் விளைவாக மண்வளம், மகசூல் குறைகிறது. நிலத்தடி நீர் மாசு, சுற்றுப்புற மாசு ஏற்பட வாய்ப்புள்ளது.இந்தக் குறைபாடுகளில் இருந்து விடுபடுவதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த வழிமுறையாக உள்ளது

Continue reading

ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம்

ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம் cow_dung

அனைவரின் மனதில் பதிய ஒரு எளிமையான செய்தி தருகிறோம்.

ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம், 7 லிட்டர் கோமூத்திரம்.

ஒரு வருடத்தில்  3500 கிலோ சாணம், 2500 லிட்டர் கோமூத்திரம் கிடைக்கும்.

சாணத்தை விட கோமூத்திரத்தில் 50% தழை  சத்து மற்றும் 25% சாம்பல் சத்து அதிகமாக கிடைக்கிறது. ஆகையால்

உடனே கோமூத்திரம் சேகரிக்க ஏற்பாடு செய்யுங்கள்.

தொழு எரு தயாரித்தல்:

15 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி ஆழம் உள்ள குழி தேவை.

இதன் மூலம் 5 டன் தொழு எரு தயாரிக்கலாம். நீளம் அகலம் மாறுபட்டாலும், ஆழம் 3 அடி இருப்பது அவசியம். குழியில் முதல் அடுக்காக 3/4அடி உயரத்திற்கு சான கழிவுகளை நிரப்பி, அதன் மீது 3 அங்குலம் மண் பரப்பி விட வேண்டும். இதை முதல் அடுக்காக கொள்ளலாம்.

இது போல் 3 அடுக்குகள் செய்தால் குழி நிரம்பிவிடும்.

பிறகு இதன் மேல் 1 அடி உயரம் மண் போட்டு நீரை தெளித்து மொழுக்கி விடவேண்டும்.
6 மாத காலத்திற்குள் எரு நன்கு மக்கிவிடும்.

100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தில்
500 கிராம் தலை சத்து
300 கிராம் மணி சத்து
500 கிராம் சாம்பல் சத்து உள்ளது.

பெரும்பாலான விவசாயிகள் தொழு உரத்தை மேற்கண்ட முறையில் மக்க வைப்பது இல்லை.
நல்ல முறையில் மக்க வைத்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.

உதாரணமாக
சரியான முறையில் பாலில் உரை ஊற்றினால்தான் பால் தயாராகும், பால் திரிந்துபோனால் அதை யாரும் சாப்பிடுவதில்லை.

அதே போல் தொழு எருவை சரியான முறையில் மக்க வைக்காவிட்டால் அது பயனற்று போகும்.
பயிர் என்னும் குழந்தைக்கு திரிந்த பாலுக்கு சமமான மக்காத தொழு உரத்தை கொடுப்பதில் என்ன பயன்?

அதனால் முறையோடு மக்கிய தொழு உரம் தயாரிக்க ஆவண செய்யுங்கள்.

வணக்கதுடன் நன்றி. அசோக்குமார் கார்கூடல்பட்டி

தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க விவசாயிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள்

தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை

தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க விவசாயிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள்.

தென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத்தரும் முக்கிய பிரச்சனைகளாகும்.
காய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வதை தடுக்க முடியாத பண்பாகும். எனினும் நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிர்கின்றன.

Continue reading

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் Basics of natural farming

இயற்கை விவசாயம் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இடுபொருள்களை வெளியிலிருந்து வாங்க முயற்சிக்க வேண்டாம்.

மண் வளமாக இருந்தாலே போதுமானது.

நிறைய தொழு உரம் கொடுங்கள்.
விவசாய கழிவுகளை மண்ணுக்கு கொடுங்கள்.

முடிந்த அளவு ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுங்கள்.
இரண்டு போகம் பயிர் செய்யுங்கள்.

அடுத்து ஏதாவதொரு பசுந்தாள் பயிரிட்டு பூக்கும் நிலை மடக்கி உழுது விடுங்கள்.
இதுவே போதும்.

பயிர் பாதுகாப்பு என்பதும் இயல்பான நடக்கும்.

இலை தழைகளை கோமியத்தில் ஊறவையுங்கள். இது பூச்சி விரட்டியாக பயன்படும்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுப்பது மட்டுமே.

தேவையான அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக மண்ணில் உருவாகும்.

விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்

விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்

விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்

விவசாயத்தில் பூச்சி தாக்குதல் என்று எடுத்துக்கொண்டால், அவற்றை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளது. ஆனால் தானிய பயிர்களை மட்டுமே அதிகமாக தாக்கும் எலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் அதிகம் கஷ்டப்படுவார்கள். எனவே எலிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் முறைகள் பற்றி பார்ப்போம்.

எலி தாக்குதல் :

🐀 நெல், மக்கசோளம், கரும்பு, பயிறுவகைகள், பருத்தி, கடலை போன்ற வயல்களில் எலிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

🐀 எலிகள் தாக்கப்பட்ட பயிர்களின் நாற்றுகள் துண்டுகளாய் வெட்டப்பட்டது போல் காணப்படும்.


🐀 மேலும் நெற்பயிர் வயலின் கரையோரங்களில் ஆரம்ப நாட்களில் சிறுசிறு பொந்துகள் ஆங்காங்கே காணப்படும். வளர்ச்சியடைந்த நெற்பயிர்களையோ அல்லது முதிர்ச்சியடைந்த நெல்மணிகளை கொhpத்து தின்றது போல காணப்படும்.

🐀 பொதுவாக நெல் வயல்களில் உள்ள எலிகள் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும்.

தடுக்கும் முறைகள் :

🐀 வயல்களில் முதலில் உழவுக்கு முன்பு ஆட்டுப்பட்டி அமைத்தால், அந்த வயல்களில் எலி வரவே வராது.

🐀 ஒரே வயலில் தொடர்ந்து தானிய பொருட்களை மட்டும் சாகுபடி செய்யாமல், பு ச்செடிகள், மரவகைகள் என மாற்றி சாகுபடி செய்ய வேண்டும். மேலும் வைக்கோல் போர்களை வயலுக்கு அருகில் அமைக்காமல் இருக்க வேண்டும்.

🐀 பப்பாளிப்பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக்கி வயலில் ஆங்காங்கே வைத்தால் எலிகள் அதனை விரும்பி உண்ணும். இவை இனிப்பாக இருப்பதால் அவற்றை அதிகமாக உண்டு வயிற்றோட்டம் ஏற்பட்டு இறந்து விடும்.

🐀 வயல்களில் தெர்மோகோல் துண்டுகளை சீனிப்பாகு அல்லது சர்க்கரைப்பாகில் தோய்த்து ஆங்காங்கே வைத்தாலும் எலிகள் அவற்றை உண்டு உணவு செரிக்காமல் இறந்து போகும்.

🐀 வரப்புகளை அவ்வப்போது சீராக்குதல், கோடையில் வரப்பை வெட்டி அழிப்பது, எலி வலைக்குள் வைக்கோல் புகை மூட்டம் செய்து களிமண்ணால் வலை முழுவதும் பு சுவது, எலி பொந்துகள் சுவர் அருகில் இருப்பின் கல், சிமெண்ட், வைத்து பு சுதல் போன்றவைகளை பின்பற்றலாம்.

🐀 இரவு பறவையான ஆந்தைகள் வயல்களில் வந்து அமர்ந்து எலிகளை பிடிப்பதற்கு ஏதுவாக காலிப்பானைகள் அல்லது மண்சட்டிகளை தலைகீழாக கவிழ்த்து வு வடிவில் குச்சிகளை வைத்து அவற்றில் கட்டி வைக்கலாம்.

🐀 நெல் வயலில் எலியை கட்டுப்படுத்த சணப்பு பு வை சிறிய துண்டுகளாக்கி, அதை பரவலாக தூவி விட்டால் அதிலிருந்து வரும் வாடையினால் எலிகள் ஓடி விடும்.

🐀 எலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பும், எலி வலையைத்தோண்டி எலிகளை அழிக்க வேண்டும்.

🐀 எலிகள் அதிகம் தங்கும் வலைகள் உள்ள இடத்தில், தனி ஆட்கள் கொண்டு அவற்றைப் பிடித்து அழிக்க வேண்டும்.