காய்கறி சாகுபடி பட்டம்

காய்கறி சாகுபடி பட்டம்

“காய்கறி சாகுபடி பட்டம் ”

எந்தெந்த பட்டத்துல எந்தெந்த காய்கறி சாகுபடி செய்யவேண்டுமென தெரிந்து கொள்வது காய்கறி வேளாண்மையை லாபகரமாக மாற்றும் :

Continue reading

பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள்

பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள்
பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள்.

கறவை மாடுகள் வைத்திருப்போர், சுத்தமாக பால் உற்பத்தி செய்வது பற்றி அறிந்து, கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

பால் ஓர் இன்றியமையாத சமச்சீர் உணவாகும். இது, பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும். பாலில் அசுத்தம் சேராதவாறு சேகரித்து நன்கு காய்ச்சி உட்கொள்வது மிக முக்கியம்.

பாலில் கொழுப்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் போன்ற பல இன்றியமையாத சத்துப் பொருள்கள் உள்ளன. சாதாரணமாக விற்பனைக்கு வரும் பசும்பாலில் 3.5 சதம் கொழுப்பு சத்தும், 8.5 சதம் கொழுப்பில்லாத மற்ற திடப்பொருளும் இருத்தல் வேண்டும்.

பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துகளும் சரியான விகிதத்தில் உள்ளன.

அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால், பாலின் மூலம் காசநோய், தொண்டை அடைப்பான், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு முதலிய நோய்கள் வரக்கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்கு பெருகி, அதன் தரத்தையும் கெடுத்துவிடும்.

பாலை வெளியே வெதுவெதுப்பாக நம் சுற்றுச் சூழ்நிலையில் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. கிருமிகள் வெகுவாக வளர்ந்து பால் கெட்டு விடும். எனவே, கறவை மாடுகள் வைத்திருப்போர், சுத்தமாக பால் உற்பத்தி செய்வது பற்றி அறிந்து, கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

பால் கறக்கும் முறைகள்:

 

முழு விரல்களை உபயோகித்தல்

இம் முறையில் ஒரு கையின் விரல்களால் காம்பினைப் பிடித்து, உள்ளங்கையில் அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்பின் எல்லா பாகங்களிலும் ஒரே அளவான அழுத்தம் கிடைக்கும். பெரிய காம்புகள் உள்ள பசுக்களிலும், எருமைகளிலும் இம் முறையைக் கையாள்வது சிறந்தது.

இரு விரல்களை உபயோகித்தல்:

கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து, சிறிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்புகளுக்கு ஒரே சீரான அழுத்தம் கிடைக்காது.

மேலும், காம்பின் மேல் பாகம் இதனால் பாதிக்கப்பட்டு, சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இம் முறையைக் காட்டிலும் முழு விரல்களை உபயோகிப்பது சிறந்தது.

பால் கறத்தல்:

மாடுகளில் பால் கறத்தல் என்பது தனிக் கலையாகும். இதற்கு, முதிர்ந்த நல்ல அனுபவமும், திறமையும் தேவை. பால் கறக்கும்போது கவனமாகவும், அமைதியாகவும், விரைவாகவும், அதே சமயம் பாலை முழுமையாகவும் கறக்க வேண்டும்.

சுத்தமாக பால் கறக்கும் முறைகள்:

பால்காரர் தனது கையை சுத்தமாகக் கழுவ வேண்டும் மற்றும் மாட்டின் மடியை சுத்தமாகத் துடைக்க வேண்டும். காம்பிலிருந்து வரும் முதல் பீச்சில் திரி மற்றும் சீழ் இருக்கிறதா என்று பரிசோதித்து, அவ்வாறு இருந்தால் கீழே ஊற்றி விட வேண்டும்.

பாலில் சேரும் அசுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்:

கறவை மாடுகளின் மடியிலேயே சில கிருமிகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆரோக்கியமான மாடுகளில் இவ் வகையான கிருமிகள் எவ்விதமான கெடுதலும் செய்வதில்லை. எனவே, பால் கறக்கும்போது முதலில் வரும் பாலை நீக்கி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காம்பினுள் உள்ள கிருமிகளை நீக்கி விடலாம்.

மாடுகளை அடிக்கடி நன்கு தேய்த்து, கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மடியின் மீதும், பக்கத்திலுள்ள இடங்களிலும் நீண்ட உரோமம் காணப்பட்டால், அவற்றை கத்தரித்து நீக்கலாம்.

கறப்பதற்கு முன் மடி, பக்கத் தொடை ஆகிய பாகங்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். கொட்டகையில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சுத்தமான பாத்திரங்களை உபயோகப்படுத்த வேண்டும். பால் பாத்திரங்களை சுத்தம் செய்தபின், தண்ணீர் அல்லது சுடுதண்ணீராலோ சுத்தம் செய்ய வேண்டும். சூரிய ஒளியில் நன்கு உலர்த்திட வேண்டும். ஈரத்தைப் போக்க துணியைக் கொண்டு துடைப்பது நல்லதல்ல. சோப்பு உபயோகிக்கக் கூடாது. ஏனென்றால், இவை பாலில் ஒவ்வாத வாசனையை ஏற்படுத்திவிடும்.

பால் கறப்பதற்கும், சேகரிப்பதற்கும் அதற்கென தயாரிக்கப்பட்ட பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.

பாலை பாதுகாத்தல்:

பாலை கறந்தவுடன் கொட்டகையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால், மாட்டுத் தொழுவத்தில் உள்ள நாற்றம் பாலில் சேர்ந்து விடும்.

பாலை கறந்தவுடன் வடிகட்ட வேண்டும். பாலை 5 டிகிரி செல்சியஸூக்கு குளிர்ப்படுத்த வேண்டும். குளிர் சாதனம் இல்லையெனில், குளிர்ந்த நீரில் பாத்திரத்தை வைக்க வேண்டும்.

பாலை கறந்த 4 மணி நேரத்துக்குள் விற்பனை நிலையத்துக்கு அனுப்ப வேண்டும்.

 

கால்நடை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் செய்யும் முறைகள்

கால்நடை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் செய்யும் முறைகள்
கால்நடை வளர்ப்பு மற்றும் (பசு) இனப்பெருக்கம் செய்யும் முறைகளும்
இளம்பசு

முதல் கன்று ஈனுவதற்குத் தயார்படுத்தும் பசுவானது நல்ல பால் உற்பத்தி கொடுக்கக் கூடியதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். எந்த மரபியல் பரம்பரைக் குறைபாடும் இன்றி, சரியான வளர்ச்சியுடன் இருக்கவேண்டும். 2 வருடங்களுக்குள்ளாக கருவுற்றுவிடவேண்டும்.

கவனிக்க வேண்டியவை

பசுவைத் தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பால் உற்பத்தி. ஒரு கலப்பின மாடு நாளொன்றுக்கு 5.5 லிட்டர் பால் கொடுக்கவேண்டும்.

பொருளாதார ரீதியில் 305 நாட்களுக்கு, 2500 லிட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

முதல் 2 கன்றுகளில் மாட்டின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 10 லி எனில் அதன் அப்பருவப் பால் உற்பத்தி 2000-2500 லி ஆகவும், நாளொன்றுக்கு 15 லி பால் கறக்கும் மாட்டின் ஒரு பருவ உற்பத்தி 3000 லி வரையிலும் இருக்கும்.

முதல் கன்று ஈனும் வயது 3 வருடங்களுக்கு மிகாமலும், அடுத்தடுத்த கன்று இடைவெளி 12-15 மாதங்களுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

மேலும் பசுவானது எந்த உடல் குறைபாடும் இன்றி, நன்கு வளர்ச்சியடைந்த மடியுடன் நல்ல பால் நரம்புகளுடன், கையாள்வதற்கு எளிதானதாக இருக்கவேண்டும்.

வயது முதிர்ந்த மாடுகளை மாற்றிவிட்டு புதிய இளம் பசுக்களைச் சேர்க்கலாம்.

பண்ணைக்குள் வளர்ந்த இளம் பசுக்களின் மூலம், வருடம் ஒரு முறை 20 சதவிகிதம் அளவாவது முதிர்ந்த மாடுகளை மாற்றிக் கொள்ளுதல் நன்று.

மந்தைகளின் உற்பத்தி சரியில்லாத நிலையில் வெளியில் இருந்து மாடுகளை வாங்கிச் சேர்த்துக் கொள்ளலாம்.

காளை மாடுகள்

கன்றுகளின் மரபியல் குணங்களில் 50 சதவிகிதம் அளவு காளை மாடுகளுக்கு பங்குள்ளது. புதிய தலைமுறைகளின் மேம்பாடு நல்ல காளைகளின் தேர்வைப் பொறுத்தே அமையும்.

பசுத் தேர்வில் மட்டும் தீவர கவனம் செலுத்தினால் போதாது. நல்ல பால் உற்பத்தி பெறக் காளையிலும் நல்ல வம்சாவளியுள்ள காளையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நல்ல இளம் காளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நல்ல இளம் காளைகளை இனப்பெருக்கக் கலப்பில் பயன்படுத்தும் போது 4500 கி.கி அளவு பால் உற்பத்தி ஒரு பருவத்தில் பெற முடிகிறது. பிற பண்புகளான கன்று ஈனுவதில் நோய் எதிர்ப்பு போன்றவையும் கவனிக்கப்பட வேண்டும்.

காளைமாடு

கால்நடை விவசாயிகள் காளைத் தெரிவு பற்றி நன்கு தெரிந்துவைத்திருக்கவேண்டும். பல ஆராய்ச்சி அறிவியல் நிறுவனங்களில் செயற்கைக் கருவூட்டல், காளைத் தெரிவு பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும்.

பாரம்பரியப் (வம்சாவளிப்) பண்புகள் அடிப்படையில் தேர்ந்தெடுத்த காளைகளைக் கலப்பில் பயன்படுத்திப் பிறக்கும் கன்றின் பண்புகள் அடிப்படையில் காளைகளைத் தெரிவு செய்வதே சிறந்தது. முறையற்ற கலப்பு, விரும்பத்தக்காத பண்புகள் கன்றில் உருவாக வாய்ப்பளிக்கும்.

கால்நடை இனப்பெருக்கம்

இந்தியாவில் கால்நடை வளர்ப்பு வேளாண்மைக்கு இன்றியமையாத ஒன்றாகும். இது நமது கிராமப் பொருளதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் நம் நாட்டின் கால்நடை எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்குக் காரணம் நல்ல இனப்பெருக்க முறைகளும், புதிய கண்டுபிடிப்பும் கிராமங்களில் இல்லாமையே ஆகும்.

சிறந்த இனப்பெருக்கம் பற்றி

கீழ்வரும் கருத்துக்கள் மூலம் கால்நடைகளில் சிறந்த இனப்பெருக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கால்நடைப் பராமரிப்பில் இனப்பெருக்கம் இன்றியமையாத ஒன்று. சரியான இனப்பெருக்கமும், கன்று ஈனுதலும் இல்லாமல் கால்நடை வளர்ப்பில் இலாபம் பெற இயலாது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு ஆரோக்கியமான கன்றை ஒவ்வொரு கால்நடையும் கொடுக்கவேண்டும். அதற்கேற்ற, சிறந்த திறன் கால்நடைகளிடம் இருத்தல்வேண்டும்.

கலப்பில் ஈடுபட்டு, கருவைப் பெற்று அதைப் பாதுகாத்து, சினைக்கால முடிவில் நல்ல கன்றாகக் கொடுப்பதே இனப்பெருக்கம் ஆகும்.

இந்தî சங்கிலித் தொடரில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பசுவானது கருவைப் பெற முடியாமல் போகலாம் அல்லது கரு இறப்பு, முழு வளர்ச்சியற்ற பிறப்பாக வெளிப்படும்.

இனச்சேர்க்கை

இனப்பெருக்கத் திறன் மரபியல் மற்றும் இதர பிற காரணிகளைப் பொறுத்தது. இதர காரணிகளான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்துக்கள் மற்றும் முறையான பராமரிப்பு போன்றவற்றில், ஒரே இன மாடுகளிடையே இனப்பெருக்கத் திறன் வேறுபடும். சரியான பராமரிப்பையும் மீறி மரபியல் காரணிகள் செயல்பட்டால் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். எனவே மரபியல் பண்புகளையும் மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த இனப்பெருக்க முறைக்கு நல்ல கவனிப்பு அவசியமாகும்.

இனப்பெருக்கத் திறனை பாதிக்கும் காரணிகள்:

கரு முட்டையின் எண்ணிக்கை

ஒவ்வொரு கருவுறுதல் நிகழ்ச்சியின் பொதும் வெளிவரும் கருமுட்டைகள் ஒரு முக்கியக்காரணி. இந்த கரு முட்டைகளை கரீஃபியின் பாலிக்கிள் குழாயில் விழச் செய்வதே கருவுறுதல் ஆகும். ஒரு முட்டை 5-10 மணி நேரம் வரை இருக்கும். இந்த நேரத்தில் கலப்பு செய்தால் மட்டுமே கரு உருவாகும்.

கருத்தரித்தல் சதவீதம்

சரியான சினைத் தருணத்தில் கலப்பு செய்யாமல் மிகச் சீக்கிரமாகவோ அல்லது மிகத் தாமதமாகவோ செய்தால் விந்தணுவும், கருமுட்டையும் சந்தித்துக் கொள்ள முடியாமல் போகலாம். எனவே மாடு கருவுறாது.

கரு அழிதல்

கறவை மாடுகளில் கரு அழிதல், சரியாக கருத்தரியாமை, கருத்தரித்தபின் கருவானது கருப்பையில் நிலை கொள்ளாமல் வெளித்தள்ளப் படுவதால் (அ) கரு வளரும்போது ஏதேனும் அடிபடுவதால் ஏற்படுகிறது. இவ்வாறு கரு அழிவது ஹார்மோன் சுரக்காததால் (அ) சரியான விகிதத்தில் இல்லாததால் ஏற்படுகிறது.

முதல் சினையின் காலம்

முதல் கன்று ஈனும் காலம் அதிகமானால் அது இனப்பெருக்கத்திறனைப் பாதிக்கும். விரைவில் சினைக்கு வரும் மாடுகள், சிறிது குட்டையாகக் காணப்பட்டாலும் நல்ல இனப்பெருக்கத் திறனுடையவையாக இருக்கும்.

சினைப் பருவ எண்ணிக்கை

குறுகிய காலத்தில் (அடிக்கடி)சினைக்கு வரும் மாடுகள் நல்ல இனப்பெருக்கத் திறனுடையவை. விரைவில் சினைப் பருவமடைந்த மாடுகளை அதன் ஒவ்வொரு பருவத்திலும் முடிந்த வரை இனவிருத்தி செய்து கொள்வது நல்லது. இம்முறையில் அதன் வாழ்நாள் திறன் அதிகரிக்கும். கன்று ஈன்ற 9-12 வாரங்களுக்குப் பிறகு அடுத்த சினைக்குத் தயாராகிவிடும்.

வாழ்நாள்

பசுவின் வாழ்நாள் அளவும் இனப்பெருக்கத்திறனை அதிகரிக்கும். பசுக்கள் அதிக நாட்கள் ஆரோக்கியத்தோடு இருந்தால் ஆண்டுதோறும் மாற்றும் பசுக்கள் எண்ணிக்கை குறையும். அதோடு ஈனும் கன்றுகள் எண்ணிக்கை அதிகமாகும்.

இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும் முறைகள்:

 

சினை அடைந்த காலம், கன்று ஈன்ற நாள் போன்வற்றை பதிவேட்டில் பதிந்து பராமரித்து வந்தால் ஒவ்வொரு பசுவிற்கும் அடுத்த சினைக்கான காலத்தை முறையாகக் கணிக்கலாம்.
சரியான சினைத் தருணத்தில் கலப்பு செய்யவேண்டும்.
பசுக்களில் திரவப்போக்கு அதிகமிருந்தால், மருத்துவரை அழைத்துப் பரிசோதிக்கலாம்.
4 கலப்பிற்குப் பின்பும் சினைத் தரிக்கவில்லை எனில் மருத்துவரிடம் கொண்டு செல்லலாம்.
ஒவ்வொரு இனக்கலப்பிற்குப் பிறகும், கன்று ஈனும் முன்பு ஒரு முறை முழுமையாகப் பரிசோதனை செய்துவிடவேண்டும்.
வெளியிலிருந்து மாடுகள் வாங்கிவரும் போது நன்கு பரிசோதித்த பின்பே மந்தையில் சேர்க்கவேண்டும்.
கன்று ஈனுவது அதற்காகத் தயாரித்துள்ள தனி அறையில் சுத்தமான இடத்தில் நிகழ்தல் வேண்டும். ஒவ்வொரு தடவையும் கன்று பிறந்த பின்பு நல்ல கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிடவேண்டும்.
சரியாக நோய் எதிர்ப்புச் சக்தி பெற்றுள்ளவையா என்று பார்த்துத் தடுப்பூசிகளை முன்கூட்டியே போட்டு விடுதல் நலம்.
சுகாதாரமான முறையைப் பின்பற்றலாம்.
தேவையான ஊட்டசத்துக்களை அளிக்க வேண்டும்.
சரியான பாகாப்பு முறைகளைக் கையாளுதல் வேண்டும்.
தேவையான இடவசதி செய்து வைத்தல் வேண்டும்.
சரியான சினைக்கு வரும் பருவத்ததை சிறிய சூடாக இருந்தாலும் அதை டீசர் காளை மூலம் கண்டுபிடிக்கலாம்.

நன்றி வணக்கம்

கொல்லிமலையின் கத்தரி

கொல்லிமலையின் கத்தரி…
.
கொல்லிமலையில் விருந்து என்றாலேயே அசைவம் தான் என்றாலும் அத்தி பூத்ததைபோல சைவமும் இருக்கலாம்.
.
அதில் காய்கறியாக பயன்படுத்துவது நாட்டு கத்தரி எனப்படும் மிகவும் மிருதுவான ஆனால் மிகவும் சுவையான இத்தாவரத்தின் காய்களை மக்கள் பயன்படுத்துவதுண்டு.
.
அது ஒரு solanaceae – குடும்பத்தைசேர்ந்தது என்றாலும் Solanum melongena வகையை சேர்ந்தது அல்ல. ஆனால் Solanum macrocarpon மற்றும் ஆப்பிரிக்கன் கத்தரி வகையை சர்ந்ததாக கருதப்படுகிறது.
.
மக்கள் பயன்படுத்தும் காய்களில் இதனைப் போல பல வித்தியாசமானவையாக இருந்தாலும் இதுவும் பயன்பாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

Soundar Rajan.

ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள்

ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள்

ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள்

ஆடுகள் பிரசவித்த உடன் பால்சுரப்பு அதிகரித்து காணப்படும்.குட்டிகளால் அப்பாலை முழுவதுமாக குடிப்பது இயலாது.

Continue reading