Precast Ferro Cement Dome Roofing

Dome precast finished house
Agriwiki.in- Learn Share Collaborate
Precast Ferro Cement Dome Roofing

வீடு கட்டும் செலவை குறைக்க பெரும்பாலும் நாம் விலை குறைவான அல்லது தரம் குறைவான பொருட்களை பயன்படுத்துவதை பற்றி சிந்திக்கிறோமே தவிர செலவை குறைக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை பற்றி ஒருபோதும் சிந்திப்பது இல்லை.

காரணம் அதற்கான தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லாமை. மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள் காலப்போக்கில் நம்மிடமிருந்து அழிந்து போனதுதான் காரணம்.

இதனை பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்களை மீட்டெடுப்பதுதான் இந்த தொடர்களின் நோக்கம். வரும் காலங்களில் இது செயல்முறை வடிவில் காணொளிகளாகவும் இருக்கும்.

நம்மாழ்வாரிடம் பல பேர் குறுக்கு கேள்விகளையும் தேவை இல்லாத சந்தேகங்களை எழுப்பும் போது அவர்களிடத்தில் ஒரே கேள்வியை மட்டுமே முன்வைப்பார்.

“நீங்கள் சேலத்திலிருந்து இரவில் சென்னை செல்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம் செல்லும் வாகனத்தின் வெளிச்சம் 20 அல்லது 30 அடி வரைதான் அடிக்கும் அடுத்து செல்ல செல்ல தான் வெளிச்சம் கிடைக்கும் பாதைகள் தெரியும். அது போல ஒரு செயலை செய்ய செய்யதான் அதற்கான எண்ணமும் செய்முறை சந்தேகங்களுக்கு விடையும் கிடைக்கும். இல்லை சென்னை வரைக்கும் வெளிச்சம் தெரிந்தால் தான் நான் பயணம் செய்வேன் என்று சொன்னால் ஒருநாளும் நீங்கள் பயணம் செய்ய முடியாது” என கூறுவார்’.

நம்மாழ்வாரிடம் பல பேர் குறுக்கு கேள்விகளையும் தேவை இல்லாத சந்தேகங்களை எழுப்பும் போது அவர்களிடத்தில் ஒரே கேள்வியை மட்டுமே முன்வைப்பார்.

“நீங்கள் சேலத்திலிருந்து இரவில் சென்னை செல்கிறிர்கள் என்று வைத்து கொள்வோம் செல்லும் வாகனத்தின் வெளிச்சம் 20 அல்லது 30 அடி வரைதான் அடிக்கும் அடுத்து செல்ல செல்ல தான் வெளிச்சம் கிடைக்கும் பாதைகள் தெரியும்.அது போல ஒரு செயலை செய்ய செய்யதான் அதற்க்கான எண்ணமும் செய்முறை சந்தேகங்களுக்கு விடையும் கிடைக்கும்.இல்லை சென்னை வரைக்கும் வெளிச்சம் தெரிந்தால் தான் நான் பயணம் செய்வேன் என்று சொன்னால் ஒருநாளும் நீங்கள் பயணம் செய்ய முடியாது என கூறுவார்”

சரி இப்போது விசயத்திற்கு வருவோம்.போன பதிவில் precast ferrocement dhoom roofing பற்றி பதிவிடுவதாக கூறியிருந்தேன். அதனை பார்க்கலாம்.

இந்த PCFDR முறைக்கு இந்த முட்டையின் தத்துவம் தான் பயன்படுகிறது. அதாவது ARCH SHAPE technic

இந்த ARCH SHAPE எவ்வாறு கம்பியே இல்லாமல் கட்டிடத்திற்கு தேவையான நிலைப்பு தன்மையையும் ,உறுதியையும் அளிக்கிறது என்பதை ஏற்கனவே என்னுடைய பழைய பதிவில் காணொளி மூலம் சிறிய எடுத்துக்காட்டுடடன் விளக்கி உள்ளேன்.நம் பாரம்பரிய கட்டிடங்களில் இந்த தொழில்நுட்பத்தின் பங்கு மிக பெரியது.

கிழே அந்த லின்க்கை கொடுத்துள்ளேன் பார்க்காமல் இருப்பவர்கள் பார்க்கவும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1812827768756683&id=100000884315437

அதவாது அரை வட்ட வடிவ PRECAST சேனல்கள் FERROCEMENT TECHNOLOGY மூலம் போடப்பட்டு கட்டிடத்தின் கூரையாக GRANE வாகனத்தின் உதவி கொண்டு அடுக்கப்படுகிறது.இது ஆரோவில்லின் ஒரு தொழில்நுட்பம்.இதனை கொண்டு ஆரோவில்லில் இரண்டு மாடிகள் கட்டப்பட்டு உள்ளது.

PCFDR இதனை பற்றி பார்ப்பதற்கு முன்னாள் இந்த FERROCEMENT TECHNLOGY என்றால் என்ன என்பதை பார்த்துவிடலாம்.

குறைந்த அளவு கம்பிகளையும்,சிக்கன் மெஸ் எனப்படும் கோழி வலையை பயன்படுத்தி கால் ஜல்லி அல்லது பேபி ஜல்லி (6MM JULLY) கொண்டு concrete போடும் முறைதான் FEROCEMENT concrete என அழைக்கப்படுகிறது.

இந்த டெக்னாலஜி பயன்படுத்தி தான் செலவு குறைவான தண்ணிர் தொட்டிகள்,வீட்டின் சுவர்கள்,கதவுகள்,படிக்கட்டு கைப்பிடி சுவர்கள் ,மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை செய்ய பயன்படுகிறது.

இம்முறையில் முதலில் கட்டிடம் நடைபெறும் இடத்திற்கு அருகில் ௦.85 M அகலமும் 6 M நீளமும் என்ற அளவில் செங்கல் கொண்டு கட்டப்பட்டு பளபளப்பாக பூசப்படுகிறது.

படம் 1 பார்க்கவும்

(இதற்க்கு ஸ்டீல் மோல்ட் கொண்டு கூட செய்யலாம் )

 

பின்பு இதன் மீது அடி ஆயில் அடிக்கப்பட்டு 8MM கம்பியை நீள வாக்கில் வைத்து அதன் மீது கோழி வலை இரண்டு அடுக்கு போடப்பட்டு 2 அங்குலம் கணத்தில் சிப்ஸ் concrete (6 MM ஜல்லி ) கொண்டு கன்க்ரிட் போடப்பட்டு finishing செய்யபடுகிறது.

படம் 2 பார்க்கவும்

பின்பு இவை 10 நாட்கள் வரை CURING செய்யப்பட்டு கட்டிடத்தின் மீது GRANE வாகனம் உதவி கொண்டு மேலே வரிசையாக 2 அங்குலம் இடைவெளியில் அடுக்கப்பட்டு அந்த இடைவெளி மழை நீர் வடியுமாறு வாட்டத்துடன் CONCRETE போடப்படுகிறது.இது தரை தளத்துடன் விட்டு விடுபவர்களுக்கு போதுமானது.

படம் 3 பார்க்கவும்.

 

அல்லது இதன் மீது முதல் தளம் கட்ட வேண்டும் எனில் ARCH இடைப்பட்ட இடைவெளி மட்டமாக ஏதாவது பில்லிங் (வேஸ்ட்) மெட்டிரியல் கொண்டு பில்லிங் செய்யப்பட்டு டைல்ஸ் அல்லது கலவை கொண்டு சிமெண்ட் FLOORING அமைத்து கொள்ளலாம்.

படம் 4 பார்க்கவும்.

இரண்டு SKILLED LABOUR மற்றும் நான்கு UNSKILLED LABOUR கொண்டு ஒரு நாளைக்கு 4 சேனல்கள் வரை செய்யலாம்.

இதில் அறையின் நீளம் 6 M அதிகமானால் எக்ஸ்டிரா சப்போர்ட் கொடுக்க வேண்டும்.

இம்முறையில் concrete கூரை அமைப்பில் அதிக செலவு பிடிக்கும் சென்றிங் வேலை இல்லை.

மற்றும் குறைந்த அளவு கம்பி மற்றும் concrete கொண்டே கூரையை அமைக்க முடியும்.

முன்னதாகவே இதனை செய்து வைத்து கொண்டால் கட்டிடத்தின் கட்டும்மான காலத்தையும் குறைக்கலாம்.

மற்றும் இதன் அடிப்பகுத் நன்றாக பல பலவென (அதற்க்கு தான் ஆயில் அடிக்க வேண்டும்) இருப்பதால் சிலிங் பூச்சு வேலை தேவை இல்லை.அப்படியே வெள்ளை அடித்து கொள்ளலாம்.

இதனை பற்றிய புகைபடங்கள் சிலவற்றை இதனுடன் இணைத்துள்ளேன்.

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் இந்த முறையை பற்றிய உங்கள் அனுபவங்களை முடிந்தால் கமெண்ட்ல பதிவு பண்ணுங்க…

மறக்காம ஷேர் பண்ணிருங்க பிரண்ட்ஸ்….

தொடரும்….
நான் உங்களுடன் ஹரி…
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றிகள்….