கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க இயற்கையான வழிகள்

To increase milk production in cattle
Agriwiki.in- Learn Share Collaborate

To increase milk production in cattle : கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க இயற்கையான வழிகள்:

🐄 கறவை மாடுகளுக்கு கன்று ஈன்ற 35 நாள் முதல் 45நாட்களுக்குள் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் . ஏன் என்றால் கறவை மாடுகளுக்கு வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் முட்டைகள் வெளியேறிய பின்னர் மாடுகள் நன்றாக தீவனம் எடுக்கும் . மாடுகள் உட்கொண்ட தீவனம் முழுமையாக செரிமானமாகும்.

🐄 குடற்புழு நீக்கம் செய்வதால் மாடுகள் நன்றாக தீவனம் எடுக்கும் போது பால் அதிகம் சுரக்கும் மேலும் மாடுகள் 60நாள் முதல் 80 நாட்களுக்குள் மாடு பருவதிற்கு வந்து விடும்.

🐄 குடற்புழு நீக்கம் செய்யும் பொழுது ஆங்கில மருந்துகள் பயன்படுத்துவது என்றால் கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைப்படி குடற்புழு நீக்க மருந்துகளை கறவை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். இயற்கை முறையில் என்றால் குடற்புழு நீக்கம் மருத்தை தயாரித்த 1மணி நேரத்திற்குள் மாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.

🐄 மாடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்கும் பொழுது பரங்கிக்காய்(200 கிராம் முதல் 500 கிராம் வரை மாடுகளின் பால் உற்பத்தியை பொறுத்து ) வெல்லம் 50 கிராம் முதல்100 கிராம் வரை அடர் தீவனத்தில் காலை அல்லது மாலை ஒரு வேளை மட்டும் கொடுக்க வேண்டும். இப்படிகொடுக்கும்போது மாடுகளுக்கு இயற்கையாகவேபால் சுரப்பு அதிகரிக்கும் இதனை வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் கொடுத்தால் போதும்.

🐄 மாடுகளுக்கு அடர்த்தீவனம் கொடுக்கும்போது தானியங்களான  (மக்கா சோளம் கம்பு, கேழ்வரகு , பாசி பயிறு) நான்கில் ஒரு பங்கை பச்சையாக 12 மணி நேரம் ஊற வைத்து அரைத்து மாடுகளுக்கு கொடுக்க வேண்டும் இதனால் பாலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும்.

🐄 பச்சையாக கொடுக்கும் அடர்தீவனத்தின் அளவு மக்கா சோளம்5கிலோ, கம்பு 1கிலோ, கேழ்வரகு 3கிலோ, பாசி பயறு 1கிலோ இந்த அளவுகளில் கலந்து கொண்டு 500 கிராம் முதல் 1 கிலோ வரை பச்சையாக ஊறவைத்த அரைத்து கொடுக்க வேண்டும் .

நன்றி
அசோலா சதீஷ்குமார்