இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு

இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாடு
இயற்கை உழவாண்மையில் பன்னெடுங்காலம் பயணிக்கும் உழவர்களும், அமைப்புகளும், இளம் தலைமுறை உழவர்களும், சூழலியல் செயல்பாட்டாளர்களும், சமூக ஆர்வலர்களும், இணைந்து உருவாக்கியுள்ள கூட்டியக்கத்தின் முதல் மாநில மாநாடு, வரும் 2025 பிப்ரவரி மாதம் 15 ,16 நாட்களில் – ஈரோடு மாவட்டம், சித்தோடு பைபாசில் உள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் “இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு” என நடைபெற இருக்கிறது.

Continue reading

காயா மகோகனி

Khaya-senegalensis

*கயா* வகை மரங்கள் மகோகனி மரங்களை போன்ற வண்ணம் உடையதால் இவை ஆப்ரிக்கன் மகோகனி என்ற அடைமொழியில் அழைக்கப்படுகிறது. அதில் முக்கியமான மரம் காயா செனெகலென்சிஸ் ஆகும். தற்போது வணிக ரீதியில் தமிழகம் முழுவதும் பரவலாகப் வளர்க்கப்படுகிறது. காயா மகோகனி மரங்களை போதுமான இடைவெளியில் நட்டு வளர்க்கும்போது அகலக்குடை விரிக்கும், ஆண்டு முழுவதும் பசுமையான மரம். வறட்சி ஏற்பட்டால் மட்டும் இலை உதிர்க்கும். இது 15-30 மீட்டர் உயரம் வளரும், 10 வருடங்களிலேயே 1 மீட்டர் சுற்றளவு வளரும். காயா பேரினத்தில் K.senegalensis தரமான மரம், ஓரளவு கடினமானது. இதன் பூர்வீகமான மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிழல் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.

Continue reading

பாரம்பரிய விவசாயத்தில் களைக் கட்டுபாடு

பாரம்பரிய விவசாயத்தில் டன் கணக்கில் சாணஎரு பயன்படுத்துகிறோம். சாண எருவில் களைகளின் விதைகள் லட்சக் கணக்கில் உள்ளன. இவை ஆறு வருட காலம் வரை செயலற்ற நிலையில் உயிருடன் இருக்கக் கூடியவை, இதனால சாணஎரு போட்டுவிட்டால் களைகள் 6 வருடம் வரை வளருகின்றன.

Continue reading

மிளகாய் சாகுபடி சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க

முரணை

மிளகாய் சாகுபடியில் முரணை எனப்படும் இலைகளை கசங்கிய நிலையில் அல்லது மேல் பக்கமாக சுருண்டு இருக்கும் வகையில் மாற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க அல்லது நீக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம்

Continue reading

இயற்கை விவசாயி–1

பாகலையும் பீர்க்கனையும் ஒரே நேரத்தில் விதைத்தால், பாகற்கொடியப் பீர்க்கன் தூக்கி சாப்டுட்டு வளந்துடும்… அதனால மொதல்லய்யே பாகல விதச்சி கொடியேத்தி விட்டுட்டு அப்புறம் தான் பீர்க்கன விதைப்பேன்…’ என்று கொடியேற்றும் நுணுக்கத்தைச் சிரித்திக்கொண்டே எடுத்துச்சொன்னார்.

Continue reading