அசோலா படுக்கை / குட்டை – நேரிடையாக வெயிலில் பட கூடாது.
உங்களது ஜல்லிக்கட்டு காளை குளிப்பாட்டும் குளம் அநேகமாக வெயிலில் படும் அமைப்பில் இருக்கலாம், அசோலா வளர அதற்கு உணவு நாம் கொடுக்க வேண்டும். தழைசத்து அதற்கு தேவை ..
அசோலா அறுவடை செய்த பின் புதிய சாணம் 1கிலோ அல்லது மண்புழு உரம் ஒவ்வொரு வாரம் ஒரு முறை தொட்டில் இடவேண்டும்.
மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.
10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்.
அசோலா விதைகளை தவிர ஆறு மாத்த்திற்கு ஒரு முறை அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடு பொருட்களை இட்டு தயார் செய்ய வேண்டும்.