அறிவோம் நாட்டு மருந்தின் மகத்துவம்

வஜ்ஜிரவல்லி பிரண்டை pirandai
Agriwiki.in- Learn Share Collaborate
அறிவோம் நாட்டு மருந்தின் மகத்துவம்

மனிதனாக பிறந்த நீங்களும் நானும் நமது முன்னோர்களின் 3 தலைமுறையை பற்றியும் 30 நாட்டு மருந்துகளைப்பற்றியும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 40 வயதை தாண்டிய பலரும்

கால் வலி,
தோள் பட்டை வலி
கழுத்துவலி
மூட்டுவலி
முதுகு வலி
இடுப்பு வலி
மூட்டு வாதம்,
மூட்டு வீக்கம்
குதிகால் வலி
என இரவு பகல் தூக்கம் இல்லாமல் பலரும் அவதிபடுகின்றனர்

பலருக்கு முதுகுபகுதியில் வலி எந்த இடத்தில் என சொல்ல முடியாத அளவிற்கு மிகுந்த வலியால் வேதனைபடுவதைபடுகிறார்கள் இதில் பெண்கள்தான் பாவம் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

என்னதான் நவீன மருதுவம் வந்தாலும் எலும்பு தேய்மானத்தை எந்த நவீனத்தாலும் கண்டிப்பாக குணபடுத்த முடியாது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்

முதுகுவலி
கை கால் வலி தொடர்பாக பலரும் பல லட்சங்களை மருத்துவமனையில் கொட்டியும் இன்னும் வலியுடன் வாழ்க்கையை நகத்துகின்றனர் வலியுடன் வேதனையாய் நடைபிணமாய்

என்னதான் தைலம் எண்ணெய் இருந்தாலும் அதன் பயன் சில மணி நேரம் மட்டுமே பரிபூரணமாக வலியை குணப்படுத்த முடியாது தைலத்தால்

இப்ப உள்ள பல பெண்களுக்கு சுக பிரசவம் என்பது இல்லை அதைவிட மனதளவிலும் உடல் அளவிலும் நிறைய பிரச்சனைகளை பெண்கள்தான் சந்திக்கின்றனர் பணிச்சுமையால் பெண்கள்தான் கழுத்துவலி இடுப்பு என பாதிக்கப்படுகின்றனர்

நாட்டு மருந்து ரசம்தான் மிக சிறந்த தீர்வு

முற்றிய பிரண்டை 3 துண்டு
மிளகரனை செடியின் சின்ன குச்சி 3 பீஸ்
கொடிவல்லி செடியின் வேர் கொஞ்சம்
முடக்கத்தான் தண்டு 3 பீஸ்
பெருமருந்து செடியின் குச்சி 3 துண்டு
கண்டதிப்பிலி குச்சி 3 சின்னதாய் 3 பீஸ்
தூதுவளை குச்சி 3 துண்டு

இவைகளுடன் சீரகம் சோம்பு மிளகு இவைகளை பதமாக அம்மியில் வைத்து இடித்து நம் வீட்டில் எப்போதும் போல வைக்கும் ரசம்போல கொதிக்க வையுங்கள்

மிகுந்த மணத்துடன் மிக காட்டமாகவும் இருக்கும்
மாதம் 2 முறை இந்த ரசத்தை குடித்துவந்தால் தலைமுறைக்கும் எலும்பு தொடர்பான எந்த பாதிப்பும் கண்டிப்பாக வராது இந்த ரசத்தை ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் வருடம் 6 முறையாவது அவசியம் ரசம் வைத்து குடியுங்கள் வளமான தலைமுறையை உருவாக்குங்கள்

நஞ்சில்லாத நாளைய அறிவான தலைமுறையை உருவாக்குவோம்
தமிழ் தமிழர் கலாச்சாரம் போற்றிடுவோம்

எழுத்தாக்கம்
கீரமங்கலம் சிகா
9047357920