ஆடிப்பட்டம் விளைச்சலை பெருக்கும்

ஆடிப்பட்டம் விளைச்சலை பெருக்கும்
Agriwiki.in- Learn Share Collaborate

விளைச்சலை பெருக்கும் ஆடிப்பட்டம்

🌾 வேளாண்மை செய்யும் விவசாயிகள் அனைவரும் ஒவ்வொரு பருவநிலையையும், காலநிலையையும் எதிர் நோக்கி காத்திருப்பார்கள்.

🌾 ஏனெனில் சரியான பருவ நிலை விளைச்சலுக்கு ஏற்றது. அவ்வகையில் தமிழ் மாதங்களான 12 மாதங்களும், விளைச்சலை சிறப்பிக்கும் வகையில் பல பழமொழிகள் உண்டு.

‘ஆடிப்பட்டம் தேடி விதை”, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்”, ‘புரட்டாசியில் மண் உருக மழை பெய்யும், பொன் உருக வெயில் காயும்” என்று தமிழ் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் பழமொழிகள் உள்ளன.

🌾 இந்த வகையில் விவசாயத்திற்கு பல நன்மைகளைத் தரும் ஆடி மாத சிறப்பு பழமொழிகளை காண்போம்.

ஆடிப்பட்டம் தேடி விதை:

🌾 ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடியில் விதைத்தால்தான் பின் மழை பொழிந்து பயிர் நன்றாக செழித்து வளரும்.

🌾 அத்துடன் பிராணவாயும், ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் உள்ள ஆடி மாதத்தில் விதையை விதைப்பார்கள். இதனால் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவாயிற்று.

🌾 இந்த ஆடிமாதத்தில் தானியங்கள், சோளம், அவரை விதை, கத்தரி விதை, பு சணி விதைகளை விதைப்பார்கள்.

ஆடி காற்றில் அம்மையும் பறக்கும்:

🌾 அம்மை நோய்கள் அதிக வெப்பத்தின் காரணத்தால் ஏற்படுகிறது. ஆடி மாதத்தில் அதிகப்படியான குளிர்காற்று வீசுவதால் அம்மை நோய் பறந்து விடும் என்பது உண்மை. இதனையே ஆடி காற்றில் அம்மையும் பறக்கும் எனக்கூறியுள்ளனர்.

ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழைப்பெய்யும்:

🌾 ஆடி மாதத்தில் பருவக்காற்று அதிகபடியாக வீசும்போது ஐப்பசி மாதம் நல்ல மழை பெய்யும் என்பதே இப்பழமொழியின் சிறப்பாகும்.

ஆடிக்கூழ் அமிர்தமாகும்:

🌾 ஆடி மாதத்தில் வழங்கப்படும் கூழ் என்பது உடலுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக உள்ளது.

🌾 இவ்வாறு ஆடி மாதம் விவசாயிகளுடன் இணைந்துள்ளது.

🌾 ஆடிமாதத்தில் விளைவிக்க வேண்டிய பயிர்களை உரிய காலத்தில் விளைவித்து விளைச்சலை பெருக்கிடுவோம் வாருங்கள்…