ஆடுகளில் குடற்புழு நீக்கம்

ஆடுகளில் குடற்புழு நீக்கம் goat-agriwiki
Agriwiki.in- Learn Share Collaborate
ஆடுகளில் குடற்புழு நீக்கம் :

ஆடுகளைத் தாக்கும் நோய்களில் குடற்புழு நோய்கள் மிக முக்கியமானதாக இருப்பதால், ஆடுகளின் உற்பத்தி திறன் குறைவால் ஏற்படும் இழப்பை தவிர்க்க, தகுந்த காலத்தில் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது இன்றியமையாதது ஆகும்.

நோய் காரணிகள் :

1. தட்டைப் புழுக்கள்

2. நாடாப் புழுக்கள்

3. உருளைப் புழுக்கள்

குடற்புழு நோயின் அறிகுறிகள் :

1. பாதிக்கப்பட்ட ஆடுகளின் வயிறு பெருத்து பானை போல் இருத்தல்

2. உடல் எடை குறைந்து மெலிதல்

3. கீழ் தாடையில் வீக்கம் ஏற்படுதல்

4. வயிற்றுப்போக்கு

5. இரத்த சோகை ( கண்ணின் உள் இமை வெளிறி காணப்படுவது)

குடற்புழு நோயினால் ஏற்படும் பாதிப்புகள் :

1. ஆடுகளின் தீவன மாற்றும் திறன் குறைதல்

2. ஆடுகளின் இறைச்சி, உரோமம், பால் உற்பத்தித் திறன் குறைதல்

3. ஆடுகள் இறப்பதால் ஏற்படும் கடும் பொருளாதார இழப்பு

ஆடுகளுக்கான குடற்புழு நீக்க அட்டவணை :

1. பொதுவாக 3 மாத இடைவெளியில் ஒரு வருடத்திற்கு நான்கு முறை ( குறைந்த பட்சம் வருடத்திற்கு இரு முறை மிக அவசியம்)

(குடற்புழுக்களின் வாழ்க்கைச் சுழற்சி (பெரும்பாலும்) 14- 21 நாட்கள் ஆகும். ஆகவே, குடற்புழு நீக்கம் செய்த 3 வாரகளிலேயே ஆடுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.)

2. பருவ மழை தொடங்கும் முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்கு பின்னால் இரு முறையும்.

(தவிர பருவ மழைக்காலம் முடிந்தவுடன் ஆடுகளுக்கு நத்தை மூலம் பரவும் ‘ஆம்பிஸ்டோமோசிஸ்’ மற்றும் கல்லீரல் தட்டைப் புழு நோய்களைத் தடுப்பதற்கு)

ஜனவரி – மார்ச் – தட்டைப் புழுக்கான மருந்து

ஏப்ரல் – ஜுன் – உருளை/ நாடாப் புழுக்கான மருந்து

ஜுலை – செப்டம்பர் – தட்டைப்புழுக்கான மருந்து

அக்டோபர் – டிசம்பர் – உருளை/ நாடாப்புழுக்கான மருந்து

கவனத்தில் கொள்ள வேண்டியது :

ஒரே மருந்துகளைப் பயன்படுத்தாமல் மருந்துகளை சுழற்சி முறையில், ஆடுகளின் வகை மற்றும் உடல் எடைக்கேற்ப சரியான அளவில் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுதுவதன் மூலம், குடற்புழு நீக்க மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத் தன்மையினை புழுக்கள் பெறாமல் தடுக்க இயலும்.

சினையாக உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய FENBENDASOL என்ற மருந்தினை பயன்படுத்தலாம்.
இம்மருந்து கருவை பாதிக்காது.
மிகவும் பாதுகாப்பானது.