இயற்கைக்கு திரும்புவோம் BACK TO NATURE
நமது நோக்கம் இரசாயன உரங்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அஹிம்சையும், பல்லுயிர்களை பாதுபாப்பதும், கிராம மாதிரிகளை உருவாக்குவதும் ஆகும், இதுவே சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய இயக்கத்தின் நோக்கமாகும்.
அண்ணா ஹசாரே ஐயா அவர்கள் ராஜகன் சிந்தி என்ற அவரது கிராமத்தை ஒரு மாதிரி கிராமமாக உருவாக்கிள்ளார். நான் கிராமத்திற்கு சென்று பார்த்த போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த கிராமத்திற்கு பல நிறுவனங்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கிறது, அரசாங்க நிதியின் மூலம் அந்த கிராமம் வளர்ந்துள்ளது.
நான் கேட்பது அரசாங்கத்தின் நிதியை வைத்து எல்லா கிராமங்களையும் எப்படி வளர்ப்பது? இந்த முறையால் இந்தியாவில் உள்ள எல்லா கிராமத்தையும் மாற்ற முடியுமா?
நாம் ஒரு வாசகம் வைத்துக்கொள்வோம், கிராமத்தின் பணம் வெளியே போகாது, நகரத்தின் பணம் கிராமத்திற்கு வரவேண்டும் என்பதுதான் கிராமத்திற்கு சுயசார்பைக் கொடுக்கும். தேவையில்லாத பொருட்களின் பயன்பாட்டை நிறுத்தும் போதுதான் இது சாத்தியம்.
கிராமம் முழுக்க இயற்கை விவசயாத்திற்கு மாறும்போது வெளிபொருட்களை வாங்க மாட்டார்கள். *கிராமிய மேம்பாடு மற்றும் விவசாயம் என்பது வெவ்வேறு அல்ல*
நீங்கள் யாரேல்லாம் உங்கள் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்ற விரும்புகிறீர்கள். நீங்கள் அப்படி செய்யும்போது கிராம சபை, கிராம பஞ்சாயத்து, சமுகசேவை அமைப்புகளிடம் சென்று நமது தகவலை சொல்ல வேண்டும்.
எனது புத்தகங்களை படிக்கச் சொல்ல வேண்டும். மாதிரிப் பண்ணைகளை பார்வையிட வைக்க வேண்டும், அப்போது உடனடியாக நமது முறைக்கு மாறுவார்கள்.
இதற்கு முதல் தேவை இளைஞைகள் எந்த தொழிலில் இருந்தாலும் வாரம் ஒரு நாள் இந்த செயலுக்காக வேலை செய்யவேண்டும். விவசாயிகளுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையே சந்திப்புகளை ஏற்பட்டுத்த வேண்டும்.
இரண்டாவது தேவை நமது ஆன்மிக விவசாயம் குறித்த தெளிவு வேண்டும். ஜீவாமிர்தம் என்பது ஒரு உரம் இல்லை, இது வளர்ச்சி ஊடகம் மட்டும்தான், இது ஆர்கானிக் உரமோ அல்லது வேறு பெயர்களால் சொல்லப்படும் உரமோ கிடையாது என்ற தெளிவு வேண்டும்.
உங்கள் கிராமத்தில் இதை செயல்படுத்த முயற்சிக்கும் போது மற்றவர்கள் எது சொன்னாலும் உங்களுக்கு இந்தத் தெளிவு வேண்டும், பொறுமை வேண்டும். உங்கள் மனம் தளரக்கூடாது, உங்கள் மனம் ஸ்திரமாக இருக்க வேண்டும், இப்படி இருந்தால் இந்த போரில் வன்முறை இல்லாமல் நீங்கள் ஜெயிக்க முடியும்.
வாழ்த்துக்கள் நண்பர்களே
*இயற்கைக்கு திரும்புவோம்* *(BACK TO NATURE)*
*சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி*