இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்க

உடனடியாக தயாரிக்க  இயற்கை இடுபொருட்கள் 

*மாடுகள், ஆடுகள் வாங்க தற்சமயம் முதலீடு செய்ய இயலாத இயற்கை விவசாயிகள் என்னென்ன இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்கலாம்?*

உடனடியாக தயாரிக்க  இயற்கை இடுபொருட்கள்

*A. வளர்ச்சி ஊக்கிகள்*

1. செயலூக்கம் செய்யப்பட்ட இ.எம்.
2. மேம்படுத்தப்பட்ட மீன் அமிலம்
3. புண்ணாக்கு கரைசல் (கடலை, வேம்பு)
4. தேமோர்க் கரைசல் (மோர் மட்டும் மற்ற விவசாயிகளிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம்)
5. பழக்கரைசல் (அதிகம் பழுத்த மற்றும் அழுகிய பழங்கள்)
6. மண்புழு உரம் (பொருளாதாரம் இடம் கொடுத்தால்)
7. முட்டை – வெங்காயக் கரைசல்
8. மண்ணை வளப்படுத்த – பல தானிய விதைப்பு

 

*B. பயிர்ப் பாதுகாப்பு*
9. 3G கரைசல் (இஞ்சி, பூண்டு, மிளகாய்)
10. பொன்னீம் கரைசல்(வேப்பெண்ணெய், புங்கன் எண்ணெய், காதி சோப்பு)
11. தொழில்நுட்ப முறைகள் – விளக்குப் பொறிகள், இனக் கவர்ச்சிப் பொறிகள், ஒட்டும் அட்டைகள், ஒட்டுண்ணிகள்.
12. நுண்ணுயிரிக் கட்டுப்பாடு(Bio control)
13. நுண்ணுயிர் உரங்கள் மற்றும் பாதுகாப்பு

*குறிப்பு*: இத்தனை வழிமுறைகள் இருந்தாலும், எவ்வளவு விரைவில் விவசாயியால் ஒரு நாட்டு மாடு வாங்க முடியுமோ, அந்த அளவிற்கு இயற்கை விவசாயம் தற்சார்புடன் எளிதாகும். பண்ணையில் பல்லுயிர் சூழல் மேம்படும்.
வாழ்த்துக்கள்.

– ஜேக்கப் சத்தியசீலன்
செவன்த் ஹெவன் ஆர்கானிக் ஃபார்ம்ஸ்
தாளவாடி, ஈரோடு மாவட்டம்

One Response to “இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்க”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *