இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு

தமிழ்நாட்டில் இயற்கை உழவர்கள் ஒன்றிணையும் மாபெரும் மாநில மாநாடு

இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாடு

இடம்: டெக்ஸ் வேலி வளாகம் Tex Valley, சித்தோடு பைபாஸ் சாலை, ஈரோடு
நாள்: பிப்ரவரி 15, 16 – இரண்டு நாட்கள்
நிகழ்வு ஏற்பாடு: தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம்

இயற்கை உழவாண்மையில் பன்னெடுங்காலம் பயணிக்கும் உழவர்களும், அமைப்புகளும், இளம் தலைமுறை உழவர்களும், சூழலியல் செயல்பாட்டாளர்களும், சமூக ஆர்வலர்களும், இணைந்து உருவாக்கியுள்ள கூட்டியக்கத்தின் முதல் மாநில மாநாடு, வரும் 2025 பிப்ரவரி மாதம் 15 ,16 நாட்களில் – ஈரோடு மாவட்டம், சித்தோடு பைபாசில் உள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் “இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு” என நடைபெற இருக்கிறது.

மாநாடு சிறப்புற நடைபெற உழவர்களுடன் நுகர்வோர்களாகிய நீங்களும் கலந்துகொண்டு உங்கள் அனைவரின் ஆதரவையும் வழங்க வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.

மாநாடு நிகழ்வுகள்

1. தேசிய ஆளுமைகளின் உரைகள், கருத்தரங்குகள்.
2. நிலைத்து நீடித்த இயற்கை வழி உழவாண்மையில் வெற்றிகரமான உழவர்களின் அனுபவப் பகிர்வு.
3. மரபணு மாற்றப்பட்ட விதைகளின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு அமர்வு.
4. உணவு பாதுகாப்பு உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் அரசுக்கான வழிகாட்ட நெறிமுறைகள்.
5. தகவல் அறியும் உரிமை சட்டம், கிராம சபை, உள்ளாட்சிகளின் அவசியம்.
6. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த உரைகள், மாற்று வழிமுறைகள்.
7. தமிழ்நாடு முழுவதும் உள்ள அமைப்புகளின் கலந்துரையாடல், அனுபவப் பகிர்வு.
8. அடுத்த 10 ஆண்டுகளுக்கு உண்டான செயல் திட்டங்கள் உருவாக்கம்.
9. அரசுக்கு மாநாடு வாயிலாக பிரகடனம் வலியுறுத்துவது.
10. ஒருங்கிணைந்த முன்மாதிரி இயற்கை உழவாண்மை பண்ணைகளை பயிற்சி மையங்களாகவும் உழவாண்மை சுற்றுலாவுடன் இணைப்பது.

காட்சியகங்கள்

•⁠ ⁠இயற்கை உழவாண்மையில் உழவர்களின் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தல்.

•⁠ ⁠பாரம்பரிய நெல், காய்கறி விதைகள், கிழங்குகள் காட்சிப்படுத்துதல்.

•⁠ ⁠உழவாண்மையில் எளிய உழவுக் கருவிகளின் பயன்பாடு மற்றும் கண்காட்சி.

•⁠ ⁠கைவினைப் பொருட்கள் கண்காட்சி.

விற்பனை அரங்குகள் :

1. பாரம்பரிய விதைகள், கிழங்குகள், நெல் ரகங்கள் விற்பனை மற்றும் மரபு விதை பகிர்வு.
2. இயற்கை உழவாண்மையில் விளைந்த விளைப் பொருட்கள் விற்பனை அரங்குகள்.
3. வீட்டு பயன்பாட்டுக்கு தேவையான தற்சார்பு பொருட்களின் விற்பனை, பயன்பாடு.
4. இயற்கை ஆடைகள் விற்பனை.
5. பனை, தென்னை கைவினைப் பொருட்கள் விற்பனை.

இயற்கை உணவு :

•⁠ ⁠பாரம்பரிய சுவையில் இயற்கை உணவு திருவிழா.

தமிழகத்தின் இயற்கை உழவாண்மை சார்ந்து பயணிக்கும் அனைத்து குழுக்களும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் கலந்து கொள்கின்றனர் .

இந்த மாபெரும் முன்னெடுப்பிற்கு அனைவரும் ஒன்று திரண்டு வாரீர்!!

நன்கொடை

மாநாட்டுக்கான நிர்வாகச் செலவு உழவர்களை ஒருங்கிணைத்தல், அவர்களுக்கான உணவு மற்றும் இதர ஏற்பாடுகள் போன்ற அறப்பணிகளில் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பை அளித்து இயற்கை உழவாண்மையையும் பல்லுயிர்களுக்குமான உணவு பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுகிறோம்.

வாங்கி கணக்கு :
Thondaimandalam Foundation
Current Account No: 602705042457
Bank: ICICI Bank
Branch: Annanagar
IFSC: ICIC0006027

UPI ID: thondaimandalamfoundation.9840904244.ibz@icici

ஒருங்கிணைப்பு:

தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம்

தொடர்புக்கு:

வெற்றிமாறன்.இரா : 9566667708

ஐந்துணை வேலுச்சாமி : 9842853068

ஹிமாகிரன் : 9840904244

இயல் கார்த்திக் : 9865290870

சீரகம் கௌரி : 8072232778

விஷ்ணு பிரியன் : 9080141074

Email: [email protected]

Facebook : www.facebook.com/TNOFFSConference

Instagram : https://www.instagram.com/TNOFFSConference

Twitter : https://www.twitter.com/tniukofficial

Youtube : https://www.youtube.com/@tniukofficial

#tniuk #tniukconference2025