இயற்கை முறையில் எள்ளு, சிறுதானியம் சாகுபடி (80-85 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை
இலக்கு:
ஒரு ஏக்கருக்கு
எள்ளு. – 370 கிலோ
சாமை. -. 630 கிலோ
பனிவரகு – 1240 கிலோ
ராகி. – 1000 கிலோ
வரகு. -. 720 கிலோ
குதிரைவாலி. – 1060 கிலோ
அடியுரமாக ஒரு ஏக்கருக்கு
4 டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம்,
2 கிலோ சூடோமோனஸ்,
2 கிலோ பாஸ்போபாக்டீரியா
75 கிலோ சாம்பல்
50 கிலோ வேப்பம் புண்ணாக்கு
2 கிலோ வாம்
கொடுப்பது நல்லது.
வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை
3 மூன்றாம் நாள்
உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம்.
5 ம் நாள்
E.M 200 ml per 10 liter tank காலையில் spray செய்யவும்.
மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 1 லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும்.
10 ம் நாள்
கற்பூர கரைசல் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம்.
15 ம் நாள்
பஞ்சகாவியா 200 ml per 10 liter tank spray செய்யவும் .
தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் கொடுக்கலாம்.
20 ம் நாள்
கற்பூர கரைசல் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம்.
25 ம் நாள்
ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும்.
30ம் நாள்
கற்பூர கரைசல் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம்.
34 ம் நாள்
பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கரைசல் கலந்து மாலையில் தெளிக்க லாம்.
மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும்.
40 ம் நாள்
10 லிட்டர் டேங்க்கு 500 மில்லி தேமோர் கரைசல் அல்லதுபஞ்சகாவியா 200 ml per கலந்து தெளிக்கலாம்.
ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும்.
46 ம் நாள்
கற்பூர கரைசல் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம்.
50 ஆம் நாள்
10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி சூடோமோனாஸ் கலந்து தெளிக்கலாம்.
தரைவழி ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் மற்றும் 2 லிட்டர் மீன் அமிலம் பாசனத்துடன் கொடுக்கலாம்.
58 ம் நாள்
மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும் .
தரைவழி ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம்.
66 ம் நாள்
கற்பூர கரைசல் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம்.
ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும்.
72 ஆம் நாள்
தரைவழி ஒரு ஏக்கருக்கு 3 கிலோ பாஸ்போ பாக்டீரியா தரைவழி பாசனத்துடன் தரவும் அல்லது ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம்.
78 ம் நாள்
மீன் அமிலம் (75 ml per 10 liter tank spray) செய்யவும் .
ஒவொரு முறை நீர் பாய்ச்சும் போதும் 1 ஏக்கருக்கு
அமிர்தக்கரைசல் ஒரு 100 லிட்டர்,
ஜீவாமிர்தம் 200 லிட்டர்,
மீன் அமிலம் 2 லிட்டர்,
WDC 25 லிட்டர்
என ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்க வேண்டும்..
இயலுமானால் சாகுபடிக்கு முன்பு பல தானிய விதைப்பு அல்லது பசுந்தாள் உரம் செய்து 40 to 45 கழித்து மடக்கி ஓட்டி உழவு செய்தால் இன்னும் சிறப்பு.. களை கட்டுப்படும்.
நிலத்தின் நீர் கொள்ளும் தன்மைக்கேற்ப அதிக நாள் இடைவெளியுடன் குறைந்த அளவு தண்ணீரை காலை நேரத்தில் பாய்ச்சுவது நல்லது.
பிரிட்டோ ராஜ்