தென்னைக்கு இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் :
1வது நாள் : ஒரு மரத்திற்கு 10 மில்லி சூடோமோனஸ் தரைவழி தண்ணீர் வழி தரவும்.
2 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும்.
7 வது நாள்: ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் எருக்கு கரைசல் தரைவழி தரவும்.
9 வது நாள் : ஒரு மரத்திற்கு 20 மில்லி மீன் அமிலம் பாசனத்துடன் தரவும்.
16 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும்.
23 வது நாள்: ஒரு மரத்திற்கு 20 மில்லி இ. எம் கரைசல் பாசனம் வழி தரவும்.
25 வது நாள்: ஒரு மரத்திற்கு கடலை புண்ணாக்கு கரைசல் 3 லிட் அல்லது கோமியம் 200 ml அல்லது 50 கிராம் பாஸ்போ பாக்டீரியா வீதம் தரைவழி தரவும்.
பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்டத் தென்னைக்கு*
*3 மாத பராமரிப்பு:*
1. தரைவழி மரத்திற்கு 20 கிராம் சூடோமோனாஸ் அல்லது விரிடி தரைவழி தரவேண்டும்.
2. வட்டப்பாத்தியில் மரத்திற்கு அரைக் கிலோ வேப்பம்புண்ணாக்கு வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
3.வட்டப்பாத்தியில் மரத்திற்கு 5 கிலோ காய்ந்த தொழுவுரம் அல்லது 2 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
4. புதுப்பாளை விடவோ அல்லது குரும்பை உதிராமலிருக்க அல்லது காய் பெருக்க போரான் சத்து கொடுக்கலாம். எருக்கு கரைசலை தரலாம்.
5. தோகையில் உள்ள கசடுகளை நீக்கலாம்,
6. 2 கிலோ வேப்பம்புண்ணாக்குடன் 2 கிலோ நிலத்தின் மண்ணை நன்கு கலந்து தென்னையின் தோகைகளுக்குள் போட்டு விட வேண்டும், இது அவசியம்.
மண் உப்பாகவோ (PH 7.5க்கு மேல்) தண்ணீர் சப்பையாக உப்பாக( TDS 500க்கு மேல்) இருந்தால் தரைவழி மரத்திற்கு இ.எம் கரைசலை 20 மி.லிட் வரை ஒவ்வொரு பாசனத்தின் போதும் தரலாம்.
*பாசனம்*
மரத்திற்கு பொதுவாக 80 லிட் தண்ணீர் தருவது நலம். குறைந்தபட்சம் 15-20 லிட் களாவது தரவேண்டும். அதனுடன் இயற்கை இடுபொருள் குறைந்தபட்சமாவது கலந்து தரவேண்டும்.
*மூடாக்கு* முக்கியம்.குறைந்த தண்ணீர்,இடுபொருள் இருந்தாலும் மூடாக்கு இருப்பது நல்ல பெரிய பலன் தரும்