இயற்கை முறையில் மரவள்ளி பயிர்

Agriwiki.in- Learn Share Collaborate

இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் மரவள்ளி பயிர் செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை

அடியுரமாக ஒரு ஏக்கருக்கு ஐந்து டிராக்டர் லோடு மக்கிய தொழு உரம் அல்லது ஒரு டிராக்டர் லோடு ஊட்டம் ஏற்றிய தொழு உரம்.

வளர்ச்சி ஊக்கி அட்டவணை

அடி உரம்
200 லிட்டர் ஜீவாமிர்தம்
2 லிட்டர் பாஸ்போ பாக்டீரியா
2 லிட்டர் சூடோமோனாஸ்
1 லிட்டர் பேசிலோமிசஸ்
1 லிட்டர் பொட்டாஷ் மோபிலிசிங் பாக்டீரியா
ஒரு லிட்டர் மெட்டாரைசியம்

கலந்து நிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் படுமாறு பாசனத்துடன் கலந்து விடவும்.

3 மூன்றாம் நாள்
10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி+ 100 மில்லி பஞ்சகாவியா சூடோமோனஸ் தெளிக்கலாம். தரைவழி ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் கொடுக்கலாம்.

பல தானிய விதைப்பு – தழைசத்து மற்றும் களைகளை கட்டுப்படுத்தும்

15 ம் நாள்
நடவு மற்றும் கட்டைக்கு ஜீவாமிர்தம் 200 லிட்டர் ஏக்கருக்கு தரைவழி கொடுக்கலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இ.எம் கரைசல் இலைகள் மேல் தெளிக்கலாம்.

30 ம் நாள்
கியூமிக் 5 லிட்டர் தரைவழி ஏக்கருக்கு கொடுக்கலாம்.
பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இ.எம் கரைசல் இலைகள் மேல் தெளிக்கலாம்.

45 ம் நாள்
மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 3 லிட்டர் அல்லது 200 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி தரலாம்.
பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இ.எம் கரைசல் இலைகள் மேல் தெளிக்கலாம்.

60 ம் நாள்
EM ஒரு லிட்டர்
ஏக்கருக்கு தரைவழி தரலாம்.
பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இ.எம் கரைசல் இலைகள் மேல் தெளிக்கலாம்.

75 ம் நாள்
வேஸ்ட்டிகம்போசர் + 1 லிட்டர் இ. எம் தரை வழி கொடுக்கலாம்.

90 ம் நாள்
வேம்பிளஸ் ஒரு லிட்டர் + 3 லிட்டர் மீன் அமிலம் தரை வழி கொடுக்கலாம்.
பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இ.எம் கரைசல் இலைகள் மேல் தெளிக்கலாம்.

105 ம் நாள்
பஞ்சகவ்யா ஒரு ஏக்கருக்கு மூன்று லிட்டர் தரைவழி கொடுக்கலாம்.

120 ம் நாள்
ஜீவாமிர்தம் 200 லிட்டர் + 2 லிட்டர் பாஸ்போபாக்டீரியா தரை வழி கொடுக்கலாம்.
பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இ.எம் கரைசல் இலைகள் மேல் தெளிக்கலாம்.

135 ம் நாள்
கியூமிக் 5 லிட்டர் தரைவழி கொடுக்கலாம். 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி பவேரியா பேசியானா+ ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கலாம்

150 ம் நாள்
மீன் அமிலம் மூன்று லிட்டர் + 2 லிட்டர் பொட்டாஷ் மோபிலிசிங் பாக்டீரியா அல்லது 60 கிலோ சாம்பல் தரைவழி கொடுக்கலாம்.

165 ம் நாள்
EM ஒரு லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.

180 ம் நாள் 180 லிட்டர் தண்ணீருடன் 20 லிட்டர்
வேஸ்டிகம்போசர் + அரை லிட்டர் பஞ்சகாவ்யா தரை வழிதரலாம்.

195 ம் நாள்
வேம்பிளஸ் ஒரு லிட்டர் + 2 லிட்டர் மீன் அமிலம் கலந்து பாசனம் வழி ஏக்கருக்கு கொடுக்கலாம்.

210 ம் நாள்
பஞ்சகவ்யா மூன்று லிட்டர்+ 2 லிட்டர் பொட்டாஷ் மோபிலிசிங் பாக்டீரியா அல்லது 60 கிலோ சாம்பல் கலந்து ஒரு ஏக்கருக்கு தரைவழி தரவும்.

225 ம் நாள்
ஜீவாமிர்தம் 200 லிட்டர் ஒரு ஏக்கருக்கு தரை வழி கொடுக்கலாம்.

240 ம் நாள்
கியூமிக் 5 லிட்டர் தரைவழி ஏக்கருக்கு கொடுக்கலாம்.

255 ம் நாள்
மீன் அமிலம் மூன்று விட்டர் +ஒரு லிட்டர் பொட்டாஷ் மொபைலை சிங் பாக்டீரியா அல்லது 60 கிலோ சாம்பல் தரை வழி கொடுக்கலாம்.

270 ம் நாள்
EM ஒரு லிட்டர் ஒரு ஏக்கருக்கு தரை வழி கொடுக்கலாம்.

285 ம் நாள் 180 லிட்டர் தண்ணீருடன் 20 லிட்டர்
வேஸ்ட்டிகம்போசர் + 2 லிட்டர் பாஸ்போபாக்டீரியா தரை வழி கொடுக்கலாம்.

ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை கற்பூரகரைசல் 10 லிட்டருக்கு 100 மில்லி அல்லது அக்னி அஸ்திரம் 500 மில்லி அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் 500 மில்லி கலந்து ஒட்டும் திரவத்துடன் பயிர்களின் மேல் தெளிக்கலாம்.

இந்த நாட்களுக்கு இடையில்
நீர் பாய்ச்சும் போதும் அமிர்தக்கரைசல் தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.