இயற்கை முறையில் கத்தரி சாகுபடி
😥 நம் அன்றாட உணவில் அதிகமாக பயன்படுத்தும் காய்கறிகளில் முதன்மை யானது கத்தரி. இதில் பல வகை உண்டு.
😈சாதாரணமாக தை .சித்திரை மற்றும் ஆடி ஆகிய பட்டத்தில் நடவு செய்கின்றனர்.
🐰முப்பது நாள் நாற்று நடலாம். நாற்றங்கால் ல் தொழு உரம் அதிகமாக இடுவதன் மூலம் நீளமான வேர்கள்.விரைவில் நாற்று துளிர் விடும்.
😕இடைவெளி 3 × 3 நடவு செய்வது சிறப்பு
😊பத்து டன் தொழுஉரம் ஏக்கர் க்கு. சூடோமோனஸ் .டிரைகோடர்மா விரிடி.அசோஸ்பைரில்லம்.பாஸ்போபாக்டீரியா.ஜிங்க்மொபலைசர்.பொட்டாஷ் பேக்டீரியா தலா மூன்று லிட்டர். VAM 10 kg.இவை அடி உரம்.
☺இரண்டு மாதம் கழித்து மறுபடி ஒரு முறை இவற்றை பயன்படுத்தலாம்.
😦மேம்படுத்தப்படஜீவாம்ருத கரைசல் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இது தான் உரம் அதாவது இயற்கை முறையில் சாகுபடிக்கு.
😇அதாவது உயிர் உரங்கள் செடி நடவு செய்யும் முன் ஈரத்தில். இடவேண்டும.
😤நுனி தண்டு துளைப்பான்.காய்புழு.அசுவினி. வேர் அழுகல். இவை அதிகம் தாக்கும் நோய்கள்.
😨கற்பூரகரைசல் மற்றும் மீன் அமிலம் இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது மூலம் கட்டுப்படுத்தலாம்.
😬தண்ணீர் அதிகமாக தேங்குவது வேர் அழுகல் வர வாய்ப்பு அதிகம்.
😀 நட்ட இருபதாம் நாள் தேவைப்பட்டால் நுனி கிள்ளி விடலாம். இதனால் அதிக கிளைகள் மற்றும் மகசூலை பெற வாய்ப்பு. இரண்டு நாள் ஒரு முறை காய் பறிக்கலாம்
😈தேங்காய் பால் பிண்ணாக்கு கரைசல் மற்றும் பழ கரைசல் தெளிப்பு மூலம் கவர்ச்சிகரமான காய்கள் பெறலாம்.
😀மீன் அமிலம் ஐந்து லிட்டர் ஒரு ஏக்கர் இருபது நாள் ஒரு முறை மண்புழு உரத்துடன் கலந்து இடலாம்.
😬மண்புழு உரம் தயார் செய்து பயன் படுத்தும் போது அதிக மகசூல் மற்றும் ஆயுள் நீடிக்கும்.
😈 ஊடுபயிராக செடி அவரை. முள்ளங்கி.சோம்பு பீட்ருட் நடலாம். கீரை களை கூட செய்யலாம்.அதாவது வரப்பு சுற்றிலும் புளிச்சகீரை நடலாம் அவற்றின் மேல் பொறியல் தட்டை கொடிகளை ஏற்றி விடலாம் அவை சத்து உறிஞ்சு வதால் அவற்றிற்கு சேர்த்து சத்து இடவேண்டும.
😃 இயற்கை வேளாண்மை காய்கறி உண்ணும் போது நாம் இளமையாக இருக்கலாம். அடுத்து பயிர் மகசூல் இரசாயண சாகுபடி விட இயற்கை சாகுபடி பயிர் ன் ஆயுள் ஐ அதிகப்படுத்தும்.
😯நன்றி. Sridhar Chennai