இலை கருகல் இலை புள்ளி துரு நோய்க்கு மற்றும் சாம்பல் நோய்
மிக எளிமையான தீர்வு இதற்கு உண்டு.
ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் எடுத்து அரை லிட்டர் நீரில் இட்டு மூன்று நிமிடம் கொதிக்கவிடவும். இதை 10 லிட்டர் நீரில் கலந்து வடிகட்டி தெளிக்கவும். தேவை இருந்தால் 6 பூண்டு பற்களின் விழுதை மஞ்சள் கரைசலை கொதிக்க வைத்து இறக்கும்போது சேர்க்கலாம்.
இது எல்லாவித இலையில் வரும் நோய்களான இலைக் கருகல், இலைப்புள்ளி, துருநோய், வெண்டையில் வரும் மஞ்சள் சாம்பல் நோய் போன்றவற்றிற்கு நல்ல தீர்வு தருகிறது.
4, 5 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
பூக்கள் பூப்பது, காய்கள் பிடிப்பது வளர்ச்சியூக்கி அடித்து கிடைக்கும் பலனைப் போல் இந்த கரைசல் பலன் தரும்.
நான் பூண்டு சேர்காத மஞ்சள் கரைசலையே பயன்படுத்துகிறேன்.
இது நம்பமுடியாததாகத் தோன்றும். தீர்வு இல்லாத வெண்டையின் மஞ்சள் சாம்பல் நோய்க்கு இது தீர்வு தருகிறது. இது என் அனுபவ பகிர்வு.
சோதனை முயற்சியாக ஒரு சிறு பகுதியில் உள்ள செடிகளுக்கு வேறு எதுவும் பயன்படுத்தாமல் இதை மட்டும் பயன்படுத்தி பார்க்கவும்.
நல்ல பலன் கிடைக்கும் பட்சத்தில் பரவலாக பயன்படுத்தவும்.
எந்த முறையில் நீங்கள் தீர்வு கண்டீர்கள் என்று உங்கள் அனுபவங்களை பின்னால் பகிரவும்.
Name:Maneri Bala Madurai
Mobile:+91 94433 04730
Mobile:+91 94433 04730