உம்பளச்சேரி மாடு

உம்பளச்சேரி காளை
Agriwiki.in- Learn Share Collaborate
உம்பளச்சேரி மாடு

இது ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களுக்கு சொந்தமான மாட்டினம்.  இது தற்போதைய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உம்பளச்சேரி என்னுமிடத்திலிருந்து எனும் கிராமத்தில் தோன்றியதால் இங்கு கிடைக்கும் உப்பல் அருகு எனும் புல்லினை மேய்ந்து வளர்ந்ததாலும் இப்பெயர் பெற்றது..இதன் பிறப்பிடம் தொடக்கத்தில் இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதியே.

இதன் மூதாதையர் இந்த டெல்டா மாவட்டங்களில் வலசை முறை மேய்ச்சலில் வளர்க்கப்படும் தஞ்சாவூர் வகையறா கிடை மாடுகளே, இதன் தாய் இனமான தஞ்சாவூர் வகையறா கிடை மாடுகளை போலவே அனைத்து குணங்களையும் பெற்றிருந்தாலும் இவற்றின் கொம்புகள் சரியான அமைப்பாக வளராது.

பெரும்பாலும் இம்மாட்டின் எருதுகளுக்கு கொம்புகளைத் தீய்த்து விடுகிறார்கள்.

காதுகளையும் குதிரைகளுக்கு இருபது போல அழகாக கத்தரித்து விடுவார்.

இது காது நாவெடை காது என்று அழைக்கப்படும்.

உம்பளச்சேரி பசுமாடு
உம்பளச்சேரி பசுமாடு

 

உம்பளச்சேரி காளை
உம்பளச்சேரி காளை

வெள்ளை நிற நெற்றிப்பொட்டு ,வெண்மை நிற வால்குஞ்சம்,இடுப்பில் மறை (தட்டு மறை),திமில் மறை(கொண்டை மறை),பூட்சு மறை(நான்கு காலிலும் மறை),வெங்குளம்பு(வெள்ளை நிறகுளம்பு) இவற்றின் அங்க அடையாளம்.

இது மானவுணர்வும் சுறுசுறுப்பும் வாய்ந்த மாடு. இதைப் பழக்குவது எளிதன்று. கடிப்பதும் உதைப்பதும் இதன் இயற்கை.

டெல்டா மாவட்டங்களின் கடுமையான உளை,சேறு நிறைந்த சேற்று வயல்களை உழுவதற்கு இந்த மாட்டு இனத்துடன் வேறு எந்த உள்நாட்டு மாடுகளும் போட்டி போட முடியாது. அதிகச் சுறுசுறுப்புற்றதுமான மாடு. இதற்குத் தீனிச் செலவும் குறைவு.

பசுக்கள் மிகுந்த தாய்ப்பாச பிணைப்பு கொண்டது. கன்றுகளை விட்டு பிரியாமல் இருக்கும் பால்மடி சிறுத்து காணப்படும். மடிப்பகுதி அடிவயிற்றோடு ஒட்டி காணப்படும். பால்காம்புகள் மிகச்சிறியதாக நல்ல இடைவெளி விட்டு காணப்படும்.