உயிர்ப்புடன் ஒரு மரபு கட்டுமானம்

உயிர்ப்புடன் ஒரு மரபு கட்டுமானம்
Agriwiki.in- Learn Share Collaborate
உயிர்ப்புடன் ஒரு மரபு கட்டுமானம்

மரபு கட்டுமானம் என்பது சூழல் சார்ந்த கட்டுமானப் பொருட்களை கொண்டு உயிர்ப்புடன் ஒரு கட்டுமானத்தை வடிவமைத்து தலைமுறை கொண்டாடும் மரபு வீடாக கட்ட வேண்டும்.

லாப நோக்கம்

இன்றைய சூழலில் அனைத்தும் பணமாகவும் பொருளாகவும் பார்க்கும் மனவோட்டத்தில் கட்டுமானத்தையும் இன்று வணிக நோக்கத்துடன் அணுகுகிறார்கள். அதை பயன்படுத்தி சிலர் கட்டுமானப் பொருட்களில் லாபம் அடைகின்றனர்.

வளங்கள் அழிப்பு

சிமென்ட், ஜல்லி, ஆற்று மணல், கம்பிகள் போன்ற உயிரற்ற ஒரு கட்டிடத்தை உயிர்வாழ  அமைப்பது எந்த வகையில் உத்தமம்?

இது போன்ற ஐரோப்பிய கட்டிட கலை நமது நாட்டு தட்பவெப்ப சூழலுக்கு ஒத்துவராத ஒன்று. இது போன்ற கட்டிடத்தால் நுரையீரல் தொற்றும் ஏற்படும்.

வீண் விரயம்

ஒருவர் 20ஆண்டுகாலம் லோன் வாங்கி ஒரு கான்கிரீட் வீட்டை வடிவமைத்தால் அந்த லோன் முடிவடையும் போது வீடும் சேதமாகிவிடும்.

ஒரு தலைமுறை கூட தாக்குபிடிக்காத இந்த கட்டிடம் எங்கே? 3-4 தலைமுறை தாங்கியும் கம்பீரமாக இருக்கும் நமது மரபு கட்டிடம் எங்கே…

உடல்நலக்குறைவு

ஆரம்பத்தில் மண் தரை இருக்கும்போது கூட ஆரோக்கியமாக தான் இருந்தோம். ஆனால் தற்போது இருக்கும் சிமென்ட் தரை அதன்பின் ரெட் ஆக்சைட் தரை பின் மொசைக் பின் கிரானைட் பின் டைல்ஸ் என மாற்றி அமைத்து மூட்டு வலி வந்தது தான் மிச்சம். வளங்கள் அழிப்பும் ஏராளம்.

இரும்பு மூங்கில்

ஒரு டன் இரும்பு கம்பிகள் உற்பத்தி ஆக 2டன் கரியமிலவாயுவை வெளியிடுகிறது. அதுவே ஒரு டன் மூங்கில் உற்பத்தியாக 2டன் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு உயுர்வளியை தந்தும் பயன் தருகிறது. அத்துடன் மூங்கில் கொண்டு கட்டபடும் வீட்டை இடி தாக்காது என்பர்.

ஐந்திணை

குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் என ஐந்திணைக்கும் வெவ்வேறு கட்டமைப்புகள் உள்ளன. கட்டுமான பொருட்கள் அந்த பகுதியை சார்ந்தவையாக இருக்க வேண்டும். அந்த சூழல் மண்ணை பயன்படுத்துவது சிறந்தது.

மரபு கட்டுமானத்தில் சுவர்கள் சுவாசிக்கும். அத்துடன் வெப்ப காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் மழை காலத்தில் மிதமான வெப்பத்துடனும் இருக்கும். பகல் நேரத்தில் மிதமான குளிர்ச்சியும் இரவு நேரத்தில் மிதமான வெப்பத்தையும் உணரலாம்.

இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

உங்கள் ஆதரவுடன் ஹரி
For Contact: 9865368997